அண்ணாமலைக்கு எமனாகும் ஸ்ருதி.. கோபத்தில் முத்து எடுத்த முடிவு.. கை நீட்டிய ரவி.. உடைந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். அதில் ஸ்ருதி வீட்டில் கொசு மருந்து அடித்ததால் அது அண்ணாமலைக்கு அலர்ஜியாகி அண்ணாமலைக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இதனால் முத்து வீட்டில் பிரச்சனை செய்கிறார்.

முத்து வீட்டில் பிரச்சனை செய்ததால் ரவி மற்றும் ஸ்ருதிக்கு இடையே சண்டை வெடிக்கிறது. இதனால் கோபத்தில் விஜயா திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December February 12th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலைக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட அவரை ஹாஸ்பிடலில் மீனா சேர்த்திருக்கிறார். இந்த விஷயம் முத்துவுக்கு தெரியவந்ததும் செல்வத்தை கூட்டிக்கொண்டு முத்து ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்து ஓடி வருகிறார். அங்கு அவருக்கு ஸ்டண்டு வச்சதால் கொசு மருந்து அடித்தது அலர்ஜி ஆகிவிட்ட மாதிரி இருக்கு.

ஹாஸ்பிடலில் அட்மிஷன் செய்ததால் பெரிய பிரச்சனை இல்ல அவர் காப்பாற்றப்பட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு 15 ஆயிரம் பணத்தை கட்ட வேண்டும் என்று சொல்ல முத்து பணத்துக்கு என்ன செய்யலாம் என்று தவிக்கிறார். அப்போது மீனா தாலியை கழட்டி கொடுக்க முயற்சி செய்ய அதற்கு முத்து வேண்டாம் என்று மறுத்துவிடுகிறார். பிறகு செல்வம் தான் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து ஹாஸ்பிடல் பில்லை கட்டி அண்ணாமலையை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர்.

siragadikka aasai serial December February 12th episode full update

பிறகு ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் விஜயா எல்லாத்துக்கும் காரணம் இந்த மீனாதான் என்று மீனாவை திட்டிக் கொண்டிருக்க அப்போது அங்கு ஸ்ருதி கொசு மருந்து அடித்ததால் தான் அண்ணாமலைக்கு பிரச்சனை ஆகிவிட்டது என்பது தெரிய வந்ததும் விஜயா வழக்கம் போல வாயை மூடி கொள்கிறார். பிறகு ரவி மற்றும் மனோஜ் வர முத்து ரவியை திட்டுகிறார். மரியாதையா உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வீட்டை விட்டு வெளியே போயிடு என்று கோபப்படுகிறார்.

siragadikka aasai serial December February 12th episode full update

அப்போது அண்ணாமலையை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட அதை பார்த்ததும் ஸ்ருதி ஒரு நாளில் மாமாவை வீட்டுக்கு விட்டுட்டாங்க அப்போ அவருக்கு உடம்புக்கு பெருசா எதுவும் இல்லல்லா? என்று கேட்க அதற்கு முத்து கோபப்பட்டு திட்டுகிறார். அதற்கு ஸ்ருதி இப்ப எதுக்கு என்னை திட்டிட்டே இருக்கீங்க. அது எதிர்பாராத விதமா நடந்த விபத்து தான். அங்கிளுக்கு கொசு மருந்து ஆகாதுன்னு எனக்கு எப்படி தெரியும்.

நான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே இப்படி செஞ்சேன். டெங்கு மலேரியா வந்துடக்கூடாது என்று தான் கொசு மருந்து அடிச்சேன் என்று சொல்ல அதற்கு முத்து நீ வேணும்னு அடிச்சி இருப்ப விஷம் என்று திட்டுகிறார். இதனால் முத்துவுக்கு ஸ்ருதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஸ்ருதி ரவியை அமைதியா இருக்க சொல்லு என்று கோபப்படுகிறார். அதற்கு ரவி நீ அமைதியா இரு என்று சொல்லி ஸ்ருதி இடம் கோபப்பட இந்த வீட்டில் எல்லாருமே நல்லா இருக்கும்னு நினைச்சது என்னுடைய தப்புதான் என்று கோபப்பட்டு ஸ்ரு ரூமுக்குள் போய்விடுகிறார்.

siragadikka aasai serial December February 12th episode full update

பிறகு ரவி அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்க நீ எதுக்குடா மன்னிப்பு கேட்கிற அதான் எனக்கு ஒன்னும் ஆகலையே சரி விடு உன் பொண்டாட்டியை போய் சமாதானப்படுத்து என்று அண்ணாமலை அனுப்பி வைக்கிறார். அப்போது முத்து கட்டிலை எடுத்து ரூமுக்குள் போட்டு அண்ணாமலையை அங்கு படுக்க வைக்கிறார். அப்போது ஸ்ருதி மற்றும் ரவிக்கும் இடையே வாக்குவாதம் வெடிக்கிறது.

அப்போது ரவி, செஞ்ச தப்பை ஒத்துக்கவே உன்னால முடியல. உனக்கு இவ்வளவு திமிரா என்று ரவி கேட்க அதற்கு ஸ்ருதி வேகமாக வந்து அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனால் திரும்பவும் ஸ்ருதி மற்றும் ரவிக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. பிறகு கையில் கிடைத்த பொருட்களை எடுத்து இருவரும் மாறி மாறி தாக்கி கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் அமைதியாக இனி நீயும் அடிக்க வேண்டாம் நானும் அடிக்க வேண்டாம் என்று பொருள்களை கீழே வைத்து சமாதானம் ஆகின்றனர்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகின்றது. அதை தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் விஜயாவிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிட்டு போனது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது சிசிடிவி மூலமாக முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+