சிறகடிக்க ஆசை: சூழ்ச்சியில் சிக்கும் மீனா.. காப்பாற்ற வரும் சிந்தாமணியின் கணவர்.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா சிந்தாமணியின் சூழ்ச்சியால் சிக்குகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக சிந்தாமணியின் கணவர் மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பைனான்ஸ்காரர் வீட்டில் பணம் வாங்குவதற்காக மீனா தன்னுடைய தம்பியோடு அங்கே போய் நிற்கிறார். பிறகு தான் பூ ஆர்டர் எடுத்து டெக்கரேஷன் செய்து வருவதாகவும் அதற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணம் வேணும் என்று கெஞ்சி கேட்கிறார். அதோடு தான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், தன்னுடைய குடும்பத்தை பற்றியும் மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அந்த நபர் சத்யாவிடம் தம்பி நீ நல்லா படிச்சு குடும்பத்தை பாத்துக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார். பிறகு பணத்தை எடுத்துட்டு வந்து மீனாவிடம் கொடுத்து ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையில் முன்னேறனும் என்பதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறது அதற்காகத்தான் நான் உனக்கு உதவி செய்கிறேன். இந்த பணத்திற்கு நீ வட்டியே தர வேண்டாம், நீ தான் ரெண்டு நாளில் எனக்கு பணம் தரேன்னு சொல்லி இருக்க அதனால் வச்சுக்கோ என்று சொல்கிறார்.

அதோடு நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் உதவி செய்வேன். நீ நல்லா வரணும் என்று ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டு மீனாவை அனுப்பி வைக்கிறார். அப்போது அங்கு சிந்தாமணி தன்னுடைய மகளோடு இருக்கும் போட்டோ காட்டப்படுகிறது. மீனா போவதை நின்று சிந்தாமணியின் கணவர் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு போகிறார்.

அதைத் தொடர்ந்து மீனா டெக்கரேஷன் வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கிறார். பிறகு செல்பி எடுத்து சந்தோஷப்படுகிறார். அதைத் தொடர்ந்து முத்துவுக்கு போன் பண்ணி வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சி என்று சொல்லி விடுகிறார். அப்போது முத்து வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சிந்தாமணியின் ஆள் அங்கு வந்து இதையெல்லாம் பார்த்துவிட்டு சிந்தாமணியிடம் போய் அந்த பொண்ணு சொன்ன மாதிரியே ஆர்டர் முடிச்சிடுச்சு, செல்பி எடுத்து ரொம்ப சந்தோஷப்படுறாங்க என்று சொல்ல அதற்கு ஒரு நாள் தான் அவ சந்தோஷப்படுவா, பட்டுட்டு போகட்டும் என்று சொல்கிறார்.

ஆனால் அப்போதும் அவருடைய பிளானை பற்றி சொல்லாமல் இருக்கிறார். அதைத்தொடர்ந்து இரவு முத்து மீனாவிற்கு வீடியோ கால் செய்கிறார். அப்போது மீனா ஆர்டரை செஞ்சு முடிச்சதுக்கு ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் மீனா மண்டபத்திற்கு சென்று மேனேஜரிடம் எனக்கு இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்று சொல்லிவிட்டு நீங்க மீதி பணத்தை வாங்க வந்தேன் என்று சொல்ல, அந்த நபர் என்னமா சொல்லுற நீ விளையாடுறியா நீ தான் அன்னைக்கே மொத்த பணமும் தந்தா தானே ஆர்டர் செய்வேன்னு சொன்ன அதனால தானே மொத்த பணத்தையும் தந்தேன் என்று சொல்கிறார்.

இல்லை சார் நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் 25 ஆயிரம் மட்டும் தான் நீங்க தந்தீங்க அதற்காகத்தான் கையெழுத்து வாங்கினீங்க. மீதி பணத்த ஆர்டர் முடிச்சது வாங்கிக்கோன்னு சொன்னீங்க என்று சொல்ல, அந்த நபர் இப்படித்தான் நீ எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கிறியா? நீ சரியான திருட்டு பொம்பளையா இருக்க. பொம்பளைகளை கூட வச்சுக்கிட்டு இந்த மாதிரி ஏமாற்றி பிழைக்கிற என்று அசிங்கமாக பேச மீனா கோபப்பட்டு கத்துகிறார்.

அப்போது அங்கு வந்த நபர்கள் அந்த நபர் காட்டிய பத்திரத்தை பார்த்துவிட்டு நீ மொத்த பணத்தையும் வாங்கிட்டேன்னு தானே கையெழுத்து போட்டு கொடுத்திருக்க என்று சொல்ல அதற்கு மீனா என்ன இவர் மேல இருந்த நம்பிக்கையில படிக்காமல் கையெழுத்து போட்டுட்டேன் என்று சொல்கிறார். ஆனாலும் அந்த நபர் நீ ஏமாத்துற என்று சொல்லி மீனாவை அங்கிருந்து வெளியே பிடித்து தள்ளுகிறார்.

இதையெல்லாம் பார்த்து சிந்தாமணி சிரித்துக் கொண்டிருக்கிறார். பிறகு வேறு வலியில்லாமல் அழுது கொண்டே வண்டியை தள்ளிக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி விஜயாவுக்கு போன் பண்ணி இனி மீனா எந்த ஆர்டரும் எடுக்க மாட்டா. அவளால இனி இந்த வேலையை பார்க்கவே முடியாது என்று சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+