முத்துவால் மனம் மாறும் விஜயா.. உண்மையை சொல்லும் கேமில் மாட்டும் ரோகிணி.. பாட்டி சொன்ன அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 31ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தான் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக மலேசியா மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார். அதோடு முத்து மற்றும் மீனாவை பழிவாங்க வேண்டும் என்று விஜயாவோடு சேர்ந்து ரோகினியும் ஸ்ருதியும் பிளான் போட்டு இருந்த நிலையில் அதை பாட்டி உடைத்திருக்கிறார்.
கிராமத்தில் பாட்டி வைத்த விளையாட்டில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைக்காமல் முத்துவையும் மீனாவையும் பழிவாங்க வேண்டும் என்று விஜயாவின் மருமகள்கள் நினைத்திருந்த நிலையில் கடைசியில் முத்து செய்த செயலை பார்த்து விஜயா மனம் மாறி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முதலாவதாக உறியடிப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது மனோஜ் விளையாட அவர் உறியடிக்கப் போகும்போது ரோகிணி அப்படித்தான் போங்க போங்க என்று என்கரேஜ் பண்ணி வழியை சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ஸ்ருதி இவரு ஜெயித்தால் முத்து டீம் ஜெயித்திடும் அதனால ஜெயிக்க கூடாது என்று சொல்லி ரோகிணி வாயை பொத்துகிறார்.

பிறகு மனோஜ் உறி அடிக்க முடியாமல் தோற்றுப் போக அடுத்ததாக ரோகினி விளையாடுகிறார். அவரும் பானையை தாண்டி சென்று கம்பை தூக்கி அடித்துக்கொண்டு கடைசியில் அவரும் அவுட் ஆகி விடுகிறார். அடுத்ததாக ரோகினி தொடர்ந்து ரவி விளையாட ரவியும் தோற்றுப் போகிறார். பிறகு ஸ்ருதி வருகிறார் கண்ணை கட்டிக்கொண்டு கொள்வதற்கு முன்பே எத்தனை அடி எடுத்து வைக்க வேண்டும் எவ்வளவு தூரத்தில் பானை இருக்கிறது என்று எல்லா விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்து அதற்கு தக்கப்படி பிளான் போட்டு கண்ணை கட்டிக் கொண்டதும் ஸ்ருதி சரியாக பானை பக்கத்தில் நின்று விடுகிறார்.

ஆனால் உயரம் எட்டாததால் ஸ்ருதியால் பானையை அடிக்க முடியாமல் போய்விடுகிறது. அதைத் தொடர்ந்து மீனாவிற்கு கண்ணை கட்டி விடுகிறார்கள். மீனா பானை பக்கம் போகாமல் எதிர் திசையில் போய் அங்கு மனோஜ் தலையில் ஒரு அடி போட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறார். ஆனால் சீரியல் பார்த்த ரசிகர்கள் இந்த தருணத்துக்காக தான் காத்திருந்தோம் என்று சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு சரியான காமெடியான காட்சிகள் இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து கடைசியாக முத்து களம் இறங்கி பானையை உடைத்து விடுகிறார். முத்து பானையை உடைத்ததால் விஜயா அணி ஜெயித்துவிட்டது என்று எல்லோரும் முத்துவை தூக்கிக் கொண்டாட, அதற்கு முத்து என்னை இறக்கி விடுங்கடா நான் ஜெயித்தால் என்ன யார் ஜெயித்தால் என்ன நம்ம டீம் தலைவி ஜெயிச்சாச்சு இப்ப அவங்கள தூக்கி கொண்டாடுங்க என்று சொல்ல முத்து, மனோஜ், ரவி மூன்று பேரும் விஜயாவை தூக்கி கொண்டாடுகின்றனர்.

அப்போது விஜயா ஓரக்கண்ணால் முத்துவை பார்த்து சந்தோஷப்படுகிறார். அதைத்தொடர்ந்து டயர் ஓட்டும் போட்டி நடைபெறுகிறது. அதில் ஆறு பேரும் ஒரே நேரத்தில் போட்டியில் பங்கேற்கின்றனர். ஆனால் கடைசியில் முத்துவும் மீனாவும் வெற்றி பெறுகின்றனர். பிறகு போட்டி எல்லாம் முடிந்ததும் எல்லோரும் கோவிலுக்கு போயிருக்கின்றனர். அங்கு முத்துவின் பாட்டி நீங்க எல்லாரும் முத்துவும் மீனாவும் ஜெயிக்க கூடாதுன்னு பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.

அதனால தான் உங்களை இரண்டு அணியாக பிரித்து விளையாட வச்சேன். இப்படி விளையாடும் போது கோபத்தை மறந்துட்டு நீங்க ஒருத்தரோட வெற்றியை கொண்டாடுனீங்க. அவ்வளவுதான் வாழ்க்கை ஒற்றுமையாய் இருக்கணும் என்று எல்லோருக்கும் அறிவுரை கூறி கொண்டிருக்கிறார். பிறகு இதெல்லாம் முடிந்ததும் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது ஸ்ருதி அடுத்ததாக ஒரு விளையாட்டு விளையாடலாம் என்று கேட்க எல்லோரும் என்ன விளையாட்டு என்று கேட்கின்றனர். அதற்கு ட்ரூத் ஆர் டேர் என்று விளையாட்டு பெயரை சொல்கிறார். ரவி இந்த கேம் குறித்து விளக்கம் கொடுக்க அதற்கு ஸ்ருதி நானே முதலில் விளையாட்டை தொடங்குகிறேன் என்று ரவியிடம் ட்ரூத்தா,டேரா என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications