சிறகடிக்க ஆசை: கிரிஷை ஏன்டி கடத்தின? விஜயாவை வெளுத்த அண்ணாமலை.. வீட்டை விட்டு துரத்தும் மனோஜ்! மிரட்டிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் கிரிஷை விஜயா தான் ஆள் வைத்து கடத்த சொன்னது என்ற உண்மை முத்து மூலமாக அண்ணாமலைக்கு தெரிந்ததால், அண்ணாமலை கடும் கோபத்தில் அவரை அடிக்க பாய்ந்து இருக்கிறார். அதோடு இந்த பிரச்சனையை சரி செய்ய மீனா ரோகிணியை மிரட்டி இருக்கிறார். என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிரிஷை அடி ஆட்களிடம் இருந்து முத்து காப்பாற்றுகிறார். பிறகு கிரிஷ் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். வீட்டில் அண்ணாமலை கிரிஷை பார்த்ததும் என்னாச்சு ரொம்ப பயந்த மாதிரி இருக்கிறான் என்று விசாரிக்கிறார். அதற்கும் முத்து அவனை சிலர் கடத்த வந்துட்டாங்க அதனால்தான் அவன் இப்படி பயந்து போய் இருக்கிறார் என்று சொன்னதும் அண்ணாமலை என்னாச்சு என்று விசாரிக்க சிந்தாமணி ஆட்கள் கடத்தி கொண்டு போக வந்ததையும், தான் காப்பாற்றிய விஷயங்கள் தெரியும் முத்து சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை அந்த சிந்தாமணி எதற்காக கிரிஷை கடத்தனும் என்று கேட்க, அந்த சிந்தாமணி வெறும் அம்புதான் அதை எய்தது நம்ம அம்மா தான். நம்ம அம்மாவுக்கு கிரிஷ் இந்த வீட்டில் இருக்கிறது பிடிக்கல, அதனாலதான் அவங்க சிந்தாமணியிடம் சொல்லி கடத்த சொல்லி இருக்காங்க என்று சொன்னதும், விஜயா அதிர்ச்சியாகி நிற்கிறார். உடனே அண்ணாமலை விஜயாவை அடிக்கப் பாய்கிறார். எல்லோரும் பிடித்துக் கொள்கிறார்கள்.
அதற்கு விஜயா நான் கடத்தி இவனை எங்கேயோ கொண்டு விட சொல்லல ஒரு ஹாஸ்டல்ல தான் கொண்டு விட சொன்னேன் என்று சமாளிக்கிறார். ஆனாலும் விடாமல் அண்ணாமலை திட்ட இனிமேல் நான் இப்படி முடிவு எடுக்க மாட்டேன் என்று விஜயா சொல்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிரிஷை மீனாவின் அம்மா வீட்டில் கொண்டு விடலாமா? என்று முத்து கேட்க அதற்கு மீனா கிரிஷ் இந்த வீட்டு பையன் இங்கே தான் இருப்பா என்று மீனா சொன்னதும் முத்து ஷாக் ஆகிறார்.
அதற்கு மீனா, கிரிஷ் இங்கே இருக்கிறேன் என்று தானே அவங்க பாட்டி கிட்ட சொல்லி இருக்கிறான். எங்க வீட்ல கொண்டு விட்டா அவனை யாரு பாத்துப்பாங்க என்று சொல்லிவிட்டு கிரிஷிடமும் இனி நாங்க வந்து கூப்பிடாம வேற யார் கூப்பிட்டாலும் வரக்கூடாது என்று அட்வைஸ் சொல்கிறார். அதைத் தொடர்ந்து மீனா சமைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஸ்ருதி விஜயா செய்ததை சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ரோகிணியிடமும் கிரிஷ் இங்க இருப்பது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, எனக்கு ஓகே தான் என்று ரோகிணி சொன்னதும், உங்க ஹஸ்பண்ட் கிட்ட நீங்கதான் புரிய வைக்கணும் கிரிஷ் இங்க இருக்க சம்மதிக்க வையுங்க என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஸ்ருதி போனதும் மீனா இனி கிரிஷை இங்கே இருக்க வைக்கிறது உன் பொறுப்பு தான், நீ தான் எல்லா வேலையும் பாக்கணும், இனி கிரிஷ் உங்க கூடதான் நைட் தூங்கணும் என்று ஆர்டர் போடுகிறார்.
கடைசியாக மனோஜ் மாடியில் யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு முத்துவும் ரவியும் வருகின்றனர். அவர்களிடம் கிரிஷ் இங்கு இருக்க கூடாது அந்தப் பையன் ராசி இல்லாதவன், அவன் பேட் வைப்ரேஷனா இருக்கிறான் அவன் வந்த பிறகு வீட்டில் பிரச்சனை தான் வந்துட்டு இருக்குது என்று சொல்ல அதற்கு முத்து அடிக்கப் போகிறார்.
அடுத்ததாக இரவு தூங்கும் போது மனோஜ் மற்றும் ரோகிணி பக்கத்தில் கிரிஷ் தூங்குகிறார். அதை பார்த்ததும் மனோஜ் கோபமாகி கத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications