பாட்டி விட்ட அடி.. மருமகள்கள் முன்பு அவமானப்பட்ட விஜயா.. முத்து எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் வீட்டிற்கு வந்த முத்துவின் பாட்டி முத்துவை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

அதே நேரத்தில் வீட்டு மருமகள்கள் முன்பு விஜயாவை பாட்டி அவமானப்படுத்தி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாட்டி ஊரில் இருந்து அண்ணாமலை வீட்டிற்கு வந்து விஜயாவிடம் என் பையனுக்கு நெஞ்சில் ஆபரேஷன் பண்ணிருக்கீங்க, இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல. ரவிக்கு நான் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சிட்டிங்க என்று கோபப்பட்டு சண்டை இடுகிறார். அந்த நேரத்தில் மனோஜூம் ரோகிணியும் வீட்டிற்கு வருகின்றனர்.

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அவர்கள் எப்படி இருக்கீங்க பாட்டி என்று கேட்க என்னுடைய பையனுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தை எல்லாரும் மறச்சிட்டிங்க என்று கோபப்படுகிறார். பிறகு முத்து வீட்டிற்கு வந்து பாட்டியை பார்த்ததும் பாட்டி எப்படி இருக்க... உன்னை தூக்கி எவ்வளவு நாளாச்சு என்று பாட்டியை சந்தோஷமாக தூக்கி வர கோபமான பாட்டி முத்து கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார். அதோடு என்கிட்ட பேசாத அப்பாவுக்கு உடம்பு சரியில்லாததை நீ என்கிட்ட மறைச்சிட்டல்ல என்று கேட்க,

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அதற்கு முத்து அப்பா தான் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு என்று சொல்கிறார். ஆனால் பாட்டி இதை ஏற்றுக் கொள்ளாமல் இந்த வீட்டில் மீனாக்கு மட்டும் தான் என் மேல அக்கறை இருக்கு. அவ தான் வீட்டில் நடந்தது எல்லாம் என்கிட்ட சொன்னா என்று போட்டுக் கொடுக்கிறார். அடுத்து ரவி பாட்டி இடம் இதுதான் என்னுடைய பொண்டாட்டி என்று சொல்லி அறிமுகப்படுத்த, அதற்கு பாட்டி உங்க அப்பா அம்மா உன்னை இப்படித்தான் வளர்த்தாங்களா ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க என்று கேள்வி கேட்கிறார்.

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அதற்கு ஸ்ருதி நாங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. வீட்ல சொன்னோம் அவங்க ஒத்துக்கொள்ளல அதனாலதான் நாங்க இப்படி கல்யாணம் பண்ண வேண்டிய நிலைமை ஆயிடுச்சு. என்று பாட்டிக்கு கேள்விக்கு பதிலுக்கு பதில் கொடுக்கிறார். அதற்கு ரவி ஸ்ருதியை அமைதியாக இரு என்று சொல்கிறார்.

பிறகு பாட்டி அண்ணாமலையை பார்த்து உனக்கு ஒரு காய்ச்சல் கூட வராமல் எப்படி எல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தேன். ஆனால் இந்த விஜயா கிட்ட உன்னை தாரவாத்து கொடுத்ததற்கு பிறகு உனக்கு இந்த மாதிரி எல்லாம் நிலைமை ஆயிடுச்சு. அவ உன்னை சரியாவே பார்த்துக்கல. அதனாலதான் உனக்கு நெஞ்சு வலி வந்திருக்கு என்று புலம்புகிறார்.

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அந்த நேரத்தில் முத்து மீனாவை தனியாக அழைத்துக்கொண்டு போய் உனக்கு காலையில குடுகுடுப்பைக்காரன் சொன்னது சரியா போச்சு. உன் வாயை கட்டி போடணும் நீ பாட்டிகிட்ட உண்மையை ஏன் சொன்னா என்று கேட்க, அதற்கு மீனா பாட்டி ரவிக்கு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னாங்க அவங்க பொண்ணு வீட்டுக்காரங்களோட நம்ம வீட்டுக்கு வந்து ரவிக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா அவங்க தானே அசிங்கப்படுவாங்க...

அதனாலதான் உண்மையை சொன்னேன் என்று சொல்ல அதற்கு முத்து சரி உன்னோட காரணம் நியாயமா தான் இருக்கு, இருந்தாலும் பாட்டி என்னை அடிச்சிட்டு பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால நானும் இனி அவங்க கிட்ட பேச மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாட்டி ஸ்ருதியை கூப்பிட்டு உனக்காக புடவை வாங்கி சாமி பாதத்தில் வைத்து எடுத்துட்டு வந்து இருக்கேன் என்று கொடுக்க..

siragadikka aasai serial December 29th episode Muthu grandmother slaps Muthu

அதற்கு ஸ்ருதி தேங்க்ஸ் பாட்டி இதுவரைக்கும் ரவி கூட எனக்கு ஒரு டிரஸ் வாங்கி தந்ததில்லை, நீங்கதான் ஃபர்ஸ்ட் டைம் புடவை வாங்கி கொடுத்து இருக்கீங்க என்று சந்தோஷப்படுகிறார், பிறகு விஜயாவிடம் உனக்கெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வரல நீ என் பையனை சரியா பாத்துக்கல அதனாலதான் அவனுக்கு இப்படி ஆயிடுச்சு என்று மீண்டும் திட்டிவிட அதற்கு விஜயா எந்த பதிலும் சொல்ல முடியாமல் கோபத்தில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+