ரோகிணிக்கு மாமா விஷயத்தில் அதிர்ச்சி கொடுத்த விஜயா.. பாட்டி வைத்த செக்.. முத்துவின் எதிர்பாராத செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கிராமத்திற்கு வந்திருந்த அண்ணாமலையின் குடும்பத்தினருக்கு அவருடைய அம்மா இன்ப அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
முத்துவின் பாட்டி தன் மருமகள் விஜயாவை போட்டு பாடாய்படுத்தி எடுத்து வருவதை பார்த்து முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வரப்போகும் மாமாவால் என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்தில் ரோகிணி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ஸ்ருதிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க அதை மீனா ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து பாட்டி மீனாவை எழுந்து ஸ்ருதி பக்கத்தில் உட்கார சொல்கிறார். அப்போது மீனாவும் எழுந்து போய் உட்கார இந்த வீட்டில் எல்லா மருமகள்களும் சமம் தான். ஒரு மருமகளுக்கு ஊட்டி விட்டு மத்த ரெண்டு மருமகளுக்கு ஊட்டலைன்னா எப்படி?
மூன்று பேருக்கு உன் கையாலே சாப்பாடு ஊட்டு என்று பாட்டி சொல்ல, அதற்கு விஜயா எதுக்கு அத்தை ஸ்ருதிக்கு கையில் அடிபட்டு இருக்கு அதனால தான் அவளுக்கு ஊட்டி விடுறேன் என்று சமாளிக்கிறார். அதற்கு முத்து அதுக்காக மத்த ரெண்டு பேரயும் கையையா வெட்டிக்க சொல்ல முடியும் என்று கேட்க விஜயா கோபப்படுகிறார். பிறகு பாட்டி சொன்னதை செய் மூன்று மருமகள்களுடன் சந்தோஷமாக இருக்கதை நான் பாக்கணும் என்று சொல்ல மறுக்க முடியாமல் விஜயா முதலில் ஸ்ருதிக்கு ஊட்டி விட்டு, அடுத்ததாக ரோகிணிக்கு ஊட்டி விடுகிறார்.

மூன்றாவது மீனாக்கு வாயில் சாப்பாடை அள்ளி திணிக்க அதை பார்த்து பாட்டி என்ன இரண்டு மருமகளுக்கு ஒரு மாதிரி ஊட்டுற, ஒரு மருமகளுக்கு ஒரு மாதிரி ஊட்டுற? என்று கேள்வி கேட்கிறார். பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் ரவியும் ஸ்ருதியும் உங்களுடைய ரூமுக்கு போய் விடுகின்றனர். மனோஜும் ரோகிணியும் இன்னொரு ரூமுக்கு போய் விடுகின்றனர்.

மற்றவர்கள் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனாவின் பூக்கடை பற்றிய பேச்சு வருகிறது. அப்போது விஜயா ரோகினினாலும் என் பெயரை அவளோட பியூட்டி பார்லருக்கு வச்சிருக்கா, ஆனா இந்த பூக்கடையால் எனக்கு என்ன பெருமையா வந்து சேர்ந்திட போகுது? வீட்டு வாசலில் கடையை வைத்து அவமானத்தை தான் தேடித்தரா என்று மீனாவை பற்றி திட்ட அதற்கு பாட்டி பூக்கடை ஒன்னும் மட்டமானது கிடையாது.
உலகம் முழுவதும் பூவுக்கு ஒரு டிமாண்ட் இருக்கு என்று பூவின் அருமை பெருமையை பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் விஜயா கடுப்பாகி எல்லாரும் இப்ப படுத்து தூங்கினும், நாளை ரோகிணியோட மாமா வந்துருவாரு. அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பனும் என்று சொல்ல அதற்கு பாட்டி இன்னைக்கே இதை சொல்லியே ஒரு வேலை செய்யல. நாளைக்கு பொங்கல் வைக்கவாது விடுவியா இல்ல அதையும் தடுத்து விடுவியா? என்று கேட்க,
அதற்கு விஜயா பொங்கல் தான் வருஷா வருஷம் வருது, ஆனா ரோகினியோட மாமா எப்பவாச்சம்தான் வராரு. அவரை நல்லபடியா கவனிச்சு அனுப்பனும். அவர் வரும்போது இவனை வாய வச்சிட்டு சும்மா இருக்க சொல்லுங்க என்று முத்துவை சீண்டிப் பார்க்க அதற்கு முத்து மரியாதை இரண்டு பக்கமும் இருந்து வரவேண்டும் அங்கிருந்து வந்தா தான் இங்கிருந்து கண்டிப்பா கிடைக்கும் என்று பதில் கொடுக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியான ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு அந்த ஆள் வந்துருவான்ல ஒன்னும் சொதப்பிட மாட்டானே என்று கேட்க அதற்கு வித்யா அந்த ஹேப்பி தியாகம் அவரே வந்துடுவாரு. சில ஏற்பாடுகள் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு, என்ன கொஞ்சம் ஓவரா ஆக்டிங் பண்ணுவாரு நீ சமாளிச்சுக்கோ என்று சொல்கிறார். அதை தொடர்ந்து வீட்டு வாசலில் முத்து கட்டில் போட்டு படுக்க அப்போது பாட்டி மீனாவையும் உன் புருஷனோடு போய் படு என்று துரத்தி விடுகிறார்.

முத்துவும், மீனாவும் நிலா வெளிச்சத்தில் தூங்குவது தனி சுகம் தான் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா பனி விழுது இதுல படுத்தா ஜலதோஷம் புடிச்சிக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு முத்து ஒரு குடையை எடுத்துட்டு வந்து கட்டிலில் நிலா வெளிச்சத்தில் போன் டார்ச்சர் ஆன் செய்து வைத்து அசத்துகிறார். பிறகு இருவரும் கட்டிலில் படுத்துக் கொள்ள மீனா இப்ப ஏதாச்சும் பாட்டு ஞாபகம் வருதா? என்று கேட்க அதற்கு முத்து நிலா காயுது நேரம் நல்ல நேரம் என்று பாட்டு பாடி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications