சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த அம்மா.. கோபத்தில் விஜயா! முத்து கண்டுபிடிக்கும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணியின் மகன் கிரிஷ் விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. கிரிஷ் பாட்டி மருத்துவமனையில் இருந்து காணாமல் போனது, முத்து மற்றும் மீனாவை ஒருபுறம் குழப்பத்தில் ஆழ்த்த, மறுபுறம், விஜயாவின் ஆவேசமான பேச்சு, குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Siragadikka aasai serial vijay tv

கிரிஷை வெளியேற்றும் ரோகிணி

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணியின் அம்மா, கிரிஷ் விஷயத்தை வீட்டில் சொல்ல சொல்கிறார், இதனால் ரோகிணி மிகவும் கோபப்படுகிறார். "இந்த விஷயத்தை சொன்னால் என் வாழ்க்கை என்ன ஆகும்?" என்று கேட்டு, அம்மாவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்கிறார். கிரிஷ்-ஐ வெளியேற்றும் வழியைப் பார்க்கச் சொல்லி, கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

காணாமல் போன அம்மா

மறுநாள் காலையில், முத்துவும், மீனாவும் கிரிஷ் பாட்டியை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரத் தயாராகிறார்கள். கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காமல் விஜயா திட்டிக் கொண்டிருக்கும்போது கிரிஷ் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆகிறான். அண்ணாமலை மற்றும் ரவியிடம் இருந்து பரிசுகள் வாங்குகிறார். ரோகிணிக்கு மட்டும் முத்தம் கொடுத்து, விஜயாவை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். பின்னர், விஜயாவையும் சமாதானம் செய்து, முத்தம் கொடுக்கிறார்.

மருத்துவமனைக்குச் சென்ற முத்துவும், மீனாவும், கிரிஷ்-ஐ அழைத்துச் செல்லத் தயாராக, அங்கே ரோகிணியும் வர, அவர் மறைந்து கொள்கிறார். ஆனால், கிரிஷ் பாட்டி, அங்கு இல்லை. ரிசப்ஷனில் விசாரித்தபோது, அந்த அம்மா பணத்தைக் கட்டி டிஸ்சார்ஜ் செய்துவிட்டதாகச் சொல்கின்றனர். இதைக் கேட்டு ரோகிணியும் அதிர்ச்சியில் நிற்கிறார். மருத்துவமனை முழுவதும் தேடியும், கிரிஷ் பாட்டி கிடைக்காததால், கிரிஷை வீட்டிற்கு அழைத்து வர முத்துவும், மீனாவும் முடிவெடுக்கின்றனர்.

விஜயாவின் ஆவேசம்

ரோகிணி தனது ஷோரூமில் கவலையாக அமர்ந்திருக்க, அவரது சித்தியிடம் இருந்து அம்மா குறித்து விசாரிக்கும் போது அவர் அங்கே வரவில்லை என்று சொல்கிறார். அப்போது, கடையின் ஊழியர் ஒருவர், "என் பாட்டி இறந்துவிட்டார்," என்று விடுமுறை கேட்கிறார். "நல்லாதான் இருந்தாங்க, திடீரென காணாமல் போய்ட்டாங்க. கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னாங்க," என்று அவர் சொல்ல, இதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

வீட்டில், கிரிஷ் மீண்டும் வந்ததற்கு விஜயா திட்டுகிறார். "அம்மா ஃபாரீன் ஓடி போய்ட்டா, பாட்டி நம்ம தலையில் கட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டா," என்று ஆவேசமாக விஜயா பேச, குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். விஜயாவின் இந்த ஆவேசமான பேச்சு, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+