சிறகடிக்க ஆசை: பாவம்! ரோகிணிக்கு வந்த புது பிரச்சனை.. பரிதாப நிலையில் விஜயா.. மகிழ்ச்சியில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் மலேசியா மாமாவால் ரோகிணிக்கு புது பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் விஜயா வீட்டில் தவித்து கொண்டு இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா, மலேசியா மாமாவின் கடையில் கறி வாங்க போயிருக்கிறார். அப்போது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போது மீனாவை கறிக்கடைக்காரர் பார்த்து விடுகிறார். உடனே தலையில் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார். மீனா கூட வந்த பொண்ணு பேசிக்கொண்டே இருக்க, எப்படியோ இன்றும் மீனாவிடம் மாட்டாமல் கறிக்கடைக்காரர் தப்பித்து விடுகிறார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்து மீனா, முத்து, ஸ்ருதி, ரவி என எல்லோரும் பிரியாணி செய்கிறார்கள். பிரியாணி செய்யும் போது அருமையான வாசம் வருவதால் விஜயா அதை சாப்பிட முடியாமல் கவலையால் இருக்கிறார். அப்போது ரோகிணி எனக்கு பசிக்குது நான் சாப்பிட போறேன், நல்லவேளை மனோஜ் நீ என்னுடைய பெயரை முதலில் சொல்லல. சொல்லி இருந்தா என்னாலும் சாப்பிட முடியாமல் ஆகியிருக்கும் என்று சொல்லிவிட்டு சாப்பிட போகிறார்.
இதனால் விஜயா மனோஜ் மீது கோபப்படுகிறார். அதோடு இன்னைக்கு சாப்பிட்டுவிட்டு நாளைக்கு விரதம் இருக்கலாமா? என்று கேட்க, அதற்கு மனோஜ் வேண்டாமா சாமி குத்தமாயிடும். நாளைக்கு பெரிய ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன் என்று விஜயாவை சமாதானப்படுத்துகிறார்.

பிறகு பிரியாணி சாப்பிட்டுவிட்டு தான் வேலைக்கு போவேன் என்று ஸ்ருதி சொல்ல, அதற்கு விஜயா நீயும் மீனாவும் தான் பேசுவது கிடையாதே? அப்புறம் அவ செஞ்ச பிரியாணியை சாப்பிட போறே என்று கேட்க, அதற்கு ஸ்ருதி அது வேற, இது வேற.. சாப்பாடு தான் முக்கியம் என்று பதிலடி கொடுக்கிறார்.
அடுத்ததாக வித்யா வீட்டிற்கு ரோகிணி வந்திருக்கிறார். அப்போது அங்கு கறிக்கடைக்காரர் வருகிறார். அவர் மீனா தன்னுடைய கடைக்கு வந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் ரோகிணி நீங்க உங்க கடையை வேற இடத்துக்கு மாத்துங்க. அப்படி இல்லை என்றால் கடையை பூட்டி வைங்க என்று சொல்கிறார்.

அதற்கு கறிக்கடைக்காரர் நீ ஏதோ பிரச்சனையில் இருக்கிற என்று நானும் நீ சொன்னது போல நடிச்சு கொடுத்தேன். ஆனால் இனி அப்படி பண்ண முடியாது. எனக்கு கஸ்டமர், குடும்பம், உறவு எல்லாம் இங்கே தான் இருக்கிறது. நீங்க மீனாவை அந்த கடை பக்கம் வரவிடாமல் பண்ணுங்க. நான் மாட்டுனால் நிச்சயம் உங்களுடைய பெயரை தான் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு போகிறார்.
இதனால் ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு வித்யா ஏன் சிரிச்சிட்டு இருக்கிறா என்று கேட்க என்னுடைய நிலைமையை நினைத்து நான் சிரிக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் மீனா பெரிய தொழில் அதிபராக வேண்டும் என்று முத்து காரில் வரும்போது பேசிக்கொண்டே இருக்கிறார்.
அதோடு மீனாவின் வளர்ச்சிக்காக அவருக்கு விசிட்டிங் கார்டு அடித்துக் கொடுக்கிறார். அதனால் மீனா நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி என்று எமோஷனல் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications