சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் ரோகிணி பற்றி முத்து சொன்ன விஷயம்.. அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 15 தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும், மீனாவும் பரிசு வாங்கிட்டு வீட்டிற்கு வந்த பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி பற்றி சில விஷயங்களை சொல்ல அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.
இந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த வாரம் முழுக்க முத்து- மீனா, ரோகிணி- மனோஜ், ரவி- ஸ்ருதி எல்லோரும் கலந்து கொண்ட போட்டிகள் தான் நடைபெற்றது. போட்டிகளில் ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி பேசுவதை கேட்டு எல்லோரும் பிரமித்து இருந்தாலும் கடைசியில் அவர்களுடைய சுயரூபத்தை நடுவர்கள் வெளிச்சம் போட்டு காட்டி மனோஜ் மற்றும் ரோகிணியை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கின்றனர்.

அதே நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே முத்து மற்றும் மீனாவே இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். முத்து நினைத்தது போலவே அவருக்கு ஒரு லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. ஆனால் இதை எதிர்பார்க்காத விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். மனோஜ் மற்றும் ரோகிணி தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பார்கள் என்று ஆசையோடு அவர்களுக்கு ஆரத்தி கரைத்து வைத்திருந்த விஜயா கடைசியில் ஏமாற்றத்தோடு இருக்கிறார்.

இதுவரைக்கும் முத்து மற்றும் மீனா நல்ல புருஷன் பொண்டாட்டி இல்லை என்று ஒவ்வொரு இடத்திலும் குத்தி காட்டிக்கொண்டு இருந்த ரோகிணி மற்றும் மனோஜ்க்கு இன்று சரியான அவமானம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் தாங்கள் ஜெயித்த பண காசோலையை முத்து மற்றும் மீனா அண்ணாமலை இடம் கொடுக்கின்றனர்.

பிறகு போட்டியில் நடந்த விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த போட்டியில் புருஷன் பொண்டாட்டினா சண்டை வரணும் சண்டை வரலன்னா.. புருஷன் பொண்டாட்டி கிட்டயும், பொண்டாட்டி புருஷன் கிட்ட எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் நம்ம வீட்டில சிலர் எங்களுக்குள் சண்டையே வந்தது இல்லை என்று ஏமாற்றிக்கொண்டு திரிகிறாங்க என்று சொல்ல இதைக் கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.

முத்து சொன்னதும் அண்ணாமலையும் யோசித்துப் பார்க்கிறார். இதனால் ரோகிணி மற்றும் மனோஜின் மீது குடும்பத்திற்கு சந்தேகம் வருமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி போட்டியில் கூட சில இடங்களில் சொதப்பியிருந்தார். அதாவது பணத்தை பிளாக்மெயில் செய்கிறவர்களுக்கு கொடுக்கணும் என்று சொல்லி இருந்தார். அதற்கு பிறகு சுதாகரித்து விட்டார்.
பிறகு மனோஜ் நான் ரோகிணியிடம் எதையும் மறைத்தது கிடையாது, ரோகிணியும் என்னிடம் எதுவும் மறைத்ததே கிடையாது என்று சொல்லும் போது ரோகிணியின் முகம் மாறியது. இதனால் வீட்டில் இவர்களின் நடவடிக்கை வைத்து உண்மையை கண்டுபிடிக்க போகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications