விஜயாவின் சுய ரூபத்தை உடைத்த மீனா.. குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை.. கலங்கி நிற்கும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் விஜயா மீனாவை அவமானப்படுத்தி அசிங்கமாக பேசியதை அழுதப்படியே முத்துவிடம் சொல்ல அதை கேட்டு அண்ணாமலை விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
ரவி இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றால் நான் எடுத்த முடிவை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல அதனால் விஜயா பதில் பேச முடியாமல் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் வீட்டில் நடந்த விஷயங்களை ரவி ஸ்ருதி இடம் சொல்ல அதற்கு ஸ்ருதி அவங்க ரூமை அவங்க எடுத்துக்கிட்டாங்க. இதுல எனக்கு எந்த ஷாக்கும் கிடையாது. சரி வா நாம ஷாப்பிங் போயிட்டு வீட்டுக்கு போகலாம் என்று ரவியை கூட்டிக்கொண்டு வெளியே போகிறார்.
அதைத் தொடர்ந்து மீனா முத்துவுக்கு போன் போட்டுக் கொண்டே இருக்க, முத்து போனை எடுக்காமல் இருக்கும்போது அங்கு வரும் விஜயா மீனாவிடம் இது வழக்கம் போல உன்னுடைய திட்டம் தானே எனக்கு நல்லாவே தெரியும். நீ என்ன பண்ணுவியோ தெரியாது முத்து இங்க வந்து அந்த ரூமை திறந்து விடனும் என்று மீண்டும் கண்டபடி திட்டி விட்டுப் போகிறார்.

இதனால் அழுதபடியே முத்துவிற்கு மீனா போன் போட்டுக் கொண்டே இருக்க அப்போது செல்வம் போனை எடுத்து பேசு வீட்ல என்ன பிரச்சனையோ தெரியலை என்று சொல்ல பிறகு முத்து போனை எடுத்து பேசுகிறார். அப்போது மீனா நீங்க வந்து ரூமை திறந்து விடுங்க. நான் உங்களால எவ்வளவு அவமானப்பட்டு நிற்கிறேன் தெரியுமா? என்று அழுது கொண்டு இருக்க, சரி நான் வரேன் என்று முத்து போனை வைத்து வீட்டிற்கு வருகிறார்.
அப்போது விஜயா உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க என்று திட்டி கொண்டு இருக்க அதற்கு முத்து நீங்க யார் யாருக்கோ என்னுடைய ரூமை கொடுப்பீங்க நான் போய் வெளியில படுத்துட்டு இருக்கணுமா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு விஜயா இரண்டு நாள் தானே, அதுவும் ரவி உன்னுடைய தம்பி, அவனுக்காக நீ இதை விட்டுக் கொடுக்க மாட்டியா? என்று விஜயா கேட்க அதற்கு முத்து ரவி என்னுடைய அப்பாவை ஜெயில்ல உட்கார வைத்தான் அவனுக்காக நான் எதுக்கு விட்டுக் கொடுக்கணும் என்று கேள்வி கேட்கிறார்.
அப்போது மீனா நீங்க தயவு செய்து ரூமை திறந்து விடுங்க என்று அழுதுகிட்டே சொல்ல, அதனால் கோபமான முத்து நீ அழுது இருக்க, உன்னை யார் என்ன சொன்னாங்க என்று கேள்வி கேட்க அதற்கு மீனா எந்த பதிலுமே சொல்லாமல் இருக்கிறார். அதனால் முத்து முதலில் மனோஜிடம் மிரட்டுகிறார்.
பிறகு ரோகிணியை திட்ட நாங்க யாருமே எதுவும் சொல்லவில்லை என்று ரோகிணி சொன்னதும் அப்போ எங்க அம்மா தான் ஏதோ சொல்லி இருக்காங்க என்று மீனாவிடம் முத்து மீண்டும் மீண்டும் கேட்க ஒரு கட்டத்தில் மீனா விஜயா சொன்ன கேவலமான வார்த்தைகளை சொல்லிவிட அதைக் கேட்டு முத்து அதிர்ச்சி அடைகிறார்.
அந்த நேரம் அண்ணாமலையும் வீட்டுக்கு வர முத்து அவரிடம் பாத்தியாப்பா நீ கூட்டிட்டு வந்த மருமகளை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு கேவலமா பேசி இருக்காங்க. இதே மாதிரி அந்த ரெண்டு மருமகள்கள் கிட்ட இவங்களால பேச முடியுமா? ஏன்னா அவங்க பணக்கார வீட்டு பொண்ணு. நான் அந்த ரூமை தந்து விடுவேன் என்று திறந்து விட்டுட்டு இனி யாரை வேணாலும் தங்க வச்சுக்கோங்க என்று முத்து கோபமாக வெளியே போய்விடுகிறார்.
பிறகு அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டு திட்டி தீர்க்கிறார். அதற்கு விஜயா நான் அப்படியெல்லாம் பேசல அவ பொய் சொல்றா என்று மீனா மீது பழியை போட அதற்கு அண்ணாமலை நீ எப்படி பேசி இருப்பேன்னு எனக்கு தெரியும் என்று சொல்லி பிறகு நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் வா என்று வெளியே கூட்டிக்கொண்டு வருகிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து நாளைக்கான ப்ரோமோவில் முத்துவிடன் நீங்க உங்க ரூம்லயே தங்கிக்கோங்க. ரவிக்கு எங்க ரூமை கொடுத்து விடுகிறோம் என்று சொல்ல விஜயா நம்ம ரூமா என்று அதிர்ச்சி அடைகிறார். அதற்கு நீதானே ரவி இந்த வீட்ல இருக்கணும்னு ஆசைப்பட்ட அப்போ அமைதியா இரு என்று அண்ணாமலை ஆப்பு வைக்கிறார்.












Click it and Unblock the Notifications