மீண்டும் கல்யாணம் செய்த முத்து- மீனா.. வாயை விட்டு சிக்கிய மனோஜ்.. அம்பலமாகும் ரோகினியின் அப்பா ரகசியம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 8ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவும் முத்துவும் கோவிலில் வைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே நடந்த திருமணத்தின் போது இருவரும் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் இப்போது சந்தோஷமாக காதலோடு மீண்டும் திருமணம் செய்து இருக்கின்றனர்.
அதே நேரத்தில் செய்த தப்பை எல்லாம் செய்து கொண்டு முத்துவை அவமானப்படுத்திய மனோஜ் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். மனோஜ்க்கு மட்டுமல்லாமல் இன்றைய எபிசோடில் ரோகிணிக்கும் விஜயா அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் கோவிலில் காட்சிகள் தொடங்குகிறது. அப்போது முத்து வாங்கிட்டு வந்த தாலியை பூசாரியிடம் கொடுத்து அதை சாமி முன்பு வைத்து எடுத்துட்டு வர அப்போது முத்துவும் புது துணி போட்டு ரெடியாக வருகிறார். அதை பார்த்த மீனா ரொம்பவே சந்தோஷப்பட்டு கொண்டிருக்க முத்து நான் அடுத்து என்ன செய்ய என்று கேட்க அதற்கு அந்த தாலியை எடுத்து கட்டுங்க என்று சொல்ல முத்து அதான் ஏற்கனவே நான் உனக்கு தாலி கட்டிட்டேனே என்று சொல்லுகிறார்.
அதற்கு மீனா அது உங்களுக்கும் விருப்பமில்லாமல் எனக்கும் விருப்பமில்லாமல் கட்டியது ஆனால் இப்போ நம்ம ரெண்டு பேரும் மனசார காதலிக்கிறோம் இப்பதான் இந்த திருமணத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கிறது என்று சொல்ல, அதற்கு முத்து ஆமா இதுதான் நல்ல ஐடியாவா இருக்கு என்று சொல்லி சந்தோஷமாக தாலியை கட்டுகிறார்.
பிறகு எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு கோவிலில் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். வீட்டிற்கு மாலையும் கழுத்துமாக மீனாவும் முத்துவும் வர அதை பார்த்து அண்ணாமலை என்ன இரண்டு பேரும் மாலையோட வந்து இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து தங்களுக்கு கல்யாணம் ஆனதை சொல்ல அதற்கு வழக்கம் போல விஜயா எத்தனை வாட்டி தான் கல்யாணம் பண்ணுவீங்க என்று நக்கல் பண்ண, அதற்கு அண்ணாமலை வாயை மூடிட்டு நீ போய் அவர்களுக்கு ஆரத்தி எடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

விஜயா சலித்துக் கொண்டு ஆரத்தி எடுக்கிறார். அப்போது மனோஜ் அப்போ நீங்க ஏற்கனவே பண்ணுனது பொம்மை கல்யாணமா என்று சொல்ல ஆமா கல்யாண நேரத்துல ஓடி போனவன் எல்லாம் இதை பேசலாமா என்று முத்து மனோஜ்க்கு கவுண்டர் கொடுக்கிறார். அதோடு வீட்டிற்கு வந்த முத்துவும் மீனாவும் சாமி ரூமுக்கு போய் விளக்கு ஏற்றி விட்டு வருகின்றனர்.
பிறகு முத்து ஐயருக்கு போன் போட்டு வீட்டிற்கு வர சொல்ல அதுதான் கல்யாணம் முடிந்து விட்டதே இனி எதுக்குடா வர சொல்லி இருக்க என்று அண்ணாமலை கேட்க, அது கல்யாணம் முடிஞ்சிட்டு ஆனா சாந்தி முகூர்த்த வைக்கணும் என்று சொல்ல அதற்கு மனோஜ் அப்ப இவ்வளவு நாளா நீங்க லிவிங்கிலயா இருந்தீங்க என்று கேட்க ஆமா நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருந்தா இல்ல அது மாதிரி என்று மீண்டும் அவமானப்படுத்த இதனால் ரோகிணி கோபப்படுகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் தங்களுடைய ரூமுக்கு போய்விட ரோகிணி விஜயாவிடம் இந்த முத்து ரொம்ப தான் பண்ணுறார் என்று சொல்ல ஆமாமா இவன் ஆட்டம் தாங்க முடியல, நீயும் உங்க அப்பா கிட்ட சொல்லி ஏதாவது பண்ணனும்னு சொல்லு உனக்கு இவங்களை விட பெருசா ஒரு ரிசப்ஷன் மாதிரி வைக்கலாம் என்று விஜயா சொல்லிவிட்டு போக ரோகிணி இவங்க கிட்ட எதையும் பேச முடியல,

உடனே நம்ம பக்கமா திருப்பறாங்க என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இந்த எபிசோடு முடிவடைகிறது. அதிலும் தொடர்ச்சியாக விஜயா ரோகினியின் அப்பாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் இனி ரோகிணி மாமாவுக்கு ஆள் செட் பண்ணி நடித்தது போல அடுத்து அப்பாவை வைத்து நடிக்கப் போகிறதா? இல்ல அப்பா விஷயத்தில் மாட்டப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications