சிறகடிக்க ஆசை: முத்துவை பார்த்து பீல் பண்ணும் விஜயா.. அருணுக்கு வந்த பிரச்சனை, சந்தோஷத்தில் மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 13ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவை நினைத்து விஜயா முதல் முறையாக ஃபீல் பண்ணுகிறார். விஜயாவின் மனமாற்றத்தை பார்த்து முத்து சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில் அருணுக்கு பெரிய பிரச்சனையும் வருகிறது.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா மனதை மாற்றுவதற்காக நான் சாமியார மீட் பண்ணலாம்னு இருக்கேன் அதுக்கு உனக்கு சம்மதமா? என்று ரோகிணி கேட்க, மனோஜ் சரி என்று சொல்கிறார். பிறகு இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் ரவி ரூமில் இருக்கும் போது ஸ்ருதி ரெஸ்டாரண்டுக்கு பெயர் வைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரவி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

Siragadikka aasai serial vijay tv

உண்மையை உடைத்த முத்து

ஒரு கட்டத்தில் ரவி குழந்தை பற்றி பேச அதற்கு குழந்தையை தத்தெடுக்க போறேன் என்று சொன்னதற்கு ரவி ஹேப்பி என்று சொல்ல எனக்கு இந்த பெயரே ரெஸ்டாரண்டுக்கு ஓகே என்று ஸ்ருதி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வர எதுக்காக இப்படி குடிச்சிட்டு வந்து இருக்கீங்க கோபப்படா அதற்கு முத்து திருடனை பிடித்த விஷயத்தை பற்றியும் அருண் தானே எல்லாம் செய்ததாக நல்ல பேர் வாங்கியது பற்றியும் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

மீனா சொன்ன வார்த்தை

அதற்கு மீனா நீங்க இவ்வளவு பெரிய வேலை பண்ணி இருக்கீங்க ஆனா அதை எதற்காக அவர் மறைத்தார் என்று தெரியலையே... சரி காலையில் பேசிக்கலாம் நீங்க போய் படுங்க என்று தூங்க சொல்கிறார். அந்த நேரத்தில் சீதா போன் செய்து என்ன ஆச்சுக்கா என்று விசாரிக்க, அருண் சொன்னதுக்கும் உங்க மாமா சொன்னதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. காலையில் பேசிக்கலாம் என்று சீதா விடவும் மீனா சொல்லிவிடுகிறார்.

முத்து செய்த உதவி

அடுத்த நாள் காலையில் முத்து காப்பாற்றிய பெண்மணி அவருடைய கணவரோடு முத்து வீட்டிற்கு வருகிறார். அவரை விஜயா வரவேற்று வீட்டில் உட்கார வைத்திருக்கிறார். உங்களுடைய பையன் செய்த உதவியால்தான் நான் இன்னைக்கு உயிரோடு இருக்கிறேன் அவருக்கு மரியாதை செய்யணும் என்று அந்த பெண்மணி சொன்னதும் விஜயா மனோஜை கூப்பிடுகிறார். மனோஜ் வந்ததற்கு அந்த பெண்மணி இவர் இல்லை என்று சொல்கிறார்.

முத்துக்கு பாராட்டு

அடுத்ததாக ரவியை கூப்பிடுகிறார் அவரும் இல்லை என்று அந்த பெண்மணி சொல்கிறார். பிறகு நாங்கள் முத்துவை தேடி வந்தோம் என்று அந்த பெண்மணி சொன்னதும் மீனா அவர் என்னுடைய புருஷன் தான் அவர் இப்ப வருவாரு என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார் உன் மகன் என்று சொல்லும் போது முத்து உன்னுடைய பிள்ளை இல்லையா? என்று கோபப்படுகிறார். அந்த நேரத்தில் முத்து வந்து அந்த பெண்ணிடம் நலம் விசாரிக்கிறார்.

சந்தோஷத்தில் அண்ணாமலை

அப்போது அந்த பெண் நீங்க நல்லபடியா ஒரு பையனை பெற்று வளர்த்து இருக்கீங்க என்று விஜயாவையும் அண்ணாமலையையும் பாராட்டுகிறார். அதைக் கேட்டு அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். விஜயா வழக்கம் போல இருக்கிறார். அந்த நேரத்தில் அந்த பெண் திடீரென விஜயாவின் வயிற்றை தொட்டு கும்பிட போக விஜயா எதற்காக என்று கோபப்படுகிறார்.

பீல் பண்ணிய விஜயா

இவ்வளவு ஒரு நல்ல பையனை பெத்த உங்க வயிற்றை தொட்டு கும்பிடணும் என்று சொன்னதும் விஜயா ஃபீல் பண்ணி முத்துவை பார்க்கிறார். அதை பார்த்து மனோஜ் பொறாமையில் கோபப்படுகிறார். பிறகு அவர்கள் எல்லோரிடமும் திருடன் வந்து தன்னை கொல்ல வந்த விஷயத்தையும், முத்து வந்து காப்பாற்றிய விஷயத்தையும் சொல்கின்றனர். இதையெல்லாம் ஸ்ருதி வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் அப்லோடு செய்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அருணுக்கு அதிர்ச்சி சம்பவம்

அந்த வீடியோவை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் அருணுக்கு போன் செய்து நீ அந்த திருடனை ஒரு தனியா பிடிச்சேன்னு சொன்ன, ஆனா அந்த சம்பந்தப்பட்ட பெண் ஒரு டிரைவர் வீட்டுக்கு சென்று அவர்தான் என்னை காப்பாத்துனது என்று அவருக்கு செயின் போட்டு மரியாதை செஞ்சிருக்கு. அந்த வீடியோவை நீ பார்த்தியா? நம்ம டிபார்ட்மெண்டுக்கு ஒருத்தங்க உதவி செஞ்சிருக்காங்கன்னா அவங்களுக்கு நாம தான முதலில் மரியாதை செஞ்சிருக்கணும் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+