சத்யா திருட்டால் மீனாவை அவமானப்படுத்தும் விஜயா.. அண்ணாமலையின் கண்டிஷன்.. அதிர்ச்சியில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 15ஆம் தேதி எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். அதில் சத்யாவிற்கு அடிபட்டு இருப்பதை வைத்து மீனாவை விஜயாவும் மனோஜூம் வீட்டில் அசிங்கப்படுத்துகின்றனர். அதற்கு அண்ணாமலை முக்கியமான ஒரு கண்டிஷனை போட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அண்ணாமலை சொன்னதால் ஹாஸ்பிடலுக்கு போய் சத்யாவை பார்க்க போன முத்துவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சத்தியா ஹாஸ்பிடலில் இருக்க மீனாவிடம் அவருடைய அம்மா மாப்பிள்ளைக்கு சொல்லிட்டியா அவர் எப்ப வரன்னு சொன்னாரு என்று விசாரிக்கிறார். அதற்கு மீனா அவர் சவாரிக்கு போய் இருக்கிறதா சொன்னாரு ரொம்ப தூரம் போய் இருக்காரு என்று சொல்ல அதற்கு மீனாவின் அம்மா சரி அவர் பொறுமையா வரட்டும் என்று சமாதானம் ஆகிறார்.
பிறகு மீனா வீட்டிற்கு வர அப்போது அண்ணாமலை மீனாவிடம் உன்னுடைய தம்பிக்கு இப்போ எப்படி இருக்கு என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டான் என்று மீனா சொல்ல அதைக்கேட்டு மனோஜ் உன் தம்பிக்கு தான் பைக் கிடையாதே? எதுவும் திருட்டு பைக்கா என்று அவமானப்படுத்துகிறார். அதற்கு அண்ணாமலை மனோஜை திட்ட அப்போது விஜயா அவன் என்ன தப்பா கேட்டுட்டான்.

அவன் முத்து பைக்கை திருட வந்தவன் தானே என்று விஜயாவும் தன்னுடைய பங்குக்கு சத்யாவை பற்றி தவறாக பேச அதற்கு அண்ணாமலை ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க என்று கோபப்படுகிறார். இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி மீனாவிடம் உங்க தம்பி திருடனா என்று கேட்கிறார். அப்போது ரூமிற்குள் இருந்து முத்து வெளியே வர அதை பார்த்ததும் மீனா நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா? அப்புறம் எதுக்கு ஹாஸ்பிடல் வரலை என்று கேட்க அதற்கு தேவையில்லாத வேலை பண்ணிட்டு போய் கீழே விழுந்து வருவான் நான் அவனை பார்க்க வரணுமா என்று கோபப்படுகிறார்.
அதற்கு மீனா நீங்க வருவீங்கன்னு அம்மா எதிர்பாத்துட்டு இருந்தாங்க. நாங்க அங்க மூணு பொம்பளைங்க என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தோம் என்று சொல்ல அதற்கு முத்து காலேஜ் போற பையன் காலேஜ் போறானா இல்லையான்னு பாக்கணும். இல்லன்னா இப்படி தான் நடக்கும் என்று கோபப்பட அதற்கு மீனா அவன் இப்போ ஒழுங்கா தான் இருக்கான் என்று சொல்ல அதற்கு முத்து கிழிச்சான் என்று கோபப்படுகிறார்.

அப்போது நடந்த உண்மையை சொல்ல முடியாமல் முத்து தவித்துக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை நீ பண்றது ரொம்ப தப்பு என்ன இருந்தாலும் அவன் உன்னுடைய மச்சான். நீ தான் அந்த குடும்பத்துக்கு அப்பாவா இருக்க வேண்டியது. நீ நாளைக்கு காலைல முதல் வேலையா போய் அவளை பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வா என்று சொல்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு முத்து சரி என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து அடுத்த நாள் ஹாஸ்பிடலில் அம்மாவுக்கு போன் பேச வெளியே வருகிறார். அப்போது சீதாவும் மாத்திரை வாங்க மெடிக்கல் ஷாப்புக்கு போகும்போது முத்து சத்யாவிடம் கை எப்படி இருக்குன்னு கேட்க அவருக்கு சத்யா கொஞ்சம் கூட பயமே இல்லாமல் திமிராக அதான் நீங்க கையை உடைத்து விட்டுட்டீங்களா? அப்புறம் எதுக்கு வந்தீங்க என்று திட்டுகிறார். அதற்கு முத்து நீ பண்ணுன வேலைக்கு தான் உன்னை அடிச்சேன் என்று சொல்கிறார்.
அதற்கு சத்தியா நீங்க என் பிரண்டை அடிச்சீங்க அதுக்காக நான் உங்களை அடிச்சேன் என்று சத்யா சொல்ல அதற்கு முத்து நான் அதுக்காக அடிக்கலை என்று சொல்லி சத்தியா விஜயாவிடமிருந்து பணத்தை திருடிட்டு போன வீடியோவை காட்டுகிறார். அதை பார்த்ததும் கொஞ்சம் கூட பயமில்லாமல் இதுல என்ன தப்பு இருக்கு. உங்க அம்மா என்னை திருடன்னு சொல்லி அன்னைக்கு திட்டுனாங்க.

அதனால்தான் நான் அப்படி பண்ணுனேன் என்று பேசுகிறார். அதோடு பணம் இருந்தா தான் இந்த உலகத்தில் மரியாதை இருக்கும். அதனால் நான் என் இஷ்டத்துக்கு தான் என்னுடைய வாழ்க்கை அமைச்சுக்குவேன். உங்க வீட்டுல உங்க பணக்கார மருமகளுக்கு இருக்கிற மரியாதை எங்க அக்காவுக்கு இல்ல. நீங்களும் கூட தான் அந்த வீட்டில் டிரைவர் வேலை பாக்குறதுல எவ்வளவு அசிங்கப்படுறீங்க.
எங்க அக்காவுக்காக ஒரு நகை செஞ்சு கொடுக்கிறேன் என்று சொல்லி ஒரு தாலி வாங்கி கொடுக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆயிருக்கு? இனி எல்லா நகையும் வாங்கி கொடுக்க 20 வருஷம் ஆகும் என்று சத்யா பேசிக்கொண்டே போக அதற்கு முத்து 20 வருஷம் ஆனாலும் பரவாயில்லை அது நான் உழைத்த காசு என்று சொல்ல அதற்கு எங்க அக்கா வீட்டுக்காரர் என்கிற மரியாதையா பேசிட்டு இருந்தேன். தேவை இல்லாம எனக்கு அட்வைஸ் பண்ற வேலை எல்லாம் தேவையில்லை போயா என்று முத்துவை அவமானப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications