சிறகடிக்க ஆசை: முத்துவிடம் கொத்தாக சிக்கும் ரோகிணி? எதிர்பாராத திருப்பம்.. கடும் கோபத்தில் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 14-ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலையின் நண்பர் பரசுராமனின் மகள் காதலித்த நபரோடு வீட்டை விட்டு போய்விட்ட நிலையில் அவருடைய காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் முத்துவும் மீனாவும் இருக்கிறார்கள். அப்போது ரோகிணியின் மாமாவாக நடித்தவரும் அங்கு வருகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி ஸ்ருதியிடம் உனக்கு கார் ஓட்ட தெரியாதுன்னா மீனா கார் ஓட்ட கத்துக்குறாளே அவளையே வேலைக்கு வச்சுக்கோ என்று விஜயா சொன்னதும் அதற்கு ஸ்ருதி மீனா ஒன் ஆப் த கார் ஓனர். அவங்க கத்துக்கிட்டா நாலு பேருக்கு சொல்லிக் கொடுப்பாங்க என்று பதிலடி கொடுக்கிறார்.

பிறகு எல்லோரும் அங்கிருந்து கிளம்பி போகின்றனர். அப்போது மனோஜிடம் ரோகிணி உன் தம்பி முத்து படிக்காதவன் என்று நாமதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம். ஆனால் அவன் எவ்வளவு உஷாரா எல்லாத்தையும் செக் பண்றான் பாரு. ஆனா நீ டேக்ஸ் கூட கட்டாமல் இருக்குற என்று சொன்னதும் அதற்கு மனோஜ் என்னை அவன் கூட கம்பேர் பண்ணாத நான் எவ்வளவோ படித்திருக்கிறேன் என்று கேட்க, படிச்சிருந்தா மட்டும் போதுமா என்று மனோஜ் திட்டி விட்டு போகிறார்.
மறுபக்கத்தில் சீதா ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாமல் வந்து கொண்டிருக்கிறார். அப்போது போலீஸ் நிறுத்தி வைத்து ஹெல்மெட் போடாததால் ஃபைன் கட்ட சொல்கிறார். எப்படி இருக்கீங்க? அம்மா நல்லா இருக்காங்களா? என்று நலம் விசாரிக்க அதைப்பற்றி எல்லாம் எதுவும் பேசாமல் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டிட்டு வந்தது ஆபத்துன்னு உங்களுக்கு தெரியாதா என்று ஸ்ட்ரிக்ட்டாக போலீஸ் அருண் பேசியதும் சீதா அதிர்ச்சியில் இருக்கிறார்.
அப்போது நான் டூட்டியில் இருக்கும் போது எதையும் பார்க்க மாட்டேன். எனக்கு ரூல்ஸ் எல்லாரும் மதிக்கணும் என்று ஃபைன் கட்ட சொல்கிறார். ஆனால் சீதா எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருப்பதை பார்த்து பைன் கட்ட பணம் இல்லையா? நானே கட்டுகிறேன் என்று பணத்தை கட்ட போகிறார். அதனால் கோபமான சீதா நான் கட்டுகிறேன் என்று பணத்தை கட்டி விட்டு கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக அண்ணாமலை வெளியே கிளம்பி கொண்டிருக்கும் போது அங்கு அவருடைய நண்பர் பரசு வருகிறார். அவர் என்னுடைய இரண்டாவது பொண்ணு பவானி ஒரு லெட்டரை எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு ஓடிப்போயிட்டா என்று அழுகிறார். அந்த லெட்டரில் நான் ஒரு பையனை காதலித்தேன். அந்த பையனோடு வாழ விரும்புகிறேன். நீங்க என்ன ஏத்துக்குவீங்கன்னு நம்புறேன் என்று எழுதி வைத்திருக்கிறது.
Top 10 Serials: இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல்கள்! பரிதாப நிலையில் விஜய் டிவியின் டாப் சீரியல்
அதை முத்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பரசுராமன் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்கு முடிவு பண்ணி இருந்தேன், அதற்குள் இப்படி பண்ணிட்டா என்று அழுது கொண்டிருக்க, அதற்கு முத்து நீங்க மாப்பிள்ளை பார்ப்பதற்கு முன்னாடி பவானியிடம் பேசினீங்களா? உனக்கு யாராவது புடிச்சிருக்கா என்று கேட்டீர்களா என்று கேட்க, அவர் இல்லை என்று சொல்கிறார்.
மொத்தமாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி- பாக்கியா.. பக்கத்தில் யாரு பாருங்க! இது செமையா இருக்கு
அதற்கு முத்து கல்யாணம் பண்ணிக்க போறது அந்த பொண்ணு தானே அவங்ககிட்ட விருப்பம் கேட்க வேண்டியது பெற்றோர் கடமை. என் பொண்ணு என்னுடைய பேச்சை மீற மாட்டா என்று நீங்களா நினைச்சுட்டு இருக்கீங்க அவங்களுக்கும் நல்லது கெட்டது தெரியும். அவங்களுக்கு எது பிடிக்கும் யாரு பிடிக்கும் என்று முதலில் நாம் பேசி இருக்கணும் என்று அட்வைஸ் செய்கிறார்.
அப்போது பரசுராமன் அண்ணாமலையிடம் நல்ல வேளை உனக்கு பெண் குழந்தைகள் பிறக்கல நீ புண்ணியம் பண்ணியிருக்க என்று சொன்னதும், அதற்கு விஜயா எனக்கு பிறந்து இருந்தாலும் நான் இப்படி தருதலையா வளர்த்திருக்க மாட்டேன் என்று சொல்கிறார். அதற்கு முத்து நீங்க வளர்த்த மனோஜ் ஓடுகாலியா மேடையில் இருந்து ஓடலையா என்று கேட்டதும் விஜயா கோபப்படுகிறார்.

பிறகு பவானி பற்றி விசாரிப்பதற்காக அவர் வேலை செய்த மெடிக்கலுக்கு முத்துவும் மீனாவும் போகிறார்கள். அங்கு இருந்த பெண்ணிடம் முத்து போலீஸ் ஆபீஸர், உண்மையை சொல்லவில்லை என்றால் நீங்க ஸ்டேஷனுக்கு வரணும் என்று மீனா மிரட்டியதும் அந்தப் பெண் பவானி யாரை காதலித்தார், எங்கு இருக்கிறார் என்று தகவல்களை சொல்லி விடுகிறார்.
மறுபக்கத்தில் பவானி காதலித்த பையனின் வீட்டில் அவருடைய அம்மா அழுது கொண்டிருக்கிறார். அங்கு மலேசியா மாமாவாக நடிக்க ரோகிணி கூட்டிட்டு வந்த கறிக்கடைக்காரர் பிரவுன்மணியும் இருக்கிறார். அவர் பவானி வீட்டில் போய் பேசலாம் என்று கிளம்புகிறார். அதே நேரத்தில் பரசுராமன் வீட்டிற்கு சென்ற முத்து நீங்க கவலைப்பட வேண்டாம். அவங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கல எப்படியும் அவங்களை அழைத்து வந்து விடுவோம் என்று நம்பிக்கை கொடுக்கிறார். அந்த நேரத்தில் பிரவுன் மணி பரசுராமன் வீட்டிற்கு வருகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications