ரோகினிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி.. வசீகரன் மூலமாக உடைந்த உண்மை.. ஆடிப் போன விஜயா.. அண்ணாமலையின் முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவிற்காக முத்து தான் கட்டி வந்த சீட்டு பணத்தை எடுத்து தாலி வாங்கி கொடுக்க அதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். ஆனால் விஜயா அதிர்ச்சியாகின்றார்.
அதே நேரத்தில் ரோகினிக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் வசீகரன் வந்து பியூட்டி பார்லரில் ரோகினியை மிரட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் வீட்டில் விஜயாவும் பிரச்சனை செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து தான் வாங்கிட்டு வந்த தாலியை மீனாவிடம் கொடுக்க அதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். அதோடு நான் சொன்ன மாதிரியே அவர் எனக்கு தாலி வாங்கி கொடுத்துட்டாரு என்று சொல்ல, விஜயா ஆமா பெரிய தாலி... என்னமோ தாலி செயின் வாங்கிட்டு வந்து கொடுத்த மாதிரி பேசுறா என்று அவமானப்படுத்த, அதற்கு மீனா அதையும் அவர் வாங்கிக் கொடுப்பாரு என்று சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலை அவன் பொண்டாட்டி சபதத்தை அவர் நிறைவேற்றி இருக்கிறார், மத்ததையும் அவன் செய்வான் என்று முத்துவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். பிறகு மீனாவை முத்து தாலியை போட்டுக்க சொல்ல அதற்கு இப்ப போட்டுக்க மாட்டேன் என்று மீனா சொல்லிவிடுகிறார். அதற்கு முத்து ஏன் போட்டுக்க மாட்டா? அதற்கு தானே வாங்கிட்டு வந்தேன்.
நீ அதை போட்டுக்கொள்ள வேற ஏதாவது பிளான் வச்சிருக்கியா என்று கேட்க அதற்கு விஜயா நான் கிழமை எல்லாம் பார்த்து தான் போட்டுகுவியா என்று நக்கல் ஆக கேள்வி கேட்கிறார். அதோடு முத்து என்ன பிளான் என்று கேட்க வாங்க சொல்றேன் என்று மீனா ரூமுக்கு சென்று விட முத்து பின்னாடியே சென்று என்னவென்று கேட்க ஒரு இடத்துக்கு போக போறோம் அப்போ உங்களுக்கு புரியும் என்று மீனா சொல்கிறார்.

அடுத்த கட்டத்தில் விஜய்யா ரோகினி ரூமுக்குள் போய் விஜயா ரோகினியிடம் இந்த மீனா ரொம்ப பண்ணுற... அதுக்குள்ள நகை எடுக்க முத்துவுக்கு எப்படி பணம் வந்தது என்று கேட்க, அதற்கு ரோகிணி எனக்கும் அதுதான் ஆன்ட்டி டவுட்டா இருக்கு.. டிரைவராக எப்படி அவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேட்கிறார். அதோடு மீனா கடையை போட்டதும் நல்ல சம்பாதிக்கிறா. அவதான் பணத்தை கொடுத்து வாங்கி இருக்க சொல்லணும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறார் என்று விஜயா சொல்ல அதற்கு ரோகிணியும் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது விஜயா ரோகினியிடம் நீ இந்த மாதிரி நகை நட்டு வாங்கி போட்டுக்க அப்பதான் உனக்குன்னு ஒரு மரியாதை இருக்கும். எனக்கும் பெருமையா இருக்கும் என்று சொல்ல அதற்கு ரோகிணி அதை தாலி பிரித்து கோர்க்கும் போது வாங்க போறோமே என்று சமாளிக்கிறார். ஆனால் விஜயா அது அப்போ வாங்கிக்கலாம் இப்போ அந்த மீனாவுக்கு ஒன்னும் நீ குறைஞ்சவா கிடையாதுன்னு காட்ட வேண்டாமா?
உங்க அப்பா கிட்ட சொன்னா கிலோ கணக்குல வாங்கித்தர போறாரு வாங்கி போட்டுக்க என்று சொல்லியபடி போனை கொடு நான் உங்க அப்பாகிட்ட பேசறேன் என்று போனை கேட்க அதற்கு பதறி போன ரோகிணி வேண்டாம் நானே பேசுறேன் நீங்க பேசுனா நகைக்காக பேசுன மாதிரி ஆயிடும் அது தப்பா இருக்கும் என்று சமாளிக்கிறார். பிறகு விஜயா சரி மறக்காம பேசு என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.

அடுத்ததாக பார்லருக்கு வந்த ரோகிணி வித்யாவை கூப்பிட்டு வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்லி இப்ப என்ன பண்றது என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் வந்து உங்களை பார்க்க உங்க மாமா வந்து இருக்காரு என்று சொல்ல இருவரும் அதிர்ச்சியாகி வெளியே வந்து பார்க்கின்றனர். அப்போது அங்கே வசீகரன் நிற்கிறார். அவரைப் பார்த்ததும் வித்யா இவரா மாமா என்று கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நான் எனக்கு பணம் வேண்டும் அதற்கு இரண்டு நாள் தான் டைம் இருக்கு என்று மிரட்டுகிறார்.
அடுத்த கட்டத்தில் மீனா முத்துவை சர்ப்ரைஸாக அவருடைய அம்மா கடை போட்டு இருக்கும் கோவிலுக்கு கூட்டிட்டு வருகிறார். அங்கு கோவில்ல தாலியை வைத்து பூஜை பண்ணி போட்டுக்க போறியா என்று முத்து கேட்க இல்ல நீங்க போயிட்டு இந்த ட்ரெஸ்ஸை மாத்திட்டு வாங்க என்று தான் வாங்கி வைத்திருந்த டிரஸ்சை கொடுக்க, முத்து டிரஸ் மாத்திட்டு வர போகிறார்.

மீனா ஐயரிடம் தனக்கு முத்து கடை வைத்து கொடுத்த விஷயத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஐயர் மீனாவுக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்கு என்று முத்துவை பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு முத்துவிடம் மீனா ரொம்ப ராசியான பொண்ணு தொட்டதெல்லாம் தொடங்கும் என்று புகழ்ந்து தள்ளுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications