ஸ்ருதி செயலால் கண்கலங்கி அழுத மீனா.. அவமானப்படுத்திய விஜயாவும் ரோகிணியும்.. கோபத்தில் முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி மீனாவிற்கு பணத்தை கொடுத்து தன்னுடைய துணியை துவைத்து வைக்க சொல்ல அதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் மீனாவை அவமானப்படுத்துகின்றனர்.
குடும்பத்தில் தனக்கு இருக்கும் நிலையைப் பற்றி மீனா முத்துவிடம் சொல்லி கண்கலங்கி அழ முத்து எதிர்பாராத முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே தங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வீட்டிலேயே தங்கி இருக்கிறார். வீட்டில் மொத்த வேலைகளையும் மீனா மீது விஜயா தூக்கி வைக்க அதனால் முத்து அவ்வபோது தன்னுடைய கோபத்தை காட்டி வருகிறார்.
ஆனாலும் அடங்காத விஜயா வீட்டில் துணி துவைப்பதில் இருந்து சமையல் செய்வது என எல்லா வேலையும் வேலையாள் போல மீனா விடம் சொல்ல அதனால் போன வாரத்தில் முத்து கோபப்பட்டு திட்டி இருந்தார். இந்த நிலையில் மீனா வீட்டில் நடப்பதை எல்லாம் பாட்டியிடம் போட்டுக் கொடுக்க பாட்டி வீட்டிற்கே வந்து விஜயாவை கதற விட்டிருந்தார்.

ஏற்கனவே ரவி மற்றும் ஸ்ருதி திருமணம் செய்ததை தன்னிடம் மறைத்தது, பிறகு தன்னுடைய மகன் அண்ணாமலையின் உடல்நிலை சரியில்லாமல் போனது என எந்த விஷயத்தையும் தன்னிடம் சொல்லவில்லை என்று கோபத்தில் இருந்த முத்துவின் பாட்டி இந்த வீட்டில் இருக்கும் மூன்று மருமகள்களில் யார் முதலில் குழந்தை பெற்று தர போகிறீர்களோ அவர்களுக்கு தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் இடத்தை தான் எழுதி வைக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதனால் விஜயா இந்த சொத்து முழுக்க தனக்கு பிடித்தமான ரோகினி அல்லது ஸ்ருதிக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவிடம் வீட்டில் இருக்கும் சில துணிமணிகளை எடுத்து விஜயா கொடுத்து இதை துவைத்துவை என்று சொல்கிறார்.
அடுத்ததாக அங்கு வரும் ஸ்ருதி இதில் கொஞ்சம் டாப் இருக்கு இதையும் துவைச்சிடுவீங்களா என்று கேட்க, பரவால்ல ஸ்ருதி கொடுங்க என்று மீனா வாங்க, அதற்கு ஸ்ருதி 2000 பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு பதறிப்போன மீனா நீங்க பணத்தை கொடுத்து என்னை இந்த வீட்டு வேலைக்காரியாகவே மாத்தறீங்களா என்று கேட்க அதற்கு ஸ்ருதி இந்த பணத்தை வச்சுக்கோங்க என்று கையில் பணத்தை கொடுத்து விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்து விஜயா மற்றும் ரோகினி இருவரும் நக்கலாக சிரித்தபடி மீனாவை அவமானப்படுத்துகின்றனர். அடுத்ததாக முத்துவிடம் மீனா ஸ்ருதி கொடுத்த 2000 பணத்தை கொடுக்க, அதை பார்த்து முத்து பணம் யாரு கொடுத்தா என கேட்க எனக்கு சம்பளம் கொடுத்தாங்க என்று மீனா சொல்கிறார். இதில் ஒன்றும் புரியாத முத்து உனக்கு பணம் கொடுத்தது யாரு என்று மீண்டும் கேட்க,

அதற்கு மீனா ஸ்ருதி அவங்க துணி எல்லாம் துவைக்க சொல்லி 2000 ரூபாய் பணம் கொடுத்தாங்க என்று சொல்லி கண்ணீர் விடுகிறார். அதை பார்த்து முத்து கோபப்படுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி இந்த வீட்டில் இருந்தால் வேலை சொல்லி இத்தனை நாளா வேலைக்காரி மாதிரி நடத்துனீங்க...
இப்போ சம்பளத்தை கொடுத்து வேலைக்காரியா மாத்திட்டீங்க என்று கோபப்பட்டு முத்து மீனாவை கூட்டிக்கொண்டு தனி குடித்தனம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போல இவர்கள் மூவரில் இனி மீனாதான் முதலில் கர்ப்பம் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காட்சிகள் எல்லாம் இனி வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக வர இருக்கிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications