சிறகடிக்க ஆசை: மகன் விஷயத்தில் மாட்டிய ரோகிணி.. விஜயா கொடுத்த அதிர்ச்சி.. கடைசியில் தான் டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணி தன்னுடைய மகன் பிறந்த நாளுக்கு போவதற்காக டிரஸ் எடுக்க வந்த இடத்தில் விஜயாவிடம் சிக்கி இருக்கிறார். மகன் பற்றி விஜயாவிற்கு தெரிய வந்த உண்மையை சமாளிப்பதற்காக ரோகிணி புது பிரச்சனையில் மாட்டுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவை நம்பி பெட்கட்டி ஏமாந்த விஷயத்தை மீனா பூ கட்டுகிறவர்களிடம் சொன்னதும் அவர்கள் மீனாவை கிண்டல் செய்கின்றனர். அப்போதும் மீனா முத்துக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அப்போது அவர்கள் உனக்கு இன்னொரு சான்ஸ் தரோம். நீ இப்ப முத்துக்கு ஃபோன் போட்டு சாப்பாடு எப்படி இருந்தது என்று கேளு என்று சொல்ல, மீனா ஆசையாக முத்துவுக்கு போன் போட்டு கேட்க முத்து நானே அவசர அவசரமா சவாரி பிக்கப் பண்ணிட்டு போயிட்டு இருக்கேன் போனை வை என்று திட்டி விடுகிறார்.

இதனால் மீனாவை திரும்பவும் பூ கட்டுகிறவர்கள் கலாய்க்க மீனா 50 ரூபாயை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார். மறுபக்கத்தில் ரோகிணி ஒரு துணி கடைக்கு தன்னுடைய மகனுக்கு டிரஸ் எடுக்க போயிருக்கிறார். அங்கு ஒரு கோட் சூட் பார்த்து பிடித்துப் போக தன்னுடைய மகனுக்கு வீடியோ கால் செய்து அந்த கோட்டு எப்படி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் பார்வதியும் விஜயாவும் பரதநாட்டியம் கிளாஸில் ஒரு மாசம் ஃப்ரீ என்று சொல்லி ஆட்களை பிடிக்க வேண்டும் என்று அதற்கு ஃப்ரீயாக டிரஸ் கொடுப்பதற்காக அதே துணிக்கடைக்கு டிரஸ் எடுக்க வருகின்றனர்.
கடையில் ரோகிணி கிரிஷ்க்கு ஒரு டிரஸை பேக் பண்ண சொல்லிவிட்டு பில் கட்டுவதற்காக வரும்போது விஜயா ரோகிணியை பார்த்து விடுகிறார். ரோகிணி விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்து வரும் சேல்ஸ்மேன் நீங்க கேட்ட துணியை பேக் பண்ணியாச்சு. உங்க பையனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல விஜயா என்னது பையனா? என்ன பேசுறீங்க என்று சேல்ஸ்மேனிடம் சண்டைக்கு போக ரோகிணி சமாளிக்கிறார்.

என்னுடைய கிளைன்ட் பையனுக்கு டிரஸ் எடுக்க வந்தேன். அதான் மாத்தி சொல்லிட்டாரு என்று சமாளிக்கிறார். விஜயாவை கூல் செய்வதற்காக உங்களுடைய பில்லையும் நானே கட்டுறேன் என்று சொல்ல, விஜயா உடனே ஓகே சொல்லி ஜன்னலுக்கு ஸ்கிரீன் வாங்க வேண்டும் என்று மேலும் செலவு வைக்கிறார். ரோகிணி இவரிடம் மாட்டிவிட்டோமே என்று திணறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த கட்டத்தில் முத்து காஞ்சிபுரம் பட்டு புடவையுடன் வீட்டிற்கு வந்து மீனாவிடம் புடவையை கொடுக்க மீனா அதற்கு பெரிசாக எதுவும் ரியாக்ட் செய்யாததால் முத்து ஏன் இப்படி இருக்க என்று கேள்வி கேட்க, நான் பேசரட் தோசை செஞ்சு கொடுத்தேன். நீங்க ஏதாவது சொன்னீங்களா? உங்களால எனக்கு அம்பது ரூபா நஷ்டம் ஆயிடுச்சு என்று தன்னுடைய நண்பர்களிடம் பெட்கட்டிய விஷயத்தை சொல்ல மீனா நீ சுடுதண்ணி வச்சா கூட சூப்பரா தான் இருக்கும்.
அதை தினமும் சொல்லிக்கிட்டேவா இருக்க முடியும் என்று ஐஸ் வைக்க மீனா சமாதானம் ஆகிறார். பிறகு முத்து புடவையை கொடுத்து சாரி சொல்ல அதை வாங்கிக்கொண்டு ரூமுக்குள் சென்று புடவையை கட்டிக் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். பிறகு இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். மீனாவின் புடவை மடிப்பை முத்து சரி செய்து அவரை கூல் செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications