Siragadikka Aasai: மீனாவிடம் நடிக்கும் விஜயா! உண்மையை கண்டுபிடித்த ஸ்ருதி! அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை, ஆகஸ்ட் 6, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், டாக்டர் பட்டம் வாங்குவதற்காக விஜயா செய்த நாடகம், குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரோகிணி பொறாமையால் எரிந்துபோக, முத்துவும் மீனாவும் விஜயாவின் செயலால் குழப்பமடைகின்றனர்.

விஜயாவின் புது நாடகம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், நகை எல்லாம் அணிந்து தயாராக இருக்கும் விஜயாவிடம், "என்ன விஷயம்?" என்று அண்ணாமலை கேட்கிறார். ஆனால் விஜயா அவரிடம் எதுவும் சொல்லாமல் சமாளித்துவிடுகிறார். பின்னர், பார்வதி அங்கு வர, அவர் "டாக்டர்" என உளற முயல, விஜயா அவர் வாயை அடைத்துவிடுகிறார். அண்ணாமலை சென்றதும், பார்வதியைத் தனியாக அழைத்து, "டாக்டர் பட்டம் வரும் வரை இதை யாரிடமும் சொல்லக் கூடாது," என்று கூறுகிறார்.
"சரி வேலையை ஆரம்பிப்போம்," என்று பார்வதி ரெக்கார்ட் செய்யத் தொடங்க, விஜயா திடீரென மீனாவை அழைத்துத் தன் பக்கத்தில் அமரச் சொல்கிறார். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகப் பார்க்க, விஜயா ஒரு புதுப்புடவையை எடுத்து மீனாவிடம் கொடுக்கிறார். இதைக் கண்ட முத்து, "எனக்கே இது கனவு மாதிரிதான் தெரியுது," என்று ரவியிடம் கேட்டு, ஸ்ருதியை கிள்ளிப் பார்க்கிறார். இதை பார்த்து ரோகிணி பொறாமையில் எரிந்துபோகிறார்.
மீனாவின் குழப்பம்
விஜயா, ஒரு பை முழுவதும் புடவைகளைக் கொடுத்து, "இதை உன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்குக் கொடு," என்றும் சொல்கிறார். எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்க்க, வீடியோ எடுத்ததும், "அந்தப் புடவையைக் கொண்டு போய் ரூமில் வைத்துவிடு," என்று விஜயா மீனாவிடம் சொல்ல, அனைவரும் அதிர்ந்துபோகின்றனர். முத்து கோபமாக, "இங்கே என்ன நடக்குது?" என்று கேட்கிறார். பார்வதி ஏதோ சொல்ல வர, "நம்ம அடுத்த விஷயத்திற்குப் போவோம்," என்று விஜயா அவரை அடக்குகிறார். அப்போது விஜயாவின் நடவடிக்கையை பார்த்து ஸ்ருதிக்கு சந்தேகம் வந்து நீங்க எதுவும் படத்தில் நடிக்க போகிறீர்களா பார்வதி ஆன்ட்டி வீடியோ எடுக்குறாங்க நீங்க வித்தியாசமா நடந்துக்குறீங்க என்று கேட்கிறார்.
அடுத்து என்ன என்று எல்லோரும் கேள்வியாகப் பார்க்க, விஜயா கிரிஷை அழைத்து, அவனைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார். எல்லோரும் ஒன்றும் புரியாமல் இருக்க, இந்த வீடியோவையும் எடுத்துவிட்டு நகர்ந்து செல்கிறார்.
சீதா அழைப்பு
கோயிலுக்கு வந்திருக்கும் சீதாவின் அம்மா, அருணின் அம்மாவிடம் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர், சீதாவிற்குத் தாலி பிரித்துப் போட வேண்டும் என்று சொல்லி, எல்லோருக்கும் முறையாக அழைப்பு விடுகிறார். முத்துவையும் வரச் சொல்ல, சீதாவின் அம்மா தயக்கத்துடன் இருக்கிறார். அவர் சென்றவுடன், மீனா வர, அவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்ல, மீனாவும் தயக்கத்துடன் இருக்கிறார். இந்த அழைப்பு குடும்பத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications