மீனாவிடம் சத்யாவை பற்றி பேசிய முத்து.. விஜயாவுக்கு தெரிய வந்த உண்மை.. ஏமாறும் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து சத்யா தன்னை வந்து மிரட்டிட்டு போனது பற்றி மீனாவிடம் சொல்ல மீனா அதற்கு முத்துவிடம் சண்டை போடுகிறார்.

அதே நேரத்தில் மனோஜ் அண்ணாமலையிடம் இருந்த பணத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டு போகிறார். அதுபோல ஸ்ருதி மற்றும் ரவி இடையே அடுத்த பிரச்சனையும் வெடிக்கிறது. இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December February 29th episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து ரூமில் பயங்கரமான கோபத்தில் இருக்க, அப்போது மீனா வந்ததும் மீனாவிடம் உங்க அம்மா வீட்டுக்கு போனியா என்று கேட்க அதற்கு அவர் ஆமா என்று சொல்ல யாரை கேட்டுட்டு உங்க அம்மா வீட்டுக்கு போன என்று கோபப்படுகிறார். முத்துவின் கோபத்தை பார்த்து புரியாத மீனா என்னாச்சு ஏன் என்று கேட்க நான் உன் தம்பி கிட்ட பேச சொன்னனா? அவன் என்னை ஷெட்டில் வந்து திட்டுறான்.

நான் இதுவரைக்கும் யாருகிட்டயும் இவ்ளோ இறங்கி போனதில்லை ஆனால் இவன் என்னை ஓவரா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கிறான் என்று திட்டுகிறார். அதோடு இனி நீ உங்க அம்மா வீட்டுக்கு போக கூடாது அவங்கள பாக்கணும்னா கோவிலில் வைத்து பாரு இல்லனா இங்க வர வச்சோ பாரு. அவன் இருக்கிற இடத்துக்கு போகாத நீ அவன்கிட்ட பேசுறதால தான் அவன் நான் சொல்லி நீ அவனுக்கு அட்வைஸ் பண்றதா சொல்றான் என்று திட்டுகிறார்.

siragadikka aasai serial December February 29th episode full update

உடனே மீனா சத்யாவுக்கு போன் பண்ணி நீ எதற்கு மாமாவை போய் பார்க்க போனா? அவர் இப்ப வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்றார் என்று சொல்ல அதற்கு சத்யா நீ வீட்டுக்கு வர வேண்டாம் நான் இனி குடும்பத்தை பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறார். இதனால் மீனா கஷ்டத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து பெட்ரூமில் அமர்ந்தபடி ஸ்ருதியும் ரவியும் ஃபோனில் சாட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஸ்ருதி மீண்டும் ஹனிமூன் போறது பற்றி பேச அதற்கு என்னால் இரண்டு நாள் லீவு எடுக்க முடியாது என்று ரவி மறுத்துவிடுகிறார். அதோடு இந்த டிக்கெட் உங்க அம்மா நம்ம ரெண்டு பேரும் சைக்கிளில் போனதை பார்த்து தான் தந்திருக்காங்க. நான் உன்ன சந்தோஷமா வைக்கலனு நினைச்சு அவங்க இப்படி பண்றாங்க. இது உனக்கு புரியலையா? என்று திட்டுகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா போன் பண்ண ஸ்ருதி நாங்க ஹனிமூன் போகல என்று சொல்லிவிடுகிறார்.

siragadikka aasai serial December February 29th episode full update

அதோடு ரவி மீது நம்பிக்கை இல்லாமல் ஸ்ருதி பேசுவதை பார்த்து ரவி கோபப்பட்டு வெளியே போய் விடுகிறார். அடுத்த கட்டத்தில் மனோஜ் தான் பெரிய வேலை ஒன்றுக்கு இன்டர்வியூக்கு போக போவதாக சொல்லிக் கிளம்புகிறார். அதோடு தனக்கு பணம் வேண்டும் என்றும் கேட்க அதற்கு விஜயா என்னிடம் பணம் இல்லை என்று சொல்லி விடுகிறார். பிறகு விஜயா கிச்சனுக்கு போனதும் மனோஜ் அங்கு அண்ணாமலையின் சட்டையில் இருந்த 300 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

siragadikka aasai serial December February 29th episode full update

அந்த நேரம் வந்து அண்ணாமலை சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை காணவில்லை என்று கேட்க அப்போது விஜயாவிற்கு பணத்தை எடுத்தது மனோஜ் தான் என்று புரிந்து விடுகிறது. உடனே நீங்க வெளியே போய் இருக்கும்போது செலவழிச்சிருப்பீங்க என்று விஜயா அண்ணாமலையை ஏமாற்றுகிறார். ஆனாலும் அண்ணாமலை மனோஜிடம் சென்று உன்னிடம் சில்லறை இருந்தால் கொடு என்று சொல்ல அதற்கு மனோஜ் என்னிடம் கையில் எதுவும் இல்லை அக்கவுண்டில் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நைசாக அங்கிருந்து கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+