சிறகடிக்க ஆசையில் இனி நடக்கபோவது இது! ரகசியத்தை உடைத்த இயக்குனர்! ஒருவழியா இந்த முடிவுக்கு வந்தாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இப்போ டி.ஆர்.பி-யிலயும் சரி, ரசிகர்களின் 'சிரிப்புலயும்' சரி... வேற லெவல்ல போயிட்டு இருக்கு! இந்த சீரியல் வாரம் வாரம் என்ன திருப்பத்தைக் கொடுக்கப் போகுதுன்னு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிற நிலையில், திடீர்னு ஒரு சந்தோஷமான அதிர்ச்சி!

'சிறகடிக்க ஆசை' சீரியலோட இயக்குநர் குமரன், சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய 2024 ஆம் ஆண்டுக்கான டெலிவிஷன் விருதுகளில் சிறந்த இயக்குநர் விருதை (Best Director Award) வென்றிருக்கிறார்! அடேங்கப்பா! இந்த விருதை வென்றதோடு மட்டுமல்லாமல், சீரியல் ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு ஒரு புது எதிர்பார்ப்பையும் கிளப்பி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி டிராமா

இந்த சீரியலோட முக்கியமான சுவாரஸ்யமே, மருமகள் ரோகிணி மட்டும்தான்! ரோகிணி பணக்காரப் பெண் இல்லை; அவர் ஒரு ஏமாற்றுக்காரிங்கிற உண்மை எப்போ வெளியாகும்னுதான் ரசிகர்களுக்கு ரொம்ப நாளா ஒரு எதிர்பார்ப்பு! ஆனா, ஒவ்வொரு வாரமும் "இந்த வாரம் ரோகிணி சிக்குவாளா?"ன்னு காத்திருக்கிற ரசிகர்களுக்குக் கடைசி வரைக்கும் ஏமாற்றம்தான் கிடைக்குது!

ரோகிணியோட உண்மை முகம் தெரிய வரும்போது, வழக்கமா நம்ம சீரியல்கள்ல நடக்கிற மாதிரி என்னவெல்லாம் நடக்கப் போகிறதுன்னு இப்போவே ரசிகர்கள் ஆருடம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!

ரோகிணியின் மெகா டிராமா

ரோகிணி வசதியானவள் இல்லை, ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்து திரிஷ் என்ற பையன் இருக்கிறான் என்ற உண்மை தெரியும் போது, கரெக்ட்டா அவங்க கர்ப்பமா இருப்பாங்க! வழக்கம் போல, குடும்பத்தின் தலைவர் அண்ணாமலை சென்டிமென்டா, "நம்ம வீட்டுப் பொண்ணு; நம்ம வயித்துப் பேரன்/பேத்தி"ன்னு சொல்லி, ரோகிணியை வீட்டுல மறுபடியும் சேர்த்துக்கிட்டு, வழக்கம் போல எல்லாத்தையும் மறக்கச் சொல்லிடுவார்! ஆஹா... பழைய கதைதான்!

இப்போ, ரோகிணி பணக்காரப் பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சவுடனே விஜயா வெறுப்பை காட்டிக்கிட்டு இருக்கார். ஆனால், ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு, ஒரு குழந்தையும் இருக்குன்னு தெரிஞ்சா... விஜய்யாவோட நிலைமைதான் ரொம்பப் பரிதாபமாக இருக்கும்! (அவரு இந்த முறை எந்தக் கேள்வியும் கேட்காம அமைதியா போயிடுவாரோ?)

இப்படி வாரம் வாரம் ஒரு ட்விஸ்ட் கொடுத்து, குடும்பப் பாசம், கண்ணீர்னு சீரியல் போய்க்கிட்டு இருக்கு. ஆனாலும், இந்த சீரியல், குடும்பப் பிரச்னைகள்ல இருக்கும் சின்னச் சின்ன லாஜிக் மீறல்களையும் காமெடியா எடுத்துட்டுப் போறதுனாலதான் ரசிகர்களுக்கு இவ்வளவு புடிச்சிருக்கு!

இயக்குநர் குமரன் விருது வாங்கிய சந்தோஷத்துல இருந்தபோது, சிறகடிக்க ஆசை சீரியலில் இனி என்ன நடக்கபோகிறது என்று அங்கிருந்தவர்கள் கேட்க, அதற்கு குமரன், ரோகிணி பற்றிய உண்மைகள் தான் தெரிய போகிறது அதற்காகத்தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அப்டேட் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே முத்துவின் ஃபிளாஷ்பேக் கதை தெரிய வந்தபோது பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது‌. ஆனால் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும்போது ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் ரோகிணி எப்போ சிக்குவாங்கன்னு பாக்குறதுக்குள்ள, 'சிறகடிக்க ஆசை' சீரியலோட அடுத்த சீசனே வந்துடுமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+