சிறகடிக்க ஆசை: வசமாக சிக்கியதால் ரோகிணி எடுத்த முடிவு.. கோபத்தில் கிருஷ்! மனோஜ் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 10ஆம் தேதிக்கான எபிசோடில் க்ரிஷ் படிக்கும் ஸ்கூலில் அண்ணாமலை வேலைக்கு வருவதால் ரோகிணிக்கு பெரிய சிக்கல் வருகிறது. அதே நேரத்தில் மனோஜ் புதிய பங்களா ஒன்று வாங்குகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலை முதல் முறையாக வேலைக்கு போகிறார். அவரை வழி அனுப்ப எல்லோரும் வருகின்றனர். அப்போது விஜயா குடுகுடுவென்று ஓடிவந்து வீட்டு வாசலில் அந்த பக்கமும் இந்த பக்கமும் பார்க்கிறார். எல்லோரும் என்ன ஆச்சு என்று பார்க்க அப்போது வெளியே யாராவது வராங்களா? என்று பார்த்துவிட்டு ஒருத்தரும் வரல இப்போ வாங்க என்று விஜயா சொல்கிறார்.

விஜயாவின் நடவடிக்கைகளை பார்த்து எல்லோரும் சிரிக்கிறார்கள். பிறகு முத்து அண்ணாமலையை ஸ்கூலில் கொண்டு போய் விடுகிறார். அதே நேரத்தில் ரோகிணி தன்னுடைய மகன் க்ரிஷை ஸ்கூலில் விடுவதற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். பள்ளியில் அண்ணாமலையும் முத்துவும் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி ஆகிறார்.
பிறகு க்ரிஷ் நான் முத்து மாமாவிடம் பேச போறேன் என்று சொன்னதும் விடாமல் அவரை கூட்டிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஒளிந்து கொள்கிறார். அடுத்ததாக முத்து அங்கிருந்து கிளம்பியதும் அண்ணாமலை பற்றி அங்கிருந்த வாட்ச்மேனிடம் விசாரிக்க அவர் அண்ணாமலை இந்த ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி க்ரிஷை ஸ்கூலுக்கு விடாமல் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார். அதற்கு ரோகிணியின் அம்மா இப்பதானே போனீங்க அதுக்குள்ள வந்துட்டீங்க ஸ்கூல் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு க்ரிஷ் கோபத்தில் அறைக்குள்ளே சென்று கதவை பூட்டி கொள்கிறார். அப்போது ரோகிணி கூப்பிட்டு வரவில்லை.
அதனால் என்ன நடந்தது என்று ரோகிணியின் அம்மா விசாரிக்கிறார். அப்போது மனோஜ் அப்பா ஸ்கூலில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். புதன்கிழமை க்ரிஷை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம். அவர் அந்த ஸ்கூலுக்கு அன்னைக்கு ஒரு நாள் வருவார் என்று என்று சொன்னதும் ரோகிணியின் அம்மா நீ இப்படி ஒவ்வொருத்தருக்கா பயந்துகிட்டு இருக்கிறதுக்கு பதிலா உண்மைகளை நீயே சொல்லிடலாம் என்று சொல்கிறார்.

நான் இப்போ சொன்னா என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திடுவாங்க நேரம் வரும்போது சொல்லுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணியை போன் செய்து தான் வாங்க போகும் பங்களாவை பார்க்க கூப்பிடுகிறார். மனோஜ் சொன்ன அட்ரஸுக்கு ரோகிணியும் போகிறார்.
அங்கு அந்த வீட்டின் உரிமையாளர் மனோஜிடம் ரொம்பவும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு தன் மனைவியிடம் கேட்காமல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் நீங்களும் அது போலவே இருக்கிறீங்க உங்களுக்கு இந்த வீட்டை கொடுப்பதற்கு எனக்கு முழு சம்மதம் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணி அங்கு வருகிறார்.
பிறகு இருவரும் வீட்டை சுற்றிப் பார்க்கின்றனர். வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதால் ரோகிணிக்கும் மனோஜுக்கும் வீடு பிடித்து விடுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications