சிறகடிக்க ஆசை: நம்ம வீட்டுக்கு குழந்தை வர போகுது.. மகிழ்ச்சி செய்தி சொன்ன மீனா.. அதிர்ச்சியில் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மருத்துவமனையில் குழந்தைக்காக டெஸ்ட் எடுக்க போயிருந்த ரோகிணியை பார்த்த மீனாவின் தங்கை மீனாவிற்கு போன் போட்டு சொல்லி இருக்கிறார். அதை தவறாக புரிந்து கொண்ட மீனா வீட்டில் ரோகிணி பற்றி தவறாக சொல்லி பிரச்சனையில் சிக்குகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ்க்கு கிரெடிட் கார்டு கொடுப்பதற்காக பேங்க் ஆபீஸர் வந்திருக்கும் நிலையில் தமக்கு இப்போது கிரெடிட் கார்டு வேண்டாம் என்று ரோகிணி எவ்வளவோ சொல்லுகிறார். ஆனாலும் கேட்காமல் மனோஜ் கையெழுத்து போட்டு அதை வாங்குகிறார். பிறகு ரோகிணி தன்னுடைய தோழியை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார்.

தனக்கு குழந்தை பிறப்பு தள்ளி போய்க்கொண்டிருப்பதால் செக் பண்ணுவதற்காக ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கிறார். அதே ஹாஸ்பிடலுக்கு மீனாவின் தங்கை சீதாவும் இன்டர்வியூ வந்திருக்கிறார். அப்போது ரோகிணியை செக் பண்ணிய டாக்டர் உங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. செகண்ட் பிரக்னன்சி என்பதால் கொஞ்சம் தள்ளி போய் இருக்கு, ஆனால் குழந்தை கட்டாயமாக கிடைக்கும் நீங்கள் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கீங்க.

அதனால் மனசை ரிலாக்சாக வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறேன் அதை சாப்பிட்டால் சரியாகும் என்று சொல்லிக் கொடுக்கிறார். மறுபக்கத்தில் சீதா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி விட்டு வெளியே வருகிறார். அங்கு ஹாஸ்பிடலில் மீனா பதட்டத்தோடு சீதாவிற்காக காத்திருக்கிறார். அப்போது தனக்கு வேலை நிச்சயம் கிடைத்துவிடும். ஆனால் கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க. ஒரு மீட்டிங் இருக்கு அது முடிந்த பிறகு தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மீனாவிற்கு பூ ஆர்டர் ஒன்று வருகிறது. உடனே சீதா நீ போய் அதை பாரு நான் இன்டர்வியூ முடிச்சுட்டு உனக்கு போன் பண்ணுறேன் என்று மீனாவை அனுப்பி வைக்கிறார். பிறகு சீதா அங்கு வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது ரோகிணி டாக்டர் அறையில் இருந்து வெளியே வந்து பில் கட்டுவதை சீதா பார்த்து விடுகிறார். மறுபக்கத்தில் மீனா பூ கட்டியபடி தன்னுடைய தம்பி தங்கைகளின் நிலைமையை பற்றி அங்கிருக்கும் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சீதா மீனாவுக்கு போன் பண்ணி தனக்கு வேலை கிடைத்துவிட்டதாக சொல்கிறார். அதைக் கேட்டு மீனா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். அப்போது ரோகிணியை ஹாஸ்பிடலில் பார்த்ததாகவும் சொல்கிறார். உடனே மீனா அவங்க எதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருப்பாங்க ஒருவேளை கர்ப்பமாக இருப்பாங்களோ என்று நினைத்துக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்து மீனா கேசரி செய்து எல்லோருக்கும் கொடுக்கிறார்.

அப்போது அண்ணாமலை உன் தங்கச்சி பாஸ் பண்ணுனதுக்கு செய்றியா என்று கேட்க அதற்கு கேசரியை சாப்பிட்டபடியே விஜயா உன் தங்கச்சி பாஸ் பண்ணுனதுக்கு எங்க வீட்டு சர்க்கரையை நீ தீர்ப்பியா என்று பேச, இது தங்கச்சிக்காக இல்ல ரோகிணிக்காகத்தான்.. நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வரப் போறாங்க என்று மீனா சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications