சிறகடிக்க ஆசை: ஏற்கனவே கல்யாணம் ஆகி கர்ப்பமா இருந்தியா? ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயா, மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். அதில் மீனா ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டு கேசரி செய்ததால் ரோகிணி கோபப்படுகிறார். ஆனால் ரோகிணியிடம் விஜயாவும் மனோஜும் அவருடைய முதல் திருமணம் மற்றும் குழந்தை பற்றி கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா கேசரி செய்ததற்காக எல்லோரும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது நான் இதை என்னுடைய தங்கச்சிக்காக மட்டும் செய்யல, ரோகிணிக்காகவும் தான் செய்தேன் என்று சொல்ல, எல்லோரும் குழம்பி இருக்கின்றனர். அப்போது ரோகிணி அம்மாவாக போவதாக மீனா சொன்னதும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று விஜயா கேள்வி மேல் கேள்வி ரோகிணியிடம் கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்கலாமே என்று கேட்க மனோஜ் எனக்கே தெரியாது என்று சொல்கிறார். ரவி ஸ்ருதி என எல்லோரும் ரோகிணிக்கு வாழ்த்துக்கள் சொல்கின்றனர். கடைசியில் ரோகிணி நாம் பிரகனண்டா இல்ல. உங்களுக்கு யார் சொன்னது? இது பொய் என்று மீனாவை திட்டுகிறார். இதனால் கோபமான விஜயாவும் அறிவு கெட்டவளே என்று மீனாவை திட்டுகிறார்.
அப்போது ரோகிணியும் மனோஜும் கோபத்தில் ரூமுக்கு சென்று விடுகின்றனர். அங்கு ரோகிணி எனக்கு குழந்தை ஞாபகமாக இருக்கு என்று நாம ரெண்டு பேரும் ஒரு செக்கப் ஹாஸ்பிடல் போய் பண்ணிட்டு வரலாம் என்று மனோஜை கூப்பிட, நான் எதற்கு வரணும்? நான் பர்ஃபெக்ட்டா தான் இருக்கிறேன் என்று மனோஜ் மறுக்கிறார்.

அதனால் கோபமான ரோகிணி நீயும் ஜீவாவும் லிவிங் டு கெதர்ல இருந்தபோது ஜீவா பிரகனண்ட் ஆனாளா? என்று கேட்க, அதனால் கோபப்பட்ட மனோஜ் நீயும் அப்படிப் பார்த்தால் நீயும் வெளிநாட்டில் இருந்து தானே வந்த நீ ஏற்கனவே கர்ப்பமானியா? இல்ல கல்யாணம் பண்ணுனியா? என்று கேள்வி கேட்கிறார். இதனால் கோபப்பட்ட ரோகிணி இப்படி எல்லாம் பேசுற என்று அழுகிறார்.
பிறகு சமாதானமாகி நான் பேசுனது தப்புதான் என்னை மன்னித்துவிடு என்று ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் மன்னிப்பு கேட்கின்றனர். இதைத்தொடர்ந்து மனோஜ் ரோகிணி பேசிய விஷயங்களை நினைத்து ஹாலில் உட்கார்ந்து பீல் பண்ணி கொண்டிருக்கும் போது அங்கு வரும் விஜயா என்னாச்சு என்று மனோஜிடம் விசாரிக்க, அவர் ரூமில் நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்.

இதனால் கோபமான விஜயா ரோகிணியிடம் சென்று உன் மேல எனக்கு மரியாதை இருக்கு. ஆனால் நீ எப்படி மனோஜை நடத்துறியோ அதை பொறுத்துதான் உனக்கு மரியாதை தருவேன்... இப்ப மனோஜ் கிட்ட இப்படி கேள்வி கேட்டிருக்கே? ஆனால் நீயும் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்க, ஆனால் நாங்க உன்னை பத்தி ஏதாவது கேட்டோமா, நீ இதற்கு முன்பு யாரோடையும் பழகிருக்கியா? ஏற்கனவே உண்டாகி இருக்கியான்னு? நாங்க கேட்டோமா என்று கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications