சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன நல்ல செய்தி.. சந்தோஷத்தில் விஜயா.. கடைசியில் தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 7ஆம் தேதி எபிசோடு மனோஜ் மற்றும் ரோகிணி வீட்டில் வந்து நல்ல செய்தி சொல்கின்றனர். அதை கேள்விப்பட்டதும் முத்து கிண்டல் செய்ய கடைசியில் ரோகிணி முத்துவை அசிங்கப்படுத்துகிறார்.
இன்றைய எபிசோடில் மீனாவை ஃபாலோ செய்யும் நபர் மீனாவை பொண்ணு கேட்டு தட்டில் பூ பழத்தோடு வீட்டிற்கே வருகிறார். அண்ணாமலை தான் மீனாவின் அப்பா என்று மீனாவை அவரிடம் பொண்ணு கேட்கிறார். அந்த நேரத்தில் முத்துவும் அங்கு வந்து விடுகிறார். முத்துவை பார்த்ததும் அண்ணே இது உங்க வீடா? என்று அந்த நபர் கேட்க, ஆமாடா நீ என்ன இங்க வந்து இருக்க என்று முத்து கேட்டுக் கொண்டிருக்கும்போது மீனா அங்கு வருகிறார்.

மீனா அந்த நபரை பார்த்தவுடன் டேய் நீ இங்கேயே வந்துட்டியா.. என்று கோபப்பட, முத்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு மீனா நான் உங்ககிட்ட சொன்னேனே என்னை ஒருத்தன் ஃபாலோ பண்ணுறான் என்று அது இவன்தான் என்று சொல்ல முத்துவிடம் அந்த நபர் நானும் இவங்கள தான் காதலிக்கிறேன என்று சொல்கிறார்.
சீதா என்னுடைய அக்கா தான்.. ஆனால் எங்கேயும் அதை சொல்ல மாட்டேன்! தெய்வமகள் சீரியல் நடிகை ஓபன்
பிறகு முத்து ஐடியாவால்தான் பெண் கேட்க வந்த விஷயத்தை எல்லோரிடமும் அந்த நபர் சொன்னதும், முத்து மீனா என்னுடைய மனைவி என்று சொல்கிறார். உடனே அந்த நபர் முத்துவின் கால்களை பிடித்து என்னை மன்னிச்சிடுங்க அண்ணே.. எனக்கு இவங்க உங்க மனைவின்னு தெரியாது.

நான் மீனாவின் கண்களை மட்டும் தான் பார்த்தேன். அவங்களுக்கு திருமணமானது எனக்கு தெரியாது என்று கெஞ்சி புலம்புகிறார். அதைத்தொடர்ந்து நான் மீனாவின் போட்டோவை பார்த்து தான் அவரே பாலோ செய்தேன் என்று சொல்ல, ஸ்ருதி தான் எடுத்த போட்டோவால்தான் அவர் வந்திருக்கிறார் என்றும் தான் போஸ்ட் போட்டதற்கு கீழே நிறைய கமெண்ட்ஸ் வந்திருக்கு என்று இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேத்ரனை 22 வருஷமா தெரியும்.. 2 மகள்கள் பாவம்! 6 மாசமா பட்ட வேதனை.. சீரியல் நடிகர் சதீஷ் எமோஷனல்
அந்த நேரத்தில் விஜயா வந்து நீங்க ரெண்டு பேரும் எப்ப ஒன்னா சேர்ந்தீங்க என்று ஸ்ருதியை திட்டுகிறார். அதற்கு ஸ்ருதி நீங்க பார்வதி ஆன்ட்டி வீட்டில் இருக்கும்போது நாங்க சேர்ந்துட்டோம் என்று பதிலடி கொடுக்கிறார். இறுதியாக மனோஜும் ரோகிணியும் வீட்டுக்கு வந்து எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார்கள்.

எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க மனோஜ்க்கு பிசினஸில் 10 லட்சம் ரூபாய் பிராஃபிட் கிடைத்திருப்பதாக சொல்கின்றார். அந்த நேரத்தில் முத்து மனோஜை கிண்டல் செய்ய அதற்கு ரோகிணி ஹார்ட் வொர்க் மட்டும் போதாது ஸ்மார்ட் வொர்க்கும் வேண்டும் மனோஜ் இதைவிட இன்னும் உயர்ந்த இடத்தை பிடிப்பார் என்று முத்துவை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications