சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிக்கும் சீதா! முத்து எடுத்த முடிவு! மீனாவுக்கு இது தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா கிரிஷை எதற்காக தத்து எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார் என்பது பற்றி முத்துவுக்கு சந்தேகம் இருக்கிறது. அது பற்றி சீதாவிடம் சொல்கிறார். இதனால் சீதா மீனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்ததா? இல்லையா? என்பது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி வரைந்து கொடுத்த படத்தை கிரிஷ் நான் தான் வரைந்தேன் என்று மனோஜிடம் காட்ட, அதை பார்த்து மனோஜ் சந்தோஷப்படுகிறார். பிறகு எல்லோரிடமும் அதை காட்ட சொல்கிறார். எல்லோரும் நல்லாயிருக்கு என்று பாராட்டுகின்றனர். அப்போது மனோஜ் பாட்டியிடம் காட்டு என்று சொன்னது விஜயா என்னை பாட்டி என்று சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல என்று சொல்லி அந்த ட்ராயிங் பேப்பரை கிழித்து விடுகிறார்.

விஜயா எப்படி செய்ததும் ரோகினி வருத்தப்படுகிறார். மொத்த குடும்பமும்
விஜயாவை சரமாரியாக திட்டுகின்றனர். அண்ணாமலை கிரிஷ்க்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது மனோஜ் ஏம்மா என் முகத்தை கிழிச்ச என்று சோகமாக கேட்கிறார். அதற்கு விஜயா இந்த பையனோட பாட்டி நல்ல தெளிவா பிளான் பண்ணி இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க. இனிமே வந்து இவனை கூப்பிடவே வர மாட்டாங்க என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருக்கின்றார்.
இதனால் ரோகிணி தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்லி கிரிஷ் பற்றி விசாரிக்க சொல்றார். ரோகிணியின் அம்மாவும் மீனாவுக்கு போன் செய்து கிரிஷ் பற்றி விசாரிக்கிறார். பிறகு நான் சீக்கிரமாக வந்து கிரிஷை கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார். இதனால் விஜயாவுக்கு அவமானமாக போகிறது. எப்படிடா இந்த குட்டிச்சாத்தானை வீட்டை விட்டு வெளியேற்ற என்று மனதிற்குள்ளே பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ரோகிணி தன்னுடைய தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிரிஷ் விஷயத்தில் வேற ஏதாவது பிளான் பண்ண வேண்டும் என்று ரோகிணி சொல்ல, அதற்கு வித்யா நீ எந்த பிளானும் போட்டு தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக்காத முத்து மீனா செய்வதை செய்யட்டும் அதுதான் உனக்கு நல்லது என்று அட்வைஸ் சொல்கிறார்கள். ஆனால் ரோகிணி முத்து எதற்காக மீனா தத்தெடுக்க வேண்டாம் என்று சொன்னார் என உண்மைகளை தோண்ட ஆரம்பித்திருக்கிறான், இதனால் என்னுடைய அம்மாவிடம் சொல்லி கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்லலாம் என பிளான் செய்கிறார்.
அடுத்ததாக முத்து சீதாவை பார்க்க ஹாஸ்பிடலில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அருண் தான் சீதாவை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். அருண் முத்துவை பார்த்ததும் வழக்கம் போல இவன் எதுக்கு உன்னை பார்க்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான் என்று சீண்டி பேசுகிறார் ஆனால் முத்து எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்கிறார்.
பிறகு சீதா போய் முத்துவிடம் என்னவென்று விசாரிக்க, மீனா கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொல்கிறாள், ஆனால் என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் அவள் தான் இதுக்கு ஒத்துக்கிட்டா ஆனா இப்போ வேண்டாம்னு சொல்லுறா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு சீதா இதை நீங்க அக்காவிடமே கேட்கலாமே மாமா என்று சொல்ல, அதற்கு உங்க அக்கா தான் உண்மையை என்கிட்ட சொல்லவே இல்ல, நான் கேட்டாலும் அதை மறைப்பதற்கு காரணம் தான் சொல்லுவா அதனால் தான் உன்கிட்ட பேச சொன்னேன் என்று சொன்னதும் சரி நான் விசாரிக்கிறேன் என்று சீதா சொல்கிறார்.
அதை எடுத்து சீதா மீனாவிடம் பேசுகிறார். அப்போது முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இதனால் கடுப்பான மீனா எந்த காரணமும் இல்லை அத்தைக்கு தெரிஞ்சா விட மாட்டாங்க, அந்த பையனை தத்தெடுத்து கஷ்டப்படுத்த முடியாது அதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்று சமாளிக்கிறார். இதுதான் உண்மையான காரணமாக என்று மீண்டும் கேட்க ஆமாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.
மீனா சொன்னதை சீதா நம்ப மறுக்கிறார். இதுதான் காரணமாக இருந்தால் இதை மாமாவிடம் சொல்லி இருக்கலாம் ஆனா அக்கா ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறாள் என்று சீதா சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் சத்யா மற்றும் சீதா இருவரும் தான் ரோகிணி பற்றிய உண்மைகளை கண்டுபிடிப்பார்கள் என்று தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications