மீண்டும் முத்துவிடம் பிரச்சனை செய்யும் சத்யா.. வீட்டிற்கு சென்று மிரட்டும் மீனா.. ரோகினியால் திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 27ஆம் தேதிக்கான எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் குடும்பத்தினர் பேச்சையும் மீறி தான் வேலைக்கு போவதாக சத்யா வீட்டில் பொய் சொல்லி விட்டு முத்துவை பார்த்து மீண்டும் பிரச்சனை செய்கிறார்.
அதே நேரத்தில் ரோகினி வேலை பார்க்கும் பார்லருக்கு வந்த பிஏவால் ரோகிணி புது பிரச்சனையில் மாட்டுகிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவின் அம்மா போன் போட்டு சத்யா வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்கான் நீ வந்து கொஞ்சம் சொல்லிட்டு போ என்று சொல்ல அதற்கு மீனா நான் வருகிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் பசங்க ஏன் மேல போய் தூங்குனாங்க என தெரியாம விஜயா அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்க அப்போது அண்ணாமலை விஜயாவை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரவி வந்து மீனாவிடம் காபி கேட்கிறார். அப்போது ரவியிடம் விஜயா எதுக்காக நீ மேலே போய் தூங்குன? உனக்கும் ஸ்ருதிக்கும் எதுவும் பிரச்சனையா? என்று கேட்க அந்த நேரத்தில் ஸ்ருதி வெளியே வைத்து ஆன்ட்டி அவன் குளிக்க போறானா இல்லையா நான் குளிக்க போகட்டுமான்னு கேளுங்க என்று சொல்கிறார். அதற்கு ரவி எனக்கு டைம் ஆகுது நானே குளிச்சிட்டு வரேன் என்று ரூமுக்குள் போய்விடுகிறார்.

அப்போது விஜயா ஸ்ருதியிடம் ரவி ஏன் மாடியில் இருந்து இறங்கி வந்தான் என்று கேட்க அதற்கு ஸ்ருதி மாடிக்கு ஏறுனா இறங்கி தானே ஆகணும் என்று நக்கல் செய்கிறார். அதற்கு விஜயா ஐயோ நான் அதைக் கேட்கவில்லை உங்களுக்குள் ஏதும் பிரச்சனையா? என்று கேட்க அப்படி எல்லாம் இதுவரைக்கும் இல்லை என்று ஸ்ருதி சொல்லிவிடுகிறார். அதனால் விஜயா கோபத்தில் இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா வீட்டிற்கு போய் சத்யாவை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல அதற்கு சத்யா எனக்கு இந்த குடும்பத்தை பார்த்துக்க வேண்டிய கடமை இருக்கு. நான் தான் இந்த வீட்டுக்கு வேலை செஞ்சு ஆகணும் என்று சொல்லி எல்லோர் பேச்சையும் மீறி வேலைக்கு போய் விடுகிறார். மறுபக்கத்தில் ரோகினி வித்தியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் ரொம்ப பிரஷர் கொடுத்ததால் மனோஜ் வெயிட்டராக வேலை பார்த்த விஷயத்தை சொல்ல அதற்கு வித்தியா இனி நீ மனோஜ்க்கு ரொம்ப பிரஷர் கொடுக்காத அவருக்கு பிடித்த வேலையை தேடிக்கட்டும் என்று செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த PA ஐம்பதாயிரம் பணம் வேண்டும் என்று சொல்லி அங்கே இருந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அந்த வேயில் நேரத்தில் பியூட்டி பார்லரின் ஓனர் அங்கு வந்து இங்கே ஆண்களுக்கு அலவ்டு கிடையாது. நீங்க என்ன ஒரு ஆளை உட்கார வைத்து பேசிட்டு இருக்கீங்க? நீ இங்க வேலை தான் பாக்குற ஓனர் கிடையாது என்று திட்டி விடுகிறார். அப்போது ரோகிணி அந்த பிஏவிடம் இரண்டு நாளைக்குள் பணம் தந்துவிடுறேன் நீ போயிரு என் அனுப்பி வைக்கிறார்.

அடுத்த கட்டத்தில் முத்து சவாரி இல்லாமல் செல்வத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சத்யாவும் சிட்டியும் வர அப்போது முத்து உன்னை தான் என் கண்ணெதிரே வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல்ல அப்படி இருக்கும்போது எதுக்கு வந்த என்று திட்டுகிறார் அதற்கு சத்யா உன்கிட்ட பேசணும் என்று சொல்லி பணத்தை எடுத்து வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications