சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சொன்ன விஷயம்.. கதறி அழுத விஜயா! ரோகிணி போட்ட டீல், சிக்கும் மனோஜ்! ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 25ஆம் தேதி காண எபிசோடில், சாமியார் சொன்ன விஷயத்தை கேட்டு பயத்தில் இருக்கும் விஜயாவிற்கு சிந்தாமணி சில விஷயத்தை சொல்ல அதை கேட்டு விஜயா பதறி அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜிடம் பேசும் ரோகிணி, டைவர்ஸ் கொடுக்க ஒரு கண்டிஷன் உடன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், விஜயா வீட்டுக்கு வந்து பூஜை பண்ணிய பெண் சாமியார் மீனாவால் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மீனாவை இந்த வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்ல, அதை உண்மை என நம்பி விஜயாவும் பதறிப் போய் இருக்கிறார். அந்த போலி சாமியாரை வீட்டுக்கு அனுப்பியது வேறு யாருமில்லை சிந்தாமணி தான். ஆனால் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரியாது. அவர் தன் தாலிக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்.

சிறடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் (Siragadikka Aasai serial Feb 25, 2026 episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா சோகமாக இருக்க எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்லும் விஜயா மீனா இங்கே இருந்தால் என்னுடைய தாலிக்கு தான் ஆபத்து அவளை உடனே வெளியே அனுப்புங்க என ஒற்றைக்காலில் நிற்கிறார்.
விஜயா பேசியதை கேட்டு மீனா கண்ணீர் விட்டு அழுகிறார். தன் மனைவியை வெளியே அனுப்ப சொல்லும் விஜயாவிடம் அந்த பெண் சாமியார் ஒரு டுபாக்கூர் அவர் சொல்வதெல்லாம் நடக்காது என்று சண்டை போடுகிறார். அப்போது அங்கிருந்து மனோஜ் அதெல்லாம் இல்லை ஒரு நாள் அந்த சாமியார் தன்னுடைய ஷோரூமுக்கு வந்திருந்ததாகவும் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் புட்டு புட்டு வைத்ததாகவும் சொல்கிறார்.
சிந்தாமணி சொன்ன விஷயம்
இதையடுத்து ரூமுக்குள் செல்லும் விஜயாவுக்கு சிந்தாமணியிடமிருந்து ஃபோன் வருகிறது. அப்போது விஜயா அழுதுகொண்டே வீட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறார். உடனே சிந்தாமணியும் அய்யய்யோ அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க அவங்க சொன்னதை லேசாக நினைக்காதீங்க, முதலில் அந்த மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் வேலையை பாருங்க என தன் பங்கிற்கு ஏற்றி விடுகிறார்.
விஜயாவிடம் நல்லவள் போல் வேஷம் போடும் சிந்தாமணி, அவரை நாளைக்கு நான் சொல்லும் கோயிலுக்கு வாங்க அப்பதான் அந்த சாமியாருடைய அருமை உங்களுக்கு தெரியும் என்று சொல்கிறார். விஜயாவும் நான் வருகிறேன் என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார். மறுபுறம் மீனாவும் ரூமுக்குள் சென்று சோகமாக நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் போய் பேசும் முத்து, என்ன யோசிச்சிட்டு இருக்க என கேட்க அதற்கு மீனா தனக்கு குழப்பமாக இருப்பதாக சொல்கிறார்.
முத்து கொடுத்த அட்வைஸ்
அந்த சாமியார் சொன்னதை நம்புவதா இல்லை வேண்டாமான்னு தெரியல என்று மீனா சொல்ல, அதெல்லாம் நம்பாத அது பிராடு பொம்பள என்று முத்து அட்வைஸ் பண்ணுகிறார். நம்ம கல்யாணத்தில் நடந்தது, நம்ம வீட்டில் நடந்தது என எல்லாத்தையும் அவங்க கரெக்டா சொன்னாங்க இல்ல, அதனாலதான் மாமாவை பத்தி சொன்னதும் நடந்திருமோ என எனக்கு பயமாக இருக்கிறது என்று மீனா வருத்தப்படுகிறார். அதற்கு முத்து இந்த விஷயம் எல்லாம் பக்கத்து வீட்டுல விசாரிச்சா கூட அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த மாதிரி பட்டவங்க அப்படி தெரிஞ்சுக்கிட்டு தான் வந்து நம்ம கிட்ட பேசுவாங்க என்று சொல்கிறார்.
மனோஜ் சொன்ன விஷயம்
இதையடுத்து விஜயாவின் ரூமுக்கு சென்ற மனோஜ், ஒரு நாள் அந்த சாமியார் தன் ஷோரூம்-க்கு வந்த விஷயத்தை சொல்கிறார். அங்கு வந்து தனக்கு இரண்டாவது கல்யாணம் ஆகும் என்று அவர் சொன்னதாக சொல்ல, உனக்காவது நல்லதா சொல்லி இருக்காங்களே என விஜயா கூற, ஐயோ அம்மா அவங்க எனக்கு இரண்டாவது கல்யாணமும் ரோகிணியுடன் தான் ஆகும் என சொன்னார் என்பதை கூறுகிறார்.
மனோஜ் சொன்னதே கேட்டு ஷாக் ஆகும் விஜயா, அந்த மாதிரி நடக்க நான் ஒருபோதும் விடமாட்டேன் என்று கத்துகிறார். அவங்க சொன்னது நடக்கக்கூடாது அதை நீ தான் எப்படியாவது தடுத்து நிறுத்தணும் என விஜயாவிடம் மனோஜ் கேட்க, அதற்கு விஜயா, டேய் மனோஜ் முதல்ல நான் என் தாலியை காப்பாத்திக்குறேன், அதுக்கப்புறம் உன்னுடையதை பார்க்கலாம் என்று சொல்கிறார்.
ரோகினியின் நாடகம்
பின்னர் இரவில் போன் பார்த்துக் கொண்டிருந்த மனோஜ்-க்கு ரோகினியிடமிருந்து கால் வருகிறது. அதை எடுத்து அவர் பேச ரோகிணி சிவராத்திரி என்கிற பாடலை பாடி மனோஜை கடுப்பேத்துகிறார். பின்னர் நீ என்னதான் என்னை மயக்க நினைத்தாலும் நான் உன் பக்கம் வரமாட்டேன் என்று மனோஜ் அதிர்ச்சி கொடுக்கிறார். அவரிடம் நான் உனக்கு டைவர்ஸ் கொடுக்க ரெடி, ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது. நான் சொல்லும் இடத்திற்கு நீ தனியாக வரவேண்டும் நீ அங்கு வரும் விஷயத்தை உன்னுடைய அம்மாவுக்கும் சொல்லக்கூடாது. அங்கு வந்தால் உனக்கு நான் டைவர்ஸ் கொடுத்து விடுகிறேன் என ரோகினி சொல்ல, மனோஜும் அந்த டீலுக்கு ஓகே சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications