வீடியோ ஆதாரத்தை பார்த்த மீனா.. சத்யா வீட்டில் அதிர்ச்சி கொடுத்த முத்து.. ஒன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு மீனா வீட்டுக்கு போன முத்துவை பார்க்காமல் அவருடைய அம்மா திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து கோபப்பட்டு சத்யாவை அடித்து விடுகிறார்.
அதுபோல முத்து மீண்டும் சத்யாவை அடித்ததை கேட்டு கோபமான அண்ணாமலை என்னிடம் இனி பேசாதே என்று முத்துவை ஒதுக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து முத்துவுக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் தம்பிகள் வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் மீனாவின் அப்பா நினைவு நாளுக்கு போன முத்து வந்ததை பார்க்காமல் மீனாவின் அம்மா மீனாவின் அப்பா ஃபோட்டோவை பார்த்து, பார்த்தீங்களா நம்ம பிள்ளைங்கள எப்படி நம்ம மாப்பிள்ள அடிச்சு வச்சிருக்கார்? இவரை போய் நான் நல்லவருன்னு நினைச்சேன் என்று கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து அங்கு வந்து நிற்க அதை பார்த்து பேச்சை நிறுத்தி விடுகிறார்.

ஆனால் முத்து எதுக்காக நிறுத்திட்டீங்க? இன்னும் பேசுங்க கூப்பிட்டு வச்சு என்னை அவமானப்படுத்திட்டீங்களா? என்று கேட்க அதற்கு சத்தியா உன்னை யாரு இங்க கூப்பிட்டா நீ தான் வந்து இருக்க என்று திட்ட அதை கேட்டு கோபமான முத்து அனைவரும் முன்னிலும் மீண்டும் சத்யாவை போட்டு அடித்த விட்டு அங்கிருந்து வந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து மீனா வீட்டில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அண்ணாமலையிடம் சொல்ல அவர் முத்துவை திட்டுகிறார். அதோடு இனி நீ என்கூட பேசாத என்று சொல்லிவிடுகிறார்.
அதனால் முத்து மீனாவிடம் நீ இதை எதுக்கு அப்பாகிட்ட சொன்ன? என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று திட்ட இதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். இப்படியே போனா சீக்கிரமா மீனா வீட்ட விட்டு போய்விடுவா என்று விஜயா மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா வந்து பார்த்த விஷயத்தையும் நான்கு நாள் ஆலப்புழா போவதற்கு டிக்கெட் கிடைத்த விஷயத்தையும் சொல்ல அதற்கு ரவி எனக்கு ஓசியில் கிடைத்த டிக்கெட்டெல்லாம் வேண்டாம் எனக்கு வேலை இருக்கு என்று சொல்கிறார்.

அதனால் ஸ்ருதிக்கும் ரவிக்கும் சண்டை வருகிறது. அந்த நேரத்தில் முத்து மொட்டை மாடிக்கு சென்று படுக்கிறார். அதை தொடர்ந்து மனோஜும் வருகிறார். அதைத்தொடர்ந்து ரவியும் அங்கு வருகிறார் மூன்று பேரும் தாங்கள் சின்ன வயதில் மொட்டை மாடியில் படுத்தது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதோடு பெண்களின் மனநிலை கல்யாணத்திற்கு பிறகு மாறிவிடுகிறது என்று இவர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் மீனா தூக்கம் வராமல் டீ போட்டு குடிக்கலாம் என்று கிச்சனுக்கு வர அந்த நேரத்தில் ஸ்ருதியும் அங்கு வந்து எனக்கு ஒரு டீ தாங்க என்று கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் இப்போதே ரோகிணியும் அங்கு வந்து விடுகிறார். பிறகு எல்லா புருஷமார்களும் இப்படித்தான் இருக்காங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதை தொடர்ந்து நாளைக்கான என்று வெளியான வீடியோவில் முத்து கட்டிலில் அமர்ந்தபடி போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு கோபமாக கட்டிலில் குத்துகிறார். இதையெல்லாம் அந்தப் பக்கமாக வந்த மீனா பார்த்து விடுகிறார். பிறகு முத்து கோபமாக போன பிறகு மீனா அந்த போனை எடுத்து இவர் இதில் ஏதோ வீடியோ பார்த்த பிறகு தானே கோபப்பட்டார் என்று வீடியோவை பார்க்கப் போகிறார்.












Click it and Unblock the Notifications