சிறகடிக்க ஆசை: பழியை முத்து மீது போடும் ரவி.. அண்ணாமலை எடுத்த முடிவு.. கலங்கி நிற்கும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் முத்து தான் என்று மனோஜ் மற்றும் ரவி இருவரும் சேர்ந்து சண்டை இடுகின்றனர்.

அதே நேரத்தில் சாந்தி முகூர்த்தத்துக்கு போகும் ரவி மற்றும் ஸ்ருதியை ஆசிர்வாதம் செய்ய முத்து வரவேண்டும் என்று அண்ணாமலை கூறுகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

siragadikka aasai serial December 8th promo and episode full update

இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் மனோஜ், ரோகிணி இடம் ஸ்ருதி கிட்ட லிமிட்டா இருந்துக்கோ என்று சொல்ல அதற்கு ரோகிணி அவளால நமக்கு நிறைய காரியமாக வேண்டியிருக்கு என்று சொல்ல, அதற்கு மனோஜ் உங்க அப்பாவே பெரிய பணக்காரர் தானே அவர் செய்ய மாட்டாரா என்று கேட்க அதற்கு ரோகிணி எல்லாத்தையுமே நான் அப்பாகிட்ட கேட்க முடியுமா? ஸ்ருதியால நமக்கு கொஞ்சம் காரியமாக வேண்டியது இருக்கு.

அதே சமயம் தான் லிமிட்டா தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து மீனா ஸ்ருதியை பார்த்து அழகா இருக்கீங்க. இன்னைக்கு தான் கல்யாணம் பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா இங்க வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க, உன்னை பால் தானே காய்ச்சி வைக்க சொன்னேன்.

siragadikka aasai serial December 8th promo and episode full update

பாதாம், பிஸ்தா, முந்திரி, குங்குமப்பூ எல்லாம் வச்சிருக்கேன் அதை போட்டு சுண்ட காய்ச்சி வை என்று சொல்கிறார். மீனாவும் அது போல் காய்ச்சி வைத்து விடுகிறார். அப்போது அங்கு வரும் முத்து பாலை நமக்காகத்தான் மீனா வச்சிருப்பாள் என்று நினைத்து குடித்துவிட்டு இந்த பால் குடிச்சதும் தெம்பா இருக்கு என்று சொல்கிறார்.

உடனே விஜயா அதை ஏன்டா குடிச்ச? அது ரவி,ஸ்ருதிக்கு போட்டு வச்சது என்று சொல்ல, அதற்கு முத்து அவங்களுக்கெல்லாம் பால் ஒரு கேடா என்று திட்டுகிறார். அடுத்து மொட்டை மாடியில் முத்து இருக்கும்போது அங்கு ரவி வந்து முத்துவிடம் பேச முயற்சிக்கிறார். அப்போது முத்து நீ எதுக்கு இங்க வந்த, உன்னால தான் அப்பா லாக்கப்பில் இருந்தாரு, அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது என்று திட்டுகிறார்.

அதற்கு ரவி நான் என்ன பண்ணுனேன்? உன்னோட கோபத்தால் தான் இப்படி ஆயிடுச்சு. நீ குடிச்சிட்டு வந்து அன்னைக்கு பெரிய அண்ணியை அடிச்ச, அதனாலதான் அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்கிறார். அதனால் கோபமான முத்து பழியை என் மேல போடுறியா என்று ரவியிடம் சண்டை போட அப்போது அங்கு வரும் மனோஜ் ஆமாம் உன்னுடைய கோபத்தால் தான் இப்படி ஆயிடுச்சு என்று முத்துவிடம் சண்டை போடுகிறார்.

உடனே முத்து திருட்டு பசங்களா நீங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா? என்று ரெண்டு பேரிடமும் சண்டை போடுகிறார். அடுத்த கட்டத்தில் அண்ணாமலை வீட்டிற்கு வந்ததும் விஜயா ரவி-ஸ்ருதிக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிச்சிருக்கேன் அவங்கள ஆசிர்வாதம் பண்ணனும் வாங்க என்று கூப்பிட அதற்கு அண்ணாமலை முத்து எங்க அவனையும் கூப்பிடுங்க.

siragadikka aasai serial December 8th promo and episode full update

எல்லோரும் சேர்ந்து தான் இவங்கள ஆசிர்வாதம் பண்ணனும் என்று சொல்கிறார். அதற்கு விஜயா, மனோஜ், ரோகிணி எல்லாரும் முத்து வந்தா திட்ட தான் போறான். அவனை கூப்பிட வேண்டாம் என்று சொல்கின்றனர். ஆனால் அண்ணாமலை அவனும் தான் வரணும் நீ என்று மீனாவிடம் போய் கூட்டிட்டு வர சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+