சிறகடிக்க ஆசை: சொத்துக்காக மனோஜ் செய்த காரியம்! வீட்டை விட்டு போன அண்ணாமலை! சிக்கும் ரோகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 31ம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் சொத்துக்காக செய்த காரியத்தை பார்த்து வருத்தமான அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். அவர் எழுதி வைத்த லெட்டரை படித்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணிக்கு புதிய பிரச்சனையும் வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் வாங்கி வைத்திருக்கும் கடனுக்காக சொத்து பிரித்து தருமாறு கேட்டு இருக்கிறார். இதனால் அண்ணாமலை சொத்தை பிரிப்பதற்கு சம்மதித்திருக்கிறார். அதற்காக இன்றைய எபிசோடில் வக்கீல் மற்றும் தன்னுடைய நண்பரையும் கூட்டிக் கொண்டு வருகிறார். அப்போது சொத்தை பிரிக்க வேண்டாம் என்று ரவியும் முத்துவும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் விஜயா இந்த வீடு மட்டும் பிரிக்க கூடாது, ஒருவேளை இவங்க எல்லோரும் இந்த வீட்டை விட்டு என்னை துரத்தி விட்டுட்டா நான் எங்க போவேன் என்று சொன்னதும், அண்ணாமலை நான் இந்த வீட்டை பிரிக்க போறது கிடையாது. கிராமத்தில் எங்க அம்மா எனக்காக எழுதிக்கொடுத்த சொத்தை மட்டும் தான் பிரிக்க போறேன் என்று சொல்கிறார். அதற்கும் முத்துவும் ரவியும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் கோபமான மனோஜ், உங்க கிட்ட நான் எதுவுமே கேட்கல.. ஆனா நான் சொத்தை கேட்டு ஏதாவது கேஸ் போட்டேனா யாரும் என்னை எதுவும் கேட்காதீங்க என்று சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது என்னது நீ கேஸ் போடுவியா என்று முத்து மனோஜை அடிக்க போகிறார். அவரை குடும்பத்தினர் எல்லோரும் விலக்கி விடுகின்றனர்.
இதை அடுத்து மறுநாள் காலையில் விஜயா ரூமில் இருந்து வெளியே வந்த போது அண்ணாமலையை காணவில்லை என்று எல்லோரும் தேடுகின்றனர். அப்போது மீனா முத்துவிடம் விஷயத்தை சொல்ல அண்ணாமலை நண்பர்களுக்கு முத்து போன் போட்டு பேசுகிறார். யாரும் அண்ணாமலையே பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிறகு சாமி ரூமில் ஒரு லெட்டர் இருப்பதை மீனா கண்டுபிடிக்கிறார்.
Bigg Boss: மக்களுக்கு ஏன் என்னை புடிக்கல? நான் செத்து பிழைத்து வந்திருக்கிறேன்! பிக் பாஸ் கனி உருக்கமான வீடியோ
அதை பார்க்கும்போது தான் அண்ணாமலை வீட்டை விட்டு போன விஷயமே தெரிகிறது. அதில் என்னை யாரும் தேட வேண்டாம். நான் நல்லா தான் இருக்கிறேன். யாரும் பயப்படாதீங்க, நேரம் வரும்போது வந்து விடுவேன் என்று எழுதி வைத்திருக்கிறார். இதனால் உன்னால் தான் அப்பா வீட்டை விட்டு போயிட்டாரு என்று முத்து உட்பட எல்லோரும் மனோஜை திட்டுகின்றனர்.
பிறகு ரோகிணியை ரூமுக்குள் அழைத்து சென்று மனோஜ் பேசுகிறார். இப்போ எல்லா பிரச்சனையும் உன்னால தான் என்று ரோகிணி மீது மனோஜ் பழியை போடுகிறார். நீ வாங்கி கொடுத்த ஆர்டரால்தான இப்படி ஆகிவிட்டது என்று திட்டிக் கொண்டிருக்க, ரோகிணி உன்னால தான் இப்படி ஆச்சு என்று மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள் இதுதான்! சன் டிவியை விரட்டிய விஜய் டிவி
ஒரு கட்டத்தில் உங்க அப்பா காணாமல் போயிட்டாரு அதை பத்தி உனக்கு கவலை இல்லையா? என்று ரோகிணி கேட்க, அதற்கு மனோஜ் நான் எதற்கு கவலைப்படணும் அவர் வீட்டை விட்டு போனார்னா அவரா வருவாரு.. எனக்கு சொத்தை பிரித்து கொடுக்க கூடாதுன்னு தான் அவர் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்காரு என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications