சிறகடிக்க ஆசை: மீனா போட்ட பிளான், வசமாக சிக்கும் ரோகிணி! மனோஜ் கொடுத்த அதிர்ச்சி, கோபத்தில் விஜயா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். இன்று கிரிஷால் விஜயாவிற்கு புது பிரச்சனை வருகிறது. அதனால் எப்படியாவது அவனை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று விஜயா ப்ளான் போட ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
கிரிஷ் வீட்டுக்கு வந்ததால் விஜயாவும் மனோஜும் தான் அதிகமாக கோபத்தில் இருக்கின்றனர். இதனால் மனோஜ் தன்னுடைய தம்பிகளானா ரவி மற்றும் முத்துவை கூப்பிட்டு கிரிஷை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து நீ எதற்காகடா அந்த பையனை வீட்டை விட்டு வெளியே துரத்தனும்னு சொல்லுற என்று கேட்க, அந்த பையன் நம்ம வீட்டிலேயே வளர்ந்தான்னா பிறகு சொத்தில் பங்கு கேட்பான்டா என்று மனோஜ் சொல்லுதும், ரவி திட்டி விட்டு போகிறார்.

அதை தொடர்ந்து இரவு தூங்கும் போது மீனா கிரிஷிடம் நீ இன்னைக்கு உங்க அம்மா கூட போய் படுத்து தூங்கு என்று சொல்கிறார். உடனே கிரிஷ் மீனா பக்கத்தில் இருந்து எழுந்து ரோகிணி ரூமுக்கு போகும்போது அங்கு விஜயா வந்து விடுகிறார். விஜயாவை பார்த்ததும் கிரிஷ் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து ஆடிக் கொண்டு இருக்க, அதை பார்த்து பயந்து போய் விடுகிறார்.
விஜயா உடனே இந்த குட்டி சாத்தான் தொல்லை தாங்க முடியல. இவன் தூக்கத்துல நடக்குறானா அல்லது என்னை பயமுறுத்துறானான்னு தெரியலையே என்று தண்ணீர் பிடித்து விட்டு பயந்து போய் ரூமில் படுத்து கொள்கிறார். பிறகு ரோகிணியை எழுப்பி கிரிஷின் அம்மா பக்கத்தில் படுத்துக்கொள்ள ரோகிணி முதலில் பயப்படுகிறார்.
மனோஜ்க்கு தெரிந்தால் மனோஜ் திட்டுவானே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ஆனாலும் தன்னுடைய மகன் பக்கத்தில் கொடுத்ததால் சந்தோஷமாக தூங்குகிறார். காலையில் கிரிஷ் தன் பக்கத்தில் படுத்து இருப்பதை பார்த்ததும் மனோஜ் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். உடனே விஜயாவும் மகனுக்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை வந்து என்ன விஷயம் என்று கேட்க, இவன் எப்படி என் பக்கத்தில் வந்து படுத்தானு தெரியல என்று மனோஜ் சொல்ல, அதற்கு க்ரிஷ் எனக்கு மனோஜ் அங்கிள் பக்கத்தில் படுக்கணும் போல இருந்துச்சு அதனால தான் போய் படுத்தேன் என்று சொல்கிறார்.
உடனே அண்ணாமலை மனோஜை திட்டுகிறார். அதோடு உன் பாசம் அவனுக்கு கிடைக்கல என்பதற்காக தான் அவன் உன் பக்கத்துல வரணும்னு ஆசைப்படுறான் என்று மனோஜ்க்கு அட்வைஸ் கொடுக்கிறார். ஆனாலும் மனோஜ் கேட்டது போல தெரியவில்லை. அண்ணாமலை பேசுவதை கேட்டு கடுப்பான விஜயா ரோகிணியிடம் பார்வதி வீட்டுக்கு வா பேசணும் என்று சொல்கிறார். உடனே ரோகினி இப்போ என்ன பிளான் பண்ண போறாங்கன்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ரவியின் ஓனர் நீத்து ரவி மற்றும் நீத்து இருவரும் இருக்கும் புகைப்படத்தை ஸ்ருதிக்கு அனுப்புகிறார். அதை பார்த்ததும் ஸ்ருதி வாழ்த்துக்கள் என்று மெசேஜ் அனுப்பி விட்டு ரவிக்கு போன் பண்ணி திட்டுகிறார். ரவி எவ்வளவோ சமாதானம் சொன்னாலும் ஸ்ருதி கோபமாக திட்டிக் கொண்டிருக்க, உடனே ரவி நீத்துவிடம் வந்து நீங்க எதுக்காக போட்டோ அனுப்புனீங்க? என்று கேட்க, நாம ஒரு ஈவென்ட்க்கு போறோம் மத்தபடி ஒன்னும் இல்ல என்று சொல்ல அதற்கு ரவி கல்யாணமானவங்களோட வாழ்க்கையில் விளையாடுங்க.
நீங்க என்ன நினைப்புல அனுப்பி இருந்தாலும் பரவால்ல இதோட நிறுத்திக்கோங்க என்று ரவி திட்டி விட்டுப் போகிறார். உடனே நீத்து நாம போட்ட பிளான் நல்லா ஒர்க் அவுட் ஆகுது என்று சந்தோஷப்படுகிறார். கடைசியாக பார்வதி வீட்டுக்கு விஜயா கோபமாக வர அந்த நேரத்தில் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு சிந்தாமணியும் ரோகிணியும் அங்கு வந்ததும் அந்த குட்டிச்சாத்தான் கிரிஷ் உடைய ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரிச்சிட்டே போகுது.
இனி அவனை வீட்டை விட்டு துரத்த என்ன பண்ணலாம் என்று மீண்டும் பிளான் போடுகிறார். அதற்கு சிந்தாமணி அந்த முத்து மட்டும் வராமல் இருந்திருந்தால் என் ஆளுங்க அந்த பையனை சரியா கடத்திருப்பாங்க என்று சொல்ல, நல்லவேளை கடத்தல இல்லைன்னா நான் போலீஸ்க்கு போய் இருப்பேன், வேண்டாம் இந்த பிளானே இனி போதும்... வேற ஏதாவது யோசிப்போம் என்று சொல்லிவிட்டு, ரோகிணியிடம் நீ கதவை பூட்டி வச்சுக்க அப்போதான் அந்த பையன் உங்க ரூமுக்குள்ள வர மாட்டான். நீயும் மனோஜும் அந்த பையனை ஏத்துக்கலைன்னா உங்க மாமா அவனை வீட்டை விட்டு அனுப்பிவிடுவார் அது போதும் எனக்கு என்று விஜயா சொல்ல, ரோகிணி யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications