சிறகடிக்க ஆசை: மீனாவுக்கு தெரிந்த உண்மை.. ரோகிணியை இழுத்து சென்ற விஜயா.. அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் பிசினஸ் எதிரி சிந்தாமணி பற்றி மீனாவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் விஜயா செய்த செயலை பார்த்து மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா ஆர்டர் வாங்க மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மண்டபத்தில் இருக்கும் ஓனர் டெக்கரேஷன் செய்ய நாங்களே ஆட்கள் ரெடி பண்ணிடுவோம் அவங்க தான் செய்வாங்க என்று சொல்ல, அதற்கு பங்க்ஷன் நடத்துபவர்கள் எங்களுக்கு இந்த பொண்ணு தான் செய்ய வேண்டும் என்று மீனா டெக்கரேஷன் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று மீனா பற்றி சொல்கிறார்கள்.

television siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் அங்கு சிந்தாமணி வருகிறார்‌. அப்போது மண்டபத்துக்காரர் இவங்கதான் இந்த மண்டபத்தில் தொடர்ந்து ஆர்டர் எடுக்குறாங்க என்று சொல்கிறார். அதற்கு மீனாதான் பண்ண வேண்டும் என்று பங்க்ஷன் வீட்டுக்காரர்கள் உறுதியாக இருக்கின்றனர். அப்போது சிந்தாமணி நான் ஒரு கொட்டேஷன் போட்டு தரேன் அந்த பொண்ணு கிட்ட ஒரு கொட்டேஷன் போட்டு கேளுங்க, உங்களுக்கு எது கம்மியா இருக்கோ அவங்க கிட்ட பண்ணிக்கோங்க என்று சொல்ல மீனா ஒரு லட்சம் பணம் கேட்கிறார்.

ஆனால் சிந்தாமணி எனக்கு அதில் பாதி போட்டு தந்தால் போதும் என்று சொல்லிவிடுகிறார். அதனால் பங்க்ஷன் வீட்டுக்காரர்கள் மீனாவிடம் ரேட் அதிகமாக இருக்கிறது என்று ஆர்டரை சிந்தாமணி இடம் கொடுக்கிறார்கள். அப்போது சிந்தாமணி மீனாவிடம் நீங்க இப்பதான் ஆரம்பிச்சு இருக்கீங்க அதனால சின்ன சின்ன ஆர்டர் எடுத்து பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அப்போது சிந்தாமணி கூட இருக்கும் நபர் நீ எப்படியும் இந்த ஆர்டருக்கு இரண்டு லட்சம் வாங்கி இருப்ப.. ஆனா ஏன் அக்கா இவ்ளோ கம்மியா வாங்குன? நம்மளுக்கு கட்டுபடி ஆகாது என்று சொல்ல, நான் ஏன் கம்மி பண்ண போறேன் கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி மழை வந்துருச்சு... பூ ஸ்டாக் இல்ல, ரேட் அதிகம் என்று சொல்லி ஒன்றரை லட்சமாவது வாங்கிடுவேன் என்று திட்டம் போடுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது மீனா மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது அங்கு வேலை செய்யும் பெண் சிந்தாமணி ஒரு மோசமான பெண் அவங்க கிட்ட உஷாரா இருந்துக்கமா என்று சொல்லி அனுப்புகிறார். மறுபக்கத்தில் விஜயா கட்டிலின் மேல் துணிகளை குவித்து வைத்து எந்த புடவை கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

அண்ணாமலையிடம் நீங்கள் ஏதாவது ஒரு புடவையை சொல்லுங்கள் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை ரெண்டு புடவையை காட்டி கேட்டா ஒரு புடவை சொல்லலாம் ஆனா ஆனால் இத்தனை புடவை வச்சுட்டு கேக்குறியே நீ உனக்கு பிடித்ததை கட்டிக்கோ என்று சொல்லிவிடுகிறார். என் பையன் கெஸ்ட் ஹவுஸ் வாங்கி இருக்கான், அங்க ரெண்டு நாளைக்கு தங்க அதற்கு ஏத்த மாதிரியான புடவை கட்டினா நல்லா இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே விஜயாவிற்கு ரோகிணி ஞாபகம் வருகிறது. அங்கு போகும்போது ரோகிணியும் மனோஜும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது விஜயா நான் நாளைக்கு என்ன புடவை கட்டணும் என்று எனக்கு செலக்ட் பண்ணி கொடு என்று ரோகிணியை தர தரவென இழுத்து வருகிறார்.

television siragadikka aasai serial vijay tv

மனோஜ் ஒன்னும் புரியாமல் தவித்து போய் இருக்கிறார். அடுத்ததாக ஸ்ருதி ரவியும் கிளம்புவதற்கு டிரஸ் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஸ்ருதி நான் மீனா எத்தனை டிரஸ் எடுத்து வைக்க போறாங்கன்னு கேட்க போறேன் என்று சொல்கிறார்.

அப்போது மீனாவை வந்து பார்க்கும்போது அங்கு மீனா பூ கட்டிக் கொண்டிருக்கிறார். அவரிடம் ஸ்ருதி பேசிக்கொண்டிருக்கும் போது விஜயா அங்கு வந்து நீ இப்போ இருந்து பூ கட்டிக் கொண்டிருக்கிற நாளைக்கு கிளம்பனும்.. உனக்கு ஒரு நாள் ஆர்டர் எடுக்காம இருக்க முடியாதா? என்று திட்டுகிறார். இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+