சிறகடிக்க ஆசை: ஸ்ருதியால் அண்ணாமலைக்கு மீண்டும் நெஞ்சுவலி! முத்துவுக்கு எதிராக மாறிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டுக்கு வந்த மூன்று மருமகள்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கிளாஸ் எடுக்க அதற்கு ஸ்ருதி எதிர்பார்க்காத செயலை செய்து இருக்கிறார்.
அதே நேரத்தில் முத்துக்கு எதிராக மீனா பேச அதைக் கேட்டு முத்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை ஸ்ருதி மற்றும் ரவியை ஆசீர்வாதம் செய்வதற்காக முத்துவை கூட்டிட்டு வரச் சொல்லி மீனாவை அனுப்பி வைக்க மீனா முத்துவை கீழே வரச் சொல்லி கூப்பிடுகிறார். அப்போது முத்து, ரவியும் மனோஜும் சேர்ந்து அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததற்கு நான் தான் காரணம் என்று சொன்னதை சொல்லி வருத்தப்பட்டு கோபப்படுகிறார்.
அதற்கு மீனா சொல்றவங்க ஏதாவது சொல்லட்டும் என்று முத்துவை ஆறுதல் படுத்தி சரி கீழே வாங்க உங்களை ஆசீர்வாதம் பண்ண மாமா கூப்பிட்டார் என்று சொல்ல முதலில் முத்து வர மறுக்கிறார். பிறகு மாமாவோட வார்த்தைக்கு மரியாதை கொடுப்பீங்களா கொடுக்க மாட்டீங்களா என்று மீனா சொல்ல அதற்கு முத்து கீழே இறங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் அண்ணாமலை ஆசிர்வாதம் பண்ண சொன்னதும் இவங்களை எதுக்கு ஆசீர்வாதம் பண்ணனும் என்று கேட்க, அதற்கு விஜயா பார்த்தீங்களா இதுக்கு தான் இவன் வேண்டாம் என்று சொன்னேன் என்று சொல்ல, இது சரி நானும் போறேன் என்று முத்து கிளம்ப அதற்கு அண்ணாமலை தடுத்து நிறுத்தி பழசை எல்லாம் மறந்துட்டு ஆசிர்வாதம் பண்ணு என்று சொல்கிறார்.
பிறகு எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்து முடித்த பிறகு அண்ணாமலை மூன்று மருமகள்களையும் கூப்பிட்டு நீங்க மூன்று பேரும் எனக்கு மகள்கள் மாதிரி தான். இந்த குடும்பம் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும். அதுக்கு நீங்க மூணு பேரும் ஒத்துமையா இருக்கணும் என்று அறிவுரை கூறுகிறார். அதோடு மீனா நீங்க பெருமைப்படுற மாதிரி நடந்து கொள்வோம் என்று சொல்கிறார்.

அதுபோல ரோகினி எனக்கு இந்த குடும்ப மாதிரி பெரிய குடும்பத்தில் வாழ ஆசைப்பட்டேன் அது இன்னைக்கு நடந்திருக்கு என்று சொல்கிறார். அப்போது ஸ்ருதி கைத்தட்டி சூப்பர் அங்கிள் என்று பாராட்டுகிறார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு என்று சொல்லி அண்ணாமலையை கட்டிப்பிடிக்க எல்லோரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
பிறகு சரி வா போகலாம் என்று ரவியை கூட்டிக்கொண்டு ஸ்ருதி போக விஜயா மிரண்டு நிற்கிறார். பிறகு ஸ்ருதிக்கு ரவி அட்வைஸ் பண்ண அதற்கு ஸ்ருதி இது கிளாஸ் ரூமா ஃபர்ஸ்ட் நைட் ரூமா? இப்போ இதெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லி ரவி மூடை மாத்தி ரொமான்ஸ் ஆக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா கதவை தட்டி பால் கொடுக்க ஸ்ருதி எங்களுக்கு வேண்டாம்.

வயிறு ஃபுல்லா இருக்கு, நீங்களே குடிங்க என்று சொல்ல, இது சம்பிரதாயம் என்று மீனா கொடுக்கிறார். பிறகு நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும் என்று மீனா அறிவுரை சொல்ல, மத்தவங்களுக்காக வாழ கூடாது எங்களுடைய சந்தோஷத்துக்காக வாழனும் என்று சொல்லி ஸ்ருதி ரூமுக்குள் சென்று விடுகிறார்.
ரவி அவ மனசுல பட்டதை பேசிட்டா தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்ல நீங்கதான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகணும் என்று சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து மொட்டை மாடிக்கு போகிறார். மொட்டை மாடியில் முத்து அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததற்கு நான் தான் காரணம் என எல்லோரும் சொன்னதையே புலம்பி கொண்டு இருக்க அங்கு வரும் மீனாவிடம் மீண்டும் இது பற்றி பேச அப்போது மீனா ஆமா நீங்க தான் காரணம் என்று சொல்லி முத்துவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது..
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications