புது சீரியலில் கமிட்டான ‘சிறகடிக்க ஆசை’ மீனா.. திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்! ஆரம்பமே ஆர்ப்பாட்டம்
சென்னை: (Siragadikka Aasai serial Gomathi Priya)விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா குறித்து தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் ஒரு முக்கியமான தகவல் பேசப்பட்டு வருகிறது. மீனாவுக்கு இப்போது புதிய சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தமிழ் மட்டும் இல்ல... மலையாள சீரியலில்.
கோமதி பிரியா மதுரையைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்தவர், குடும்ப சூழ்நிலை காரணமாக மாடலிங் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கிருந்து மெதுவாக சின்னத்திரை உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வேலைக்காரன்' சீரியல் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஓவியா சீரியலிலும் நடித்தார். ஆனால் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா கேரக்டர் தான்.
இப்போது "மீனா" என்ற பெயர் சொன்னாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கோமதி பிரியாதான்.
சீரியல் பிரபலம்
திரைப்பட நடிகைகளை சில வருடங்களுக்கு ஒருமுறை தான் திரையில் பார்க்க முடியும். ஆனால் சீரியல் நடிகைகள் தினமும் வீட்டுக்குள் வருவது போல, குடும்ப உறுப்பினர்களாக மாறிவிடுகிறார்கள். அதனால் தான் கோமதி பிரியா போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகம்.
சீரியலைப் பார்க்காதவர்கள் கூட சமூக வலைதளங்களில் வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் இவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அந்த வகையில் கோமதி பிரியா இன்று சின்னத்திரையின் முக்கியமான முகமாக மாறியுள்ளார்.
மலையாள சீரியலில்
இந்த நிலையில், கோமதி பிரியா தற்போது மலையாள சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த சீரியல் பெயர் Ee Puzhayum Kadannu. இது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலின் மலையாள வடிவம்.
இதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன. இந்த சீரியலில், மகாநதியில் காவிரி நடித்த கதாபாத்திரத்தின் மலையாளத்தில் கோமதி பிரியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்றால் தியாகம், பொறுமை, அமைதி. எல்லாவற்றையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு வெளியே எதையும் காட்டாத ஒரு பெண். அந்த கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.
அதனால் தான் இப்போது ரசிகர்கள் ஆவலுடன் கேட்கும் கேள்வி, "இந்த அமைதியான மீனா, மலையாள சீரியலில் எப்படி இருப்பார்?" என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த (Ee Puzhayum Kadannu) சீரியல் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது ஏற்கனவே பிரேம் டைம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் கோமதி பிரியாவிற்கு இப்போது எந்த சீரியலும் ட்ரெயின் டைமில் அமைந்து இருப்பதால் இனி மலையாள ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது ஏற்கனவே இவர் மலையாள சீரியலில் நடித்திருப்பதால் அவருக்கு மலையாளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் வாழ்த்து மழை
இந்த தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் கோமதி பிரியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. "உழைப்புக்கு கிடைத்த வெற்றி", "மீனாவுக்கு இது பெரிய முன்னேற்றம்", "தமிழில் இருந்து மலையாளம் வரை பயணம் பாராட்டுக்குரியது" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications