சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து முன்னேறும் முத்து, மீனா.. விஜயா செய்த சம்பவம்.. மனோஜ்க்கு செம அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரைக்கும் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் புதியதாக எடுத்து இருக்கும் முயற்சியை பார்த்து விஜயா பொறாமைப்படுகிறார். அதே நேரத்தில் எத்தனை பிரச்சனையில் சிக்கினாலும் திருந்தாத மனோஜ், முத்து மீது தன்னுடைய வன்மத்தை கொட்டுகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஏமாற்றம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் முத்து மற்றும் மீனாவிற்கு மட்டும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் குறித்து அதிகமான நெகட்டிவ் கமெண்ட் இருந்தது.

Siragadikka aasai serial vijay tv

அதனாலேயே இந்த சீரியலில் கதை இப்போது மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது முத்துவும் மீனாவும் அடுத்தடுத்து முன்னேறுவது போன்று கதை பயணிக்கிறது. மீனா புதியதாக டெக்ரேஷன் செய்வதற்கு தொடங்கி இருக்கிறார். அதற்கு சிந்தாமணி என்ற பெண் எதிரியாக வந்து இருக்கிறார். ஆனாலும் மீனா தான் எடுத்த ஆர்டரை செய்து முடித்து இருக்கிறார்.

சிந்தாமணி விஜயாவோடு சேர்ந்து பிளான் போட்டு மீனாவை வீட்டை விட்டு வெளியே விடாமல் தடுக்கின்றனர். ஆனாலும் மீனா வீடியோ காலில் தன்னுடைய வேலை ஆட்களிடம் சொல்லி டெக்ரேஷன் பணியை சிறப்பாக முடித்துவிட்டார். அதேபோல முத்து புதியதாக டிரைவிங் ஸ்கூல் தொடங்குகிறார்.

Siragadikka aasai serial vijay tv

இந்த வாரத்தில் இனி என்ன நடக்கப்போகிறது என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவும் மீனாவும் சொன்னது போலவே டிரைவிங் ஸ்கூல் திறக்கிறார்கள். அதற்கு அண்ணாமலை டிரைவிங் ஸ்கூல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கான போர்ட் பலகையை வீட்டு வாசலில் மாட்டுகிறார்கள். இதை பார்த்ததும் விஜயா பொறாமைப்படுகிறார்.

அப்போது நாங்க உங்க பெயரை ஷோரும்க்கு வைத்ததற்காக இவன் அப்பா பெயரை வச்சிருக்கான் என்று போட்டுக் கொடுக்க விஜயா வழக்கம் போல முகத்தை திருப்பிக் கொண்டு நிற்கிறார். அப்போது மீனா அண்ணாமலையிடம் மாமா நீங்க தான் ஆரத்தி எடுத்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை கூப்பிடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் விஜயா நான் வரமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார். பிறகு அண்ணாமலை நம்முடைய பையன் அடுத்தடுத்து நல்லபடியாக முன்னேறனும் என்று நல்ல எண்ணத்தில் வந்து ஆரத்தி எடு என்று கூப்பிட்டு ஆரத்தி எடுக்க வைக்கிறார். ஏற்கனவே மனோஜ் தன்னுடைய ஷோருமுக்கு ஜிஎஸ்டி கட்டாததால் ஜிஎஸ்டி ஆபிஸர்ஸ் கடைக்கு வந்து மிரட்டி இருக்கிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்குள் பணம் தரவில்லை என்றால் நாங்கள் ஷோரூமை சீல் வைத்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்கள். எத்தனை பிரச்சனைகளில் மாட்டினாலும் திருந்தாத மனோஜ் மீண்டும் மீண்டும் புது பிரச்சனையில் தான் மாட்டிக்கொள்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் இந்த முறை மனோஜை காப்பாற்றுவதற்காக ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை பேங்க் எடுத்துட்டு வர சொல்லி அதை விற்று ஜிஎஸ்டி கட்டுகிறார். இதனால் ரோகிணி மீது மனோஜ் காதல் மழை பொழிகிறார். ஆனாலும் தற்போது வெளியான ப்ரோமோவில் முத்துவின் வளர்ச்சியை பார்த்து பொறாமையை கொட்டுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+