சிறகடிக்க ஆசை: நான் தான் கல்யாணி, உண்மையை சொன்ன ரோகிணி.. கோபத்தில் முத்து! ஆடிப்போன விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி நான்தான் கல்யாணி என்ற உண்மையை சொல்லி இருக்கிறார். ஆனால் எதிர்பார்க்காத சில ஒரு விஷயங்கள் நடந்திருக்கிறது. அதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்ப்போம்.
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முத்து மீனாவை கூப்பிடுகிறார். ஆனால் மீனா வர முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதால் வேறு வழியின்றி முத்து அந்த ஷோக்கு போகும் முடிவை கைவிடுகிறார். இதை அடுத்து சந்தோசமாக வீட்டிற்கு வரும் மனோஜ் ரோகிணியை கட்டிப்பிடித்து தான் ரொம்ப ஹாப்பியாக இருப்பதாக சொல்கிறார்.

தற்போது சீர்வரிசை ஆர்டர் அதிக அளவில் வருவதாகவும் அதனால் பிசினஸ் டெவலப் ஆகி இருப்பதாகவும் மனோஜ் சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணி இதையெல்லாம் கேட்டு சந்தோஷப்படாமல் அமைதியாகவே இருக்கிறார். பிறகு மனோஜை திரும்பி பார்த்து முறைக்கிறார். ரோகிணியின் ரியாக்ஷனை பார்த்து மனோஜ் என்னாச்சு ரோகினி என்று கேட்க, நான் ரோகிணி இல்லடா கல்யாணி என்று சொல்கிறார்.
நான் தான் கிரிஷின் அம்மா கல்யாணி என்று சொன்னதும், மனோஜ் பயந்து போய் ஓடி கொண்டிருக்கிறார். கல்யாணியின் ஆவியாக பேசிய ரோகிணி மனோஜிக்கு சில கண்டிஷனை போடுகிறார். என்னுடைய மகன் கிரிஷ் மீது நீ பாசமா நடந்து கொள்ள வேண்டும். அவன் இப்போ பசியில் இருக்கிறான் அவனுக்கு நீ தான் சாப்பாடு ஊட்டி விடணும். இல்லனா உங்க அம்மாவை கொன்னுடுவேன், உன்னுடைய பிசினஸை வளர விடாம பண்ணிடுவேன்னு சொன்னதும் மனோஜ் பயந்து போய் வருகிறார்.
அங்கு தனியாக இருந்த கிரிஷை கூப்பிட்டு சாப்பிட்டியா என்று கேட்க, அவன் இன்னும் சாப்பிடவில்லை என்றதும் மனோஜ் இட்லி ஊட்டி விடுகிறார். அதை பார்த்து குடும்பத்தினர் எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அப்போது அங்கு வரும் விஜயா மனோஜை பார்த்து கடுப்பாகிறார். என்னடா பண்ணிட்டு இருக்க என்று கேட்க அவன் பசியில் இருக்கிறதால அவனுக்கு இட்லி ஊட்டி விடுறேன் என்று மனோஜ் சொல்கிறார்.
எதற்காக இப்படி செய்கிறாய் என்று விஜயா கேட்கிறார். அதற்கு கோவிலில் ஒரு சாமியார் பசியில் இருக்கும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டால் பிசினஸ் நல்லா டெவலப் ஆகும் என்று சொன்னதால் இப்படி செய்வதாக சொல்கிறார். அதைக் கேட்டு முத்து கடுப்பாகி இப்பவும் நீ பிசினஸுக்காக தான் இப்படி செய்றியா? பாசத்தால இல்லையா என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா, எவனோ ஏதாவது சொன்னா அதை அப்படியே நம்பிடுவியா நிறுத்துடா என்று கோபப்படுகிறார். அதற்கு மீனா, முத்து விஜயாவிடம் சண்டைக்கு போகின்றனர். ஆனாலும் விஜயா மனோஜை சாப்பாடு ஊட்டுவதை தடுக்க அதற்கு மனோஜ் நிறுத்தவில்லை. அப்போது கிரிஷ் இன்னைக்கு உங்க கூட தூங்கவா என்று கேட்க, அதற்கு மனோஜ் சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications