வீட்டிற்கு வந்து மிரட்டும் பிரவுன் மணி.. சிக்கிக்கொண்ட ரோகினி.. முத்துவுக்கு தெரிய வந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வேலைக்கு போகாமல் நடித்துக் கொண்டிருந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து இப்போது ரோகிணியின் விஷயமும் முத்துவின் மூலமாக வீட்டிற்கு தெரிய வருகிறது. அதாவது ரோகிணி பார்லரை விற்றுவிட்டு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பது இன்று முத்துவுக்கு தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் மலேசியா மாமாவாக நடித்த பிரவுன் மணி ரோகிணி மற்றும் வித்யாவை பார்ப்பதற்காக நேரில் வீட்டிற்கு வந்து நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். இதனால் இந்த விஷயத்திலும் ரோகிணி மாட்டி விடுவாரோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

 siragadikka aasai serial December February 2nd episode Rohini sold parlor untruth came

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் விஜயா ரோகினியின் மாமா வந்ததை பற்றி வீட்டிற்கு வந்ததும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து எல்லோரும் அவரவர்கள் ரூமிற்கு போகின்றனர். அப்போது மீனாவும் தன்னுடைய ரூமுக்கு போக அதற்கு விஜயா என்ன மீனா நீ ரூமுக்கு போற இந்த வீட்டில நிறைய வேலை இருக்கு எல்லாத்தையும் செய்யணும் ஊர்ல தான் பாட்டி பாட்டினு சொல்லிக்கிட்டு இருந்த,

இந்த வீடு என் வீடு எல்லா வேலையும் நீ தான் பாக்கணும் என்று சொல்ல, அதற்கு முத்து அதான் உங்க வீடுன்னு எழுதி நெத்தியில ஒட்டிக்கோங்க எல்லோரும் பார்த்து தெரிஞ்சுக்கட்டும் என்று கிண்டல் செய்கிறார். பிறகு மீனாவை சமைக்க சொல்லிவிட்டு காபி போட்டுட்டு வரவும் சொல்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் ரோகிணியோடு ரூமுக்கு போகலாம் என்று கிளம்ப அதற்கு முத்து எங்க பார்த்தாலும் இவன் ரூமை புடிச்சுகிட்டு அலையுரான் அப்படி என்னதான் ரூமுக்குள்ள வச்சிருக்கானோ என்று திட்டுகிறார்.

 siragadikka aasai serial December February 2nd episode Rohini sold parlor untruth came

அதற்கு விஜயா அவன் ரூமுக்கு போனா உனக்கு என்னடா? நீ உன் ரூமுக்கு போக வேண்டியதுதானே? எங்களுக்கு தான் ரூம் இல்ல. நாங்க தான் ரூம் இல்லாம ஹால்ல படுத்து கிடக்கோம் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை அதுக்கு ஒரு முடிவு வச்சிருக்கேன் மொட்டை மாடியில் ஒரு ரூம் கட்ட போறேன் என்று சொல்ல அதற்கு விஜயா ஐயோ மொட்டை மாடியில் ரூம் கட்டி விட்டால் மீனாவை வெளியே துரத்த முடியாது என்று மனசுக்குள் நினைக்கிறார்.

 siragadikka aasai serial December February 2nd episode Rohini sold parlor untruth came

அதோடு இப்ப எதுக்கு ரூம் கட்டிக்கிட்டு என்று சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து பார்வதி வீட்டிற்கு வர விஜயா தனியாக பேச வேண்டும் என்று ரூமிற்க்கு போகிறார். அப்போது ஸ்ருதி முகத்தில் அடித்தது போல கதவை சாத்த அதை பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார் அதற்கு ஸ்ருதி நான் டிரஸ் சேஞ்ச் பண்ண போறேன் அதனால்தான் கதவை பூட்டுறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் அதே போல பூட்டி விடுகிறார்.

 siragadikka aasai serial December February 2nd episode Rohini sold parlor untruth came

அடுத்ததாக சரிப்பா நம்ம அந்த ரூமுக்கு போகலாம் என்று விஜயா பார்வதியை கூட்டிட்டு போக அங்கு ரோகிணியும் மனோஜும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்ததும் இதுவும் வேண்டாம் என்று விஜயா அடுத்த ரூமிற்கு போக அங்கு முத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் விஜயா நாங்க தனியா பேசணும் என்று சொல்ல, அதற்கு முத்து அந்த அளவுக்கு உங்களுக்கு ஆயிடுச்சா? டாக்டரை பார்த்து விடுங்க என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு நாங்க ரெண்டு பேரும் தனியா பேசனும் என்று விஜயா சொல்ல அதற்கு நீங்க என்ன பேச போறீங்க அதான் ஹால்ல அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போங்க என்று முத்து துரத்தி விடுகிறார். பிறகு விஜயா பார்வதியை கூட்டிக்கொண்டு மொட்டைமாடிக்கு வந்து பேசுகிறார். அப்போது ரோகினி ஓட அப்பா மட்டும் வந்தால் அவர் கொடுக்கிற பணத்தை வைத்து மூன்று அடுக்குல வீடு கட்டணும் வீட்டிலேயே லிப்ட் வைக்கணும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது மீனா காபியோடு வந்து நிற்க அதை பார்த்து கோபமான விஜயா நாங்க பேசுறதை ஒட்டு கேக்குறியா என்று திட்டுகிறார். அதற்கு மீனா அந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது என்று காபியை கொடுத்துவிட்டு கோபமாக கீழே வருகிறார். அடுத்த கட்டத்தில் ரோகினி வித்யா ரூமிற்கு வந்து ஊரில் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்.

 siragadikka aasai serial December February 2nd episode Rohini sold parlor untruth came

அப்போது அங்கு மலேசியா மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி கறியோடு வந்து எனக்கு வாய்ப்பு கிடைத்து விடுமா என்று கேட்க அதற்கு வித்யா உனக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆனால் அதுவரைக்கும் நீ யாரு கண்ணுலயும் படக்கூடாது என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார். அடுத்த கட்டத்தில் ரோகினி வேலை பார்க்கும் பார்லர் ஓனரின் கார் வழியில் ரிப்பேர் ஆகி நிற்க அந்த ஓனர் ஆபீசில் இருக்கும் பெண்ணுக்கு போன் பண்ணி தனக்கு ஒரு கேப் புக் பண்ணி தரும்படி கேட்கிறார்..

அந்த கேப் வண்டியை ஓட்டிக்கொண்டு அங்கு முத்து வர முத்து அவரை ரோகிணியின் பார்லரில் டிராப் செய்கிறார். ஆனால் அந்தப் பெண் பணம் கொடுக்காமல் போன் பேசியபடியே பார்லருக்குள் போய்விடுகிறார். அதை பின் தொடர்ந்து பணத்தை வாங்குவதற்காக முத்துவும் செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைக்கு என்று வெளியான காட்சிகளில் வீட்டில் முத்து அண்ணாமலையிடம் பாத்தியா அப்பா இந்த பொண்ணு என்ன வேலை பண்ணியிருக்கு, மனோஜ்க்கு ஏத்த கேடியா தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் ரோகிணி மேக்கப் பண்ணிக்கொண்டு கிளம்பி கொண்டிருக்கிறார்.

அப்போது விஜயா அவரை ஜூஸ் குடிக்க சொல்லிவிட்டு கவனித்துக்கொள்ள உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுமா நான் வேணா வந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை வாங்கி போடுறேன் என்று சொல்ல, அதைக் கேட்டு முத்து நக்கலாக இருமி காட்டுகிறார். இதனால் நாளை எபிசோட்டில் பார்லர் ரோகினியின் பெயரில் இல்லை என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+