சிறகடிக்க ஆசை: ரவி - மீனாவை பிரிக்க நினைக்கும் ஸ்ருதி.. பயந்து ஓடும் மனோஜ்.. டைவர்ஸ் கன்ஃபார்மா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டிற்கு வந்ததும் ஸ்ருதி ரோகினி இடம் மீனா மற்றும் முத்து பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்க இதை பார்த்து மனோஜ் பயந்து விடுகிறார்.

அதோடு மனோஜ் வேலை செய்யும் இடத்தைப் பற்றி ஸ்ருதி விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதியால் ரோகிணி மற்றும் மனோஜ் வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை வரப்போகிறதா என்று பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் ஸ்ருதியின் அருகில் உட்காரும் விஜயா இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன் என்று பேசிக்கொண்டு இருக்க, அதற்கு ஸ்ருதி கொஞ்சம் கூட அசராமல் அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு, இது எத்தனையாவது நைட் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல்: தேர்தலில் ஈஸ்வரி வைத்த டுவிஸ்ட்.. போலீஸ் ஸ்டேஷன் போன குணசேகரனுக்கு செம அதிர்ச்சி
இதை பார்த்து விஜயா அந்த கணக்கெல்லாம் வேண்டாம். நீ போய் குளிச்சிட்டு ரெடியாகு என்று சொல்ல, அதைத்தொடர்ந்து ஸ்ருதியும் குளித்துக்கொண்டு டிரஸ் மாத்தி கொள்ள அங்கு வரும் விஜயா நீ புடவை கட்டலையா என்று கேட்க எனக்கு புடவை கட்ட தெரியாது என்று ஸ்ருதி சொல்ல, அதற்கு மீனா நான் கட்டி விடவா என்று கேட்கிறார். ஆனால் விஜயா நீ போய் உன் வேலையை பாரு என்று மீனாவை திட்டி அனுப்பிவிட்டு ரோகிணியை அழைத்து புடவை கட்டி மேக்கப் போட்டு விட சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து ரோகினி ஸ்ருதிக்கு மேக்கப் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஸ்ருதி, முத்து மட்டும் ஏன் இந்த வீட்டில் எப்படி இருக்கிறார் என்று கேட்க அதற்கு ரோகிணியை அவர் அப்படித்தான் குடிச்சிட்டு வருவாரு. ஒருமுறை என்னையே அடிச்சுட்டாரு என்று சொல்ல, அதற்கு கோபமான ஸ்ருதி நீங்களும் அவரை அடிக்க வேண்டியது தானே என்று கேட்கிறார்.
அதற்கு ஸ்ருதி முத்து மாமா பேச்சை மட்டும் தான் கேட்பாரு என்று சொல்ல அதற்கு ஸ்ருதி இந்த மாதிரி ஆளுங்களோட ஏன் மீனா வாழ்றாங்க அவங்க நமக்கு கோ சிஸ்டர் தானே நாம இரண்டு பேரும் சேர்ந்து அவங்களுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்து அவங்கள சுதந்திரமா விடனும் என்று சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணிக்கு அதிர்ச்சியாகிறது. வெளியில் இருந்து இதை மனோஜ் கேட்டு அதிர்ச்சியாகிறார்.
சூழ்ச்சியால் மீனாவிடம் சண்டையிடும் முத்து.. விஜயாவை நோஸ்கட் செய்த ஸ்ருதி.. பிரிய போகுதா குடும்பம்?
பின்னர் உங்க ஹஸ்பண்டு எப்படி என்று ஸ்ருதி கேட்க, அதற்கு ரோகிணி அவர் கார் கம்பெனியில் வேலை செய்கிறார். நிறைய படிச்சி இருக்காரு என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க உடனே ஸ்ருதி நாங்களும் கார் வாங்கணும் அதனால உங்க ஹஸ்பண்ட் வேலை செய்ற ஷோரூமில் வாங்கலாமா என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த மனோஜ்க்கு பக் என்று ஆகிறது.
உடனே ரோகிணியை அழைத்து இந்த பொண்ணு கிட்ட ஜாக்கிரதையாக இரு. முதல் நாளே டைவர்ஸ் பத்தி எல்லாம் பேசுது என்று புலம்ப, அதற்கு ரோகினி அவங்களோட நான் மெயின்டன் பண்ணா தான் நமக்கு நாளைக்கு பிசினஸ் ஆரம்பிச்சா ஹெல்ப்பா இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் உனக்கு என்ன ஹெல்ப் நீயே பெரிய பணக்கார பொண்ணு என்று சொன்னதும் ரோகிணிக்காக கோபம் வருகிறது. அதைத் தொடர்ந்து ஸ்ருதி கார் வாங்குனா உனக்கு கமிஷன் கிடைக்கும் இல்ல என்று ரோகிணி மனோஜிடம் கேட்க..,
மனோஜ் நானே வேலையில்லாமல் இருக்கிறேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அவங்க என்னோட கம்பெனியில் கார் வாங்குனா எனக்கு கமிஷன் கிடைக்காது. அதனால வேற கம்பெனியில் வேண்டும் என்றால் வாங்க சொல்லலாம். அதோடு நம்ம பர்ஸ்ட் கார் வாங்குவோம். அதுவரை அவங்கள அமைதியா வச்சிரு என்று சமாளிக்க அதற்கு ரோகிணியும் சரி என்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications