முத்துவால் அவமானப்படும் மீனா.. ஸ்ருதியால் அண்ணாமலை எடுத்த முடிவு.. உடைந்து போன குடும்பம்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அதில் ஸ்ருதியின் அம்மா தன்னைத் திட்டியதால் கோபத்தில் குடித்துவிட்டு வந்த முத்துவால் மீனா வீட்டில் அவமானப்படுகிறார்.
முத்துவால் வீட்டில் நடந்த பிரச்சனையில் அண்ணாமலை அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும், செல்வமும் இன்னொரு டிரைவரோடு சேர்ந்து பாருக்கு சென்று குடிக்கின்றனர். அப்போது முத்து வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாரில் ஒருவர் போனில் என்ன மன்னிச்சிடு மன்னிச்சிடு என்று தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க அதை கேட்டு முத்து கடுப்பாகி திட்டுகிறார்.

பிறகு தான் குடிச்சிருக்குது அப்பாவுக்கு தெரிஞ்சா அதனால வருத்தப்படுவாரு அதனால லிமிட்டா குடிச்சிட்டு ஸ்டெடியா வீட்டுக்கு போயிருந்தேன் என்று வீட்டிற்கு வருகிறார். அங்கே மீனா சப்பாத்தி போட்டு கொண்டிருக்க வீட்டிற்கு வந்து முத்து எனக்கு சப்பாத்தி வேண்டாம் ரெண்டு முட்டை போட்டு ஆம்லெட் மட்டும் போட்டு கொடு என்று கேட்கிறார்.
அப்போது முத்துவின் நடவடிக்கையை பார்த்து மீனா கிச்சனுக்கு அழைத்து சென்று நீங்க குடிச்சி இருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு முத்து முதலில் இல்லை என்று மறுத்து பிறகு லைட்டா என்று சொல்லி நான் சரியா தான் இருக்கிறேன் என்று நடந்து காட்டுகிறார். அந்த நேரத்தில் ரவி மற்றும் ஸ்ருதி வீட்டிற்கு வர அப்போது மீனா அவர்களிடம் சாப்பிட கூப்பிட அதற்கு ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் நாங்கள் வெளியே சாப்பிட்டு வந்துட்டோம் என்று சொல்ல அதற்கு முத்து உங்களுக்காக இவ்வளவு சப்பாத்தி போட்டு வச்சிருக்கா, நீங்க வெளியேவே சாப்பிட்டு வந்துட்டீங்கன்னா என்ன அர்த்தம்?
சாப்பாடு வேண்டாம்னா போன் பண்ணி சொல்ல மாட்டீங்களா? என்று கோபப்பட்டு ரவியை இழுத்து உட்கார வைத்து சப்பாத்தியை அவருடைய வாயில் திணிக்க ஸ்ருதி கோபப்பட்டு திட்டுகிறார். இதனால் முத்துவுக்கு ஸ்ருதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது அண்ணாமலை முத்துவுக்காக பேசுகிறார். அதற்கு ஸ்ருதி முத்து சாதாரணமா கேட்டிருந்த பிரச்சனை இல்லை, இப்படி குடிச்சிட்டு வந்து பேசுறாரு என்று கோர்த்து விடுகிறார்.

இதனால் அண்ணாமலை பதில் பேச முடியாமல் தலைகுனிந்து உட்கார்ந்து விட மீனா கண்ணீரோடு நிற்கிறார். அதற்கு ரோகிணி இதெல்லாம் எங்களுக்கு பார்த்து பழகி போச்சு. உனக்கு தான் புதுசு என்று முத்துவை அவமானப்படுத்தி பேச அதற்கு முத்து இந்த வீட்ல நான் மட்டும் தான் குடிக்கிறேனா? இவனுங்களும் தான் என் கூட சேர்ந்து குடித்தாங்க என்று மொட்டை மாடியில் உட்கார்ந்து சரக்கு அடித்த விஷயத்தை சொல்ல, ஸ்ருதி மற்றும் ரோகிணி அதிர்ச்சடைகின்றனர்.
பிறகு ரவி மற்றும் மனோஜ் இருவரும் ஜாலிக்காக லைட்டா குடித்தோம் என்று சமாளிக்க மனோஜை ரோகினியும் ரவியை ஸ்ருதியும் கூட்டிக்கொண்டு போய்விடுகின்றனர். இதனால் விஜயா அமைதியா இருந்த வீட்ல இவனால இவ்வளவு பிரச்சனை, இப்போ இந்த சப்பாத்தியை நீங்களே உட்கார்ந்து கொட்டிக்கோங்க என்று திட்டிவிட்டு போக மீனா கண்கலங்கி ரூமிற்கு சென்று விடுகிறார்.

அப்போது அங்கு வரும் முத்து இப்ப எதுக்கு நீ அழுதுட்டு இருக்க, வந்து சாப்பிடு என்று சொல்ல இப்ப சாப்பாடு ஒன்னு தான் குறை. நீங்க பண்ண தப்புக்கு எல்லாரும் முன்னாடியே நான் தானே அவமானப்பட்டு இருக்கிறேன். நீங்க லைட்டா தான் குடித்தேன் என்று சொல்ல, லைட்டா குடிச்சாலும் குடி குடி தானே? நீங்க குடிகார்தானே என்று திட்டுகிறார். அதோடு அன்னைக்கு சாம்பார்ல பல்லி விழுந்ததற்காக அப்படி திட்டுனீங்களே? அவ்வளவு பெரிய பாத்திரத்தில் இருந்த சாம்பார்ல நிறைய காய்கறி இருந்துச்சு....
அதுல அந்த ஒரு பல்லியை தூக்கி போட்டுட்டு சாப்பிட வேண்டியதுதானே என்று கேள்வி கேட்க, அதற்கு முத்து அது விஷம் ஆகிவிட்டது என்று பதில் சொல்ல அதே மாதிரி தான் அண்டாவுல குடிச்சாலும், கொஞ்சமா குடிச்சாலும் அது விஷம் தானே? என்று பதிலடி கொடுக்க முத்து எந்த பதிலும் பேசாமல் யோசித்தபடி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications