சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஜீ தமிழ் கதாநாயகியும் வருகிறாரா? மீனா வெளியிட்ட க்யூட் புகைப்படம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதில் கோமதி பிரியாவோடு ஜீ தமிழ் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகையும் இணைந்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்து வருகிறது. தமிழில் டாப் 10 சீரியல்களிலும் மூன்றாவது இடத்தில் இந்த சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர். அந்த வரிசையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் மீனாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மீனா கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள டப்பிங் சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கோமதி பிரியா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். தான் செல்லும் இடங்கள் மற்றும் சூட்டிங் ஸ்பாட்டிலும் அடிக்கடி ரிலீஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறார். அதிகமாக தன்னோடு நடிக்கும் நடிகர்களோடு ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கோமதி பிரியா வெளியிட்டு வருகிறார்கள்.
இது இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கும் நடிகையோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதுதான் எப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எவ்வளவு ரசிகர் இருக்கிறார்களோ அதுபோல ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் அந்த சீரியலின் கதாநாயகி சக்திக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். அவர்கள் இப்போது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் இவர்கள் இருவரும் ஒரே சீரியலில் நடிக்கப் போகிறார்களா? என்று கேள்விகளை குவிக்கிறார்கள்.
அதிலும் மீனா சிறகடிக்க ஆசை சீரியல் கெட்டப்பில் இருக்கிறார், சக்தி மீனாட்சி பொண்ணுங்க சீரியல் கெட்டப்பில் இருக்கிறார் அதனால் இவர்கள் இருவரின் சீரியலும் ஒரே இடத்தில் சூட்டில் நடந்திருக்குமோ அங்கு தான் இவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்து இருப்பார்களோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது.
ஆனால் இவர்கள் இருவரும் நாங்கள் நெருங்கிய தோழிகள் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம் என்று இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள். இதை பார்த்ததும் ரசிகர்கள் விஜய் டிவியும் ஜீ தமிழில் ஒன்றாய் சேர்ந்து இப்படி அழகில் கொள்ளுறாங்களே என்று கமெண்டுகளை தெறிக்க விடுகிறார்கள். அதுபோல இந்த இரண்டு சீரியலின் மகா சங்கமம் போட்டால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சேனல் தரப்பிற்குள் தான் போட்டிகள் இருக்கிறதே தவிர நடிகர்களுக்குள் எந்த போட்டியும் இல்லை என்று இவர்களுடைய க்யூட்டான புகைப்படங்கள் சொல்கிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications