சிறகடிக்க ஆசை: கிரிஷை கடத்தும் சிந்தாமணி! கண்டுபிடித்த முத்து! விஜயாவை போலீசில் மாட்டிவிட்ட அண்ணாமலை
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடில், விஜயா கிரிஷை வெளியே அனுப்ப என்ன செய்யலாம் என்று பிளான் போடுகிறார். அப்போது சிந்தாமணி தன்னுடைய அடியாள்களிடம் சொல்லி கிரிஷை கடத்துவதற்காக பிளான் போட்டு கொடுக்கிறார். இதை விஜயாவும் ஏற்றுக்கொள்ள, கடைசியில் கிருஷ் காப்பாற்றப்பட்டானா? இல்லையா? என்பதுதான். இன்றைய எபிசோடு விரிவாக பார்க்கலாமா?
கிரிஷை அவனுடைய பாட்டி விஜயாவின் வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டு போனாதால் விஜயா கோபத்தில் இருக்கிறார். எப்படியாவது இந்த பையனை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று ரோகினியை கூட்டிக்கொண்டு பார்வதி வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் பார்வதி கதை சொல்வதை கேட்டு ஒரு அம்மா பார்வதியை பாராட்டிவிட்டு போயிருக்கிறார். உங்க கதையை கேட்டு எங்களுடைய பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்தது என்று சொன்னதும் பார்வதி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த விஜயா பார்வதி சந்தோஷமாக இருப்பதை பார்த்து கடுப்பாகிறார். பிறகு தான் வந்த விஷயத்தை சொல்கிறார். அதாவது அந்த கிரிஷ் பையனை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று சொல்ல ரோகிணி விஜயாவை சமாளிக்க பார்க்கிறார். அப்போது விஜயா சொன்னதால் சிந்தாமணியும் அங்கு வந்திருக்கிறார். சிந்தாமணியிடமும் விஷயத்தை சொன்னதும் பார்வதி கடுப்பாகி என்னாலலாம் இதற்கு ஒத்துக்க முடியாதுனு கோபப்பட்டு கிளம்பி போய் விடுகிறார்.
பிறகு சிந்தாமணி நான் ஒரு ஐடியா சொல்லுறேன் என்று, அந்த பையன் சின்ன விஷயம் பண்ணுனா கூட சூடு வச்சுருங்க அந்த பையனுக்கு உங்களை பார்த்து பயம் வரணும்னு சொன்னதும் ரோகிணி கோபமாகி கத்துகிறார் அப்படியெல்லாம் செஞ்சா போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்று சொல்ல, அதற்கு விஜயா ஆமா எனக்கும் பயமாயிருக்கு அப்போ அது வேண்டாம் இன்னொரு ஐடியா கொடுங்க என்று சொன்னதும் என் அடிஆள்கிட்ட சொல்லி அந்த பையனை கடத்தி ஒரு ஹாஸ்டல்ல கொண்டு விடுற சொல்லுறேன் என்று சொல்ல அதற்கு விஜயா சம்மதிக்கிறார்.
ரோகிணி எவ்வளவோ சொன்னாலும் அதை விஜயா ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு வெளியே வந்ததும் ரோகிணி மீனாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே மீனா முத்துவுக்கு போன் போட்டு நான் வெளியே இருக்கிறேன் நீங்க கிரிஷை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருங்கன்னு சொல்லுகிறார். முத்துவும் சரி என்று சொல்லி ஸ்கூலுக்கு போகிறார். அதற்குள் சிந்தாமணி கிரிஷை பார்த்து நாங்க மீனா ஆன்ட்டிக்கு தெரிஞ்சவங்க தான், உன்னை கூட்டிட்டு வர சொன்னாங்க வான்னு ஒரு காரில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்.
அடியாள்களுடன் கிரிஷ் போகும் போது, நீங்க யாரு? எங்க கூட்டிட்டு போறீங்கன்னு கத்திக்கிட்டே இருக்கிறான். அப்போது முத்துவின் காரில் கிரிஷை கடத்திட்டு போகும் அடியாட்கள் மோதி விடுகிறார்கள். இதனால் முத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்யும்போது கிரிஷ் உள்ளே இருந்து முத்து அங்கிள் என்று கத்த முத்து அவர்களை துரத்தி அடித்து விசாரிக்கிறார்.
அப்போதுதான் சிந்தாமணி தான் கிரிஷை கடத்த சொன்னது என்ற உண்மை தெரிய வருகிறது. பிறகு கிரிஷை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு முத்து வரும்போது அண்ணாமலை என்னாச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே அண்ணாமலை போலீசுக்கு போன் பண்ண சொல்கிறார். இதனால் விஜயாவுக்கு பிரச்சனை வருகிறதா? இல்லையா? என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications