சிறகடிக்க ஆசை: முத்துக்கு போன் செய்த ஜீவா.. ரோகிணி பற்றி தெரிய வந்த உண்மை.. மனோஜ் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பணம் கொடுத்த விஷயத்தை வைத்து முத்துவும், மீனாவும் ரோகிணி ஏதோ தப்பு செய்திருக்கிறார் என்று சந்தேகப்படுகின்றனர். அதே நேரத்தில் முத்துவுக்கு ஜீவா போன் செய்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி சொன்ன விஷயத்தை முத்துவிடம் மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட முத்து அப்போ அந்த பார்லர் அம்மா எதற்காக பணம் கொடுக்கணும்? பார்லர் அம்மா அவ்வளவு நல்லவ ஒன்னும் கிடையாது.

siragadikka aasai serial vijay tv

இதுல ஏதோ வில்லங்கம் இருக்கு என்று சொன்னதோடு, இப்ப ஒருவர் ஒரு பொருள் எடுத்தால் அதை மாட்டிக்க போறோம்னு தெரிந்ததுமே அதை திருப்பி கொடுப்பாங்க.. அப்படித்தான் இருக்கு இவங்க செஞ்ச செயல் சந்தேகமாக இருக்கு என்று பாயிண்டை பிடித்து விடுகிறார்.

இதை தொடர்ந்து மீனா கிச்சனில் இருக்கும்போது அங்கு வந்த ஸ்ருதி தனக்கு ஆம்லெட் போட்டு தருமாறு சொல்கிறார். அப்போது ரோகினி வர தனக்காக காசு கொடுத்ததற்கு நன்றி என்று மீனா சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். உங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரிஞ்சது என்று கேட்க, எனக்கு பார்வதி ஆன்ட்டி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க என்று சொன்னதும், அவங்ககிட்ட உண்மையை சொல்ல வேண்டாம் குடும்பத்தில் பிரச்சனை வரும்னு சொன்னேன். ஆனா அவங்க சொல்லிட்டாங்களா என்று ஒன்னும் தெரியாதது போல ரோகிணி கேட்கிறார்.

அதற்கு மீனா என் மேல தப்பு இல்லன்னு குடும்பத்தில் எல்லாருக்கும் தெரியும். பிறகு எதுக்கு நீங்க காசு கொடுத்தீங்க? என்று கேட்க, இந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் கொடுத்தேன் என்று சொல்லி ரோகினி எஸ்கேப் ஆகிறார். அடுத்ததாக முத்து வந்து நான் சொன்ன மாதிரி பேசுனியா? ரோகிணி ரியாக்சன் எப்படி இருந்தது என்று கேட்க, அவங்க முகமே வேற மாதிரி போயிட்டு என்று மீனா நடந்ததை சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு ரோகிணி கொடுக்கும் அதிர்ச்சி! போட்டோவை பார்த்து அதிர்ந்த மனோஜ்
இதனால் அவங்க லைஃப்ல ஏதோ வில்லங்கம் இருக்கு அதை கண்டுபிடிக்கணும் என்று முத்து சொல்கிறார். அந்த நேரத்தில் முத்துவுக்கு மனோஜின் பழைய காதலி ஜீவா போன் பண்ணி தான் கனடாவில் இருந்து வருவதாக கால் பண்ணுகிறார் அதற்கு முத்து நீங்க இங்க வந்ததும் போன் பண்ணுங்க நான் வந்து ஏர்போர்ட்டில் கூட்டிட்டு போரேன் என்று முத்து சொல்கிறார்.

அடுத்ததாக விஜயா மீது மீனா மாவு கொட்டிய போது ஸ்ருதி போட்டோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் போட்ட போட்டோவை ஒருவர் பிரிண்ட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். இது கண் திருஷ்டி போட்டோ என்று அதை மனோஜ் கடைக்கு வந்து விற்கிறார்.

இதை பார்த்து ரோகினியும் மனோஜியும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் அந்த நபர் இது ஆந்திராவில் பேமஸான உக்கிரகாளி என்று அந்த போட்டோவை கொடுக்க இது என்னுடைய அம்மாவின் போட்டோ என்று மனோஜ் மொத்தமாக வாங்கி விடுகிறார்.

இறுதியாக மீனாவை பாலோ செய்யும் நபர் மீனாவிடம் பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா அவரை பார்த்ததும் முத்து சொன்னது போல பெப்பர் ஸ்ப்ரேயை கையில் தூக்கிக்கொண்டு அவரை நோக்கி போக அந்த நபர் மீனாவை பார்த்து பயந்து ஓடி விடுகிறார். அப்போது அந்த பக்கமாக சீதா ஆட்டோவில் வர மீனாவிடம் என்னவென்று விசாரிக்கிறார். மீனா நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+