Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: கோர்ட்டில் இருந்து தப்பித்த ரோகிணியின் அடுத்த நாடகம்! திருந்தாத விஜயாக்கு மீனா கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 பிப்ரவரி 11ஆம் தேதி எபிசோடில், மனோஜ் - ரோகிணி டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் மனோஜ் தரப்பு சாட்சிகளை ரோகிணி விசாரித்து அவர்களை சிக்க வைத்திருக்கிறார்.

அதாவது சாட்சி சொல்ல, முத்து ரோகிணி தோழி வித்யாவையும், கறிக்கடை மணி என்பவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார். ரோகிணிக்கு எதிராக பேசலாம் என்ற நம்பிக்கையோடு வந்த இந்த இரண்டு சாட்சிகளிடம், ரோகிணி குறுக்கு விசாரணை நடத்துகிறார்.அந்த விசாரணையில் ரோகிணி ஒரே ஒரு முக்கியமான பாயிண்டில் அவர்களை சிக்க வைத்து விடுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

( Siragadikka Aasai Serial February 11 Episode Update) மனோஜின் போனில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை கறிக்கடை மணிக்கு அனுப்பியதை ஆதாரமாக காட்டி, அதையே கோர்ட்டில் திருப்பமாக பயன்படுத்துகிறார். இந்த ட்விஸ்டால் மனோஜ் தரப்பு சாட்சிகள் இருவரும் திக்குமுக்காடி போகிறார்கள்.

ரோகிணி காட்டிய ஆதாரத்தை பார்த்த நீதிபதி, மனோஜ் தரப்பு வக்கீலிடம் நீங்கள் கொண்டு வந்த இந்த இரண்டு சாட்சிகளும் செல்லாது என கூறுகிறார். அதற்கு மனோஜ் தரப்பு வக்கீல், ரோகிணி தான் மனோஜின் போனில் இருந்து பணத்தை அனுப்பி இருக்கிறார் என்று வாதிடுகிறார். அதற்கு நீதிபதி, அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார். ஆனால் மனோஜ் தரப்பில் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிய வர, நீதிபதி இந்த வழக்கில் தனக்கு நிறைய குழப்பம் இருப்பதாக கூறுகிறார். அதனால் இந்த கட்டத்தில் தீர்ப்பு வழங்காமல், இருவரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்ப உத்தரவிடுகிறார்.

இதற்குப் பிறகு கோர்ட் வாசலில் விஜயா தனது குடும்பத்தாரோடு நின்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ரோகிணி, விஜயாவிடம், நான் உங்களை கும்பிட்டு கேட்டுக்கிறேன். என்னையும் மனோஜையும் சேர்ந்து வாழ விடுங்க என்று ரோகிணி கூறுகிறார். அதைக் கேட்ட விஜயா, அது உன் கனவுல கூட நடக்காது டி என்று கோபமாக கத்துகிறார்.

ரோகிணி சவால்

அதற்கு ரோகிணி, நடக்கும் ஆண்ட்டி. கடவுள் இருக்கான். நாங்க நிச்சயம் சேர்ந்து வாழ்வோம். அதை நீங்க பார்க்க தான் போறீங்க என்று சவால் விடுகிறார். இதைக் கேட்ட விஜயா, என்னடி சவால் விடுறியா என்று கேட்கிறார். அதற்கு நீங்க எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க ஆண்ட்டி என்று சொல்லிவிட்டு ரோகிணி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

இதற்குப் பிறகு வீட்டுக்கு வரும் விஜயா, ரோகிணியை நினைத்து கோபத்தில் திட்டுகிறார். எவ்வளவு திமிரு இருந்தா என்கிட்டயே சவால்விட்டுட்டு போறா என்று பேசுகிறார். அப்போது அங்கிருந்த மனோஜையும் திட்டுகிறார். உனக்கு அறிவு இருக்கா இல்லையா, உன் போனை எடுத்து காசு அனுப்பிருக்கா, அதுகூட தெரியாம இருக்க அடி முட்டாளா நீ என்று கோபமாக பேசுகிறார். அதற்கு மனோஜ், அவ ஆர்டர் கொடுத்த மேனேஜருக்கு பணம் அனுப்பனும்னு சொன்னா அதை நம்பி தான் நான் போனை கொடுத்தேன். அவ இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்லம்மா என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை சொல்கிறார்.

விஜயா கோபம்

இதன்பின்னர் விஜயா, மனோஜிடம் முதலில் ரோகிணியோடு சேர்ந்து பிசினஸ் பண்ணுவதை நிறுத்தச் சொல்கிறார். அவளை உன்னோட கடையிலிருந்து விரட்டிவிடு என்று கூறுகிறார். அதற்கு மனோஜ், அவ இல்லைனா ஆர்டர் கைவிட்டு போயிடும். அப்புறம் எப்படி நான் கடனை அடைப்பேன் என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி, இந்த ஆர்டரை நம்பி தான் இன்னும் கொஞ்சம் கடன் வாங்கிய விஷயத்தையும் வெளிப்படுத்துகிறார். இதைக் கேட்ட விஜயா கோபத்தில் மனோஜை அடிக்கிறார். அப்போது முத்து, அண்ணாமலை, ரவி ஆகியோரும் மனோஜை திட்டுகிறார்கள்.

உடனே விஜயா முத்து மீனாவை சாடையாக திட்ட தொடங்கி விடுகிறார். இதனால் கோபமான மீனா நாங்க செய்யற வேலை ஒன்னும் மோசமானதோ கேவலமானதோ இல்ல, பூ கட்டி வித்தா கூட நல்ல நிலைமைக்கு வந்துடலாம் என்று சொல்ல, அதுதான் நீ இன்னும் வரலையே என்று விஜயா கேட்க, நான் கண்டிப்பா ஒரு நாள் நல்ல நிலைமைக்கே வருவேன் என்று மீனா சவால் விடுகிறார். இவ்வளவு பட்டும் விஜயா திருந்தாமல் மீனாவை மீண்டும் அசிங்கப்படுத்தியே பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக அன்று இரவு ரூமில் தனியாக தூங்கிக்கொண்டிருக்கும் மனோஜ், தூக்கத்தில் ரோகிணி பெயரை சொல்லி புலம்புகிறார். அந்த சத்தம் கேட்டு விஜயா ஓடி வந்து பார்க்கிறார். மனோஜ், ரோகிணி பெயரை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு விஜயா மீண்டும் கோபமாக அவரை அடிக்கிறார். இந்த சத்தம் கேட்டு மீனாவும் எழுந்துவிடுகிறார்.

மனோஜ் கடன்

அப்போது மனோஜிடம் எவ்வளவு கடன் வாங்கிருக்க என்று விஜயா கேட்கிறார். அதற்கு அவர் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறேன் என்று சொல்கிறார். அந்த 7 லட்சம் பணத்தை நான் சிந்தாமணியிடமிருந்து வாங்கித் தருகிறேன். அதை அவ மூஞ்சில தூக்கி எறிஞ்சு, இனி கடைக்கு வரக்கூடாதுனு சொல்லிடு என்று விஜயா கூறுகிறார்.

மேலும் சிந்தாமணியிடம் இருந்து கடன் வாங்கும் விஷயம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் விஜயா கூறுகிறார். ஆனால் இந்த எல்லா விஷயங்களையும் வெளியே இருந்து மீனா ஒட்டுக்கேட்டுவிடுகிறார். பின்னர் படுக்கைக்கு சென்ற மீனாவிடம் முத்து என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு மீனா நடந்த எல்லா விஷயங்களையும் முத்துவிடம் சொல்கிறார். அந்த சிந்தாமணியை நம்புனா என்ன ஆகும்னு நமக்கு தெரியும், ஆனா அவங்களுக்கு புரியமாட்டேங்குது என்று மீனா வேதனையோடு சொல்கிறார்.

மறுநாள் ஷோரூமுக்கு வரும் ரோகிணியை உள்ளே விடாமல் சந்தோஷும், ஜீவாவும் தடுத்து நிறுத்துகிறார்கள். உடனே ரோகினி இது என்னோட கம்பெனி நீங்க உள்ள போக கூடாதுன்னு சொன்னா நான் வேற மாதிரி பண்ணுவேன் என்று போனை எடுத்து வீடியோ எடுக்கிறார். உடனே சந்தோஷ் பதறி போய் என்னமா பண்ற என்று கேட்க, நீங்க என்னிடம் கராஸ் பண்ணுனீங்கனு இந்த வீடியோவை நான் போலீஸிடம் காட்ட போறேன் என்று மிரட்டி விட்டு உள்ளே போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+