முத்துவால் கேவலமாக மாட்டிய மனோஜ்.. ஆனால் ரோகினி சொன்னதை பாருங்க.. இனி மீனாவுக்கு அசிஸ்டென்டா?
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சிரியலில் ஜனவரி 8ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது. இதில் ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்திருந்த ரகசியங்கள் உடைந்து இருக்கிறது. அதாவது இத்தனை நாட்களாக வேலைக்கே போகாமல் தான் வேலைக்கு போய்க் கொண்டிருப்பதாக வீட்டில் பில்டப் செய்து கொண்டிருந்த மனோஜ் முத்துவிடம் வசமாக சிக்கி இருக்கிறார்.
வீட்டில் திமிராக ஆட்டம் போட்ட மனோஜ் மற்றும் ரோகினிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக முத்து வெளியிட்ட வீடியோ மொத்த குடும்பத்தையும் அதிர்வடைய வைத்திருக்கிறது.

அதே நேரத்தில் இத்தனை நாட்களாக மீனாவை பாடாய்ப்படுத்தி வந்த ரோகினி மற்றும் விஜயா வாய் பேச முடியாத அளவிற்கு அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் ஸ்ருதி ரோகிணியை கலாய்த்து விட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மனோஜ் பார்க்கில் வேலைக்கு போகாமல் தன்னுடைய பார்க் நண்பரோடு சேர்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை முத்து பார்த்து அதிர்ச்சியாகி வீடியோ எடுக்கிறார். அவர் காலையில் இருந்து மாலை வரைக்கும் அந்த பார்க்கில் என்னவெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் வீடியோ எடுத்துவிட்டு அவசர அவசரமாக வீட்டிற்கு வந்து அண்ணாமலை, விஜயா எல்லாரையும் கூப்பிடுகிறார்.

அப்போது மீனாவிடம் ரோகிணி தான் முக்கியமா நிற்கணும் அவங்கள கூட்டிட்டு வா என்று சொல்ல, மீனாவும் கூட்டிட்டு வருகிறார். பிறகு ரோகிணி வந்ததும் அண்ணாமலை எதுக்கு இப்போ எல்லாரையும் கூப்பிடுற என்று சொல்ல முத்து உங்களுக்கு ஒரு குறும்படம் போட்டு காட்ட போறேன் இந்த மனோஜ் வேலைக்கு போறான் என்று சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருக்கிறான் என்று சொல்ல ரோகிணி மனோஜ் பற்றி தப்பா பேசாதீங்க என்று வழக்கம் போல கோபப்பட்டு கொண்டு ரூமுக்கு போகிறார்.
அதற்கு முத்து படத்தை பார்க்காமல் போனால் எப்படி என்று கேட்டு மனோஜ் பார்க்கில் தன்னுடைய நண்பரோடு பேசிவிட்டு சாப்பிட்டு தூங்கும் வீடியோவை போட்டு காட்டுகிறார். இதை பார்த்து எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு அந்த பார்க் செக்யூரிட்டி மூன்று மாசமா இங்கே தான் வந்து போகிறார் என்று அந்த வீடியோவில் சொல்கிறார். அதோடு மனோஜின் ஷோரூம் தான் விசாரிச்ச ஆடியோவையும் போட்டு காட்ட விஜயா என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்.

அப்போது ஸ்ருதியும் ரோகிணியை கலாய்க்கிறார். என்ன ரோகினி உங்க புருஷன் இவ்வளவு ஏமாற்றுகாரரா இருந்திருக்காரு.... இது கூட தெரியாத ஆளா நீங்க இருந்திருக்கீங்களே என்று கேட்க ரோகினி எதுவும் பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மனோஜ் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் தன்னுடைய ஷோரூமுக்கு இன்று விஜய் வந்ததாக பொய் சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி மேலும் கோபப்படுகிறார்.
வீட்டில் எல்லோரும் என்ன சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது முத்து உங்களோட ஷோரூமுக்கு விஜய் வந்தாரா என்று நக்கலாக கேட்க அதற்கு மனோஜ் ஆமாம் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே வீட்டிலிருந்த பணத்தை தூக்கிக் கொண்டு மனோஜ் ஓடிப்போனதை வைத்து இப்போது வரைக்கும் முத்து அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக வேலைக்கு போகாமல் நடித்த விஷயமும் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. இதனால் இனி மனோஜ்க்கு மட்டுமல்லாமல் ரோகிணிக்கும் விஜயாவுக்கும் பிரச்சனைதான். ஏற்கனவே மீனாவின் கடையில் வேலைக்கு ஒரு அசிஸ்டன்ட் வேண்டும் என்று முத்து சொல்லி இருந்த நிலையில் இனி மீனாவின் கடையில் லாபம் கிடைக்க தொடங்கி இருக்கும்போது முத்து மனோஜை அசிஸ்டன்டாக சேர்க்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications