சிறகடிக்க ஆசை: மனோஜ், ரோகிணி சதி திட்டத்தை வீடியோவாக வெளியிட்ட நடுவர்கள்.. மீனாவிற்கு பரிசு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி மற்றும் மனோஜ் போட்ட பிளான் எல்லாவற்றையும் நடுவர்கள் எல்லார் முன்பும் உடைத்திருக்கின்றனர். நாங்க தான் ஜெயிக்கப் போறோம் என்று நினைத்து கொண்டு இருந்த மனோஜும் ரோகிணியும் அவமானப்பட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. தற்போது அண்ணாமலை மற்றும் விஜயாவின் மூன்று மகன்களும், மருமகள்களும் ஜோடியாக போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஆரம்பத்தில் இருந்து முத்துவும் மீனாவும் தங்களுடைய மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே மனோஜும், ரோகிணியும் நாங்க தான் ஜெயிக்க போறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதோடு நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரும் தாங்கள் மட்டும்தான் சரியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு ஓவர் பில்டப் போடு பேசி பல்பு வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனாலேயே முத்துவும் மீனாவும் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று தெரிந்திருக்கும். ஏற்கனவே முத்து தான் மாடியில் ரூம் கட்ட வேண்டும் என்பதற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்த ஒரு லட்சம் அவருக்கு கிடைத்தால் இது முத்துவிற்கு பெரிய வெற்றியாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதுபோலவே தற்போது வெளியான ப்ரோமோவிலும் காட்சிகள் இருக்கிறது. அதாவது ஏற்கனவே மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. அதை தொடர்ந்து கடைசி சுற்றுக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் ஒரு திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன தேவை என்பதை பார்ட்னரிடம் டிஸ்கஸ் பண்ணிட்டு அதை இந்த மேடையில் வந்து சொல்லுங்க என்று நடுவர்கள் சொல்லி இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து தம்பதிகள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதை தொடர்ந்து மேடையில் அவர்கள் வந்ததும் உங்களுக்குள் சண்டை வந்தால் யார் முதலில் சாரி சொல்லுவாங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் மற்றும் ரோகிணி எங்களுக்குள் சண்டையே வந்ததே கிடையாது. நாங்க இதுவரைக்கும் சாரி என்ற வார்த்தையை யூஸ் பண்ணியதே கிடையாது என்று சொல்ல, அதைத் தொடர்ந்து நடுவர் இதில் மனோஜும் ரோகிணியும்... என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மனோஜ் குறிக்கிட்டு தெரியும் சார் நாங்க தானே வின் பண்ணுனோம் என்று கேட்க, அதற்கு அங்கிருந்த நடுவர் அந்த புட்டேஜை கொஞ்சம் பிளே பண்ணுங்க என்று சொல்ல திரையில் மனோஜ் ரோகிணி பேசிய விஷயங்கள் வருகிறது.

அதாவது மனோஜ் அதில் நம்ம சுற்றி இருக்கிற எல்லாவங்களுக்கும் நல்லது பண்ணனும், அடுத்தவங்களுக்காக நாம வாழனும்னு சும்மா ஏதாவது சொல்லுவோம் என்று மனோஜ் சொல்லிக் கொண்டிருக்க அதை எல்லாரும் முன்பும் போட்டுக்காட்ட, மனோஜும் ரோகிணியும் பேச முடியாமல் தலைகுனிகின்றனர். அதைத்தொடர்ந்து இந்த போட்டியில் சிறந்த ஜோடி யாருன்னா என்று நடுவர்கள் இறுதி முடிவை அறிவிக்க போகிறார்கள்.

ஆனால் எப்படியும் இதில் முத்து மீனா தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று இப்போதே தெரிகிறது. மனோஜ்க்கும் ரோகிணிக்கும் மறுபடியும் பல்பு கிடைத்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கும். ஏற்கனவே ரோகிணி ஒரு பிரச்சனையில் கூட சிக்கவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணி வந்த நிலையில் இந்த ப்ரோமோ முத்து மீனா ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications