சிறகடிக்க ஆசை: அம்மா கேட்ட கேள்வியால் ரோகிணி எடுத்த முடிவு.. கோபத்தில் விஜயா! அடுத்த பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜிடம் கோபித்துக்கொண்டு ரோகிணி வீட்டை விட்டு போகிறார். அவரிடம் அவருடைய அம்மா கேட்ட கேள்வியால் ரோகிணி முக்கிய முடிவெடுக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியிடம் மனோஜ் பேசுவதற்காக போகிறார். அப்போது ரோகிணி கோபப்படுகிறார். நீ எனக்காக ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணி பேசலையே என்று கேட்டதும், நீயும் என்னை பத்தி பேசினதெல்லாம் தப்பு தானே என்று மனோஜ் சொல்கிறார். எனக்கு எதுவும் தெரியாத முட்டாள்ன்னு நீ பேசுனது என்ன ரொம்ப கஷ்டப்படுத்திடிச்சி என்று மனோஜ் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

உனக்கு நான் பேசினது மட்டும் தான் தப்பா தெரியுது அத்தனை பேரும் முன்னாடி உங்க அம்மா அடிச்சது தப்பா தெரியல என்று ரோகிணி திட்டுனதற்கு, மனோஜ் நீ பேசுனதும் தப்புதான் என்று மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதால் ரோகிணி கோவப்பட்டு வீட்டில் இருந்து கிளம்பி போகிறார்.

மறுபக்கத்தில் விஜயா கோபமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அண்ணாமலை நீ பண்ணுனது தப்பு விஜயா என்று விஜயாவிற்க்கு அட்வைஸ் பண்ணுகிறார். அதற்கு விஜயா அவா பண்ணுனது மட்டும் சரியா என்று கேட்க, நீ முதல்ல இருந்து அந்த பொண்ணை தலையில தூக்கி வெச்சிட்டு ஆடுன. அதுக்குத்தான் எல்லா மருமகளையும் ஒரே மாதிரி பாருன்னு சொன்னேன் என்று அண்ணாமலை சொல்ல, அதற்கு விஜயா இப்போ நான் கொண்டு வந்த மருமகள் சரியில்லன்னு நீங்க சொல்றீங்களா என்று கோபப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை நான் அப்படியெல்லாம் சொல்லல, ரோகிணி தப்பு பண்ணாலும் மனோஜும் சேர்ந்துதான் தப்பு பண்ணியிருக்கான் ஆனால் தண்டனை கொடுக்கிறது ஒருத்தருக்கு மட்டும் இருந்தா எப்படி என்று கேட்கிறார். இப்போ என்ன நீங்க மனோஜை அடிக்க சொல்றீங்களா என்று விஜயா கோபப்படுகிறார்.

அவனுக்கு யாரையும் ஏமாற்ற தெரியாது. முதல்ல அவன் அந்த ஜீவா கிட்ட ஏமாந்தான் இப்போ ரோகிணி சொல்றதை கேட்டு பொய் சொல்லிட்டு இருக்கான் என்று விஜயா சப்போர்ட் செய்கிறார். அதற்கு அண்ணாமலை அப்போ அவனுக்கு யோசிக்கவே தெரியாதா? என்று கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் மனோஜ் வந்து ரோகிணி வீட்டை விட்டு போன விஷயத்தை சொல்ல, விஜயா பேக் எடுத்துட்டு போனாளா? இல்ல சும்மா போனாளா? என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் ஹேண்ட்பேக் மட்டும் தான் எடுத்துட்டு போய் இருக்கா என்று சொல்ல, அப்ப திருப்பி வந்துருவா விடு என்று சொல்கிறார்.

Top 10 Tamil Serials: முதல் இடத்தில் எந்த சீரியல் தெரியுமா? இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல் லிஸ்ட்
அண்ணாமலை நீ போற வரைக்கும் பாத்துட்டு இருந்தியா தடுக்கலையா என்று கேட்க, விஜயா ஒண்ணும் தேவையில்லை அவளுக்கு நீ எதுவும் போன் பண்ணாத.. பேசாத, அவனே வரட்டும் என்று மனோஜிடம் சொல்கிறார். மறுபக்கத்தில் ரோகிணி அம்மா மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.

வீட்டில் நடந்த விஷயங்கள் பற்றி எல்லாம் சொன்னதும் ரோகிணி அம்மா கஷ்டப்படாத கல்யாணி அவர் மேலயும் தப்பு இருக்கு. ஆனா அவங்க அம்மாவுக்கு அவர் மேல தான் அதிக பாசம்னு நீயே சொல்லி இருக்க, அப்படி இருக்கும்போது நீ எதுக்கு அவரை குறை சொன்ன? என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி நான் பண்ணுனது தான் தப்புன்னு நீயும் சொல்லுறியாமா என்று கேட்க,

நீ அப்படி அவசரப்பட்டு பேசியிருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன். அதோடு நீ அந்த வீட்டுக்கே போ அங்கிருந்து வந்ததால எந்த பலனும் இல்ல. தொலைஞ்ச இடத்தில் தான் தேடனும்‌ வெளியில் தேடி பிரயோஜனம் இல்லை என்று அட்வைஸ் கொடுக்கிறார். அதனால் ரோகிணியும் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அடுத்த கட்டத்தில் ஸ்ருதி ரீல்ஸ் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் போது மீனாவும் அவரோடு சேர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த விஜயா வீட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார். அதற்கு ஸ்ருதி அப்போ நாங்க சிரிக்க கூடாதா என்று கேட்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் வந்து விஜயாவிடம் ரோகிணி இன்னும் வீட்டுக்கு வரலமா போன் கூட பண்ணல.. நான் வேணா போன் பண்ணட்டுமா என்று கேட்க, விஜயா ஒன்னும் பண்ண தேவையில்லை போனவளுக்கு வர தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி படிக்கட்டில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது ரோகிணி வாசலில் நிற்பதை மனோஜ் பார்த்து பேச போகும்போது விஜயா பேசவிடாமல் தடுத்து நிறுத்துகிறார். அதோடு மீனாவிடம் விஜயா காபி கேட்க இப்பதானே அத்தை நீங்க காபி குடிச்சீங்க தலைவலி வந்தா தானே மீண்டும் காபி கேட்பீங்க என்று கேட்க, தலைவலி வந்ததுனால தான் கேட்கிறேன் என்று ரோகிணியை பார்த்து விஜயா சொல்கிறார். இதனால் ரோகிணி எதுவும் பேசாமல் ரூமுக்கு போய் விடுகிறார். பிறகு விஜயாவிடம் ரோகிணி பேசப் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+