சிறகடிக்க ஆசை: சிந்தாமணியை சிக்க வைத்த மீனா.. கடைசியில் நடந்த செம சம்பவம்.. உண்மை உடைபட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 14ஆம் தேதிக்கான எபிசோடில் தன்னை ஏமாற்றிய சிந்தாமணியை மீனா பிளான் போட்டு சிக்க வைத்திருக்கிறார். மீனாவுக்காக சீதா மற்றும் ஸ்ருதி உதவி செய்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவிடம் வேலைக்கு பார்த்த பெண்கள் ஹாஸ்பிடலுக்கு போகவேண்டும் பணம் இருக்குமா என்று கேட்க, மீனா எனக்கு இன்னும் மண்டபத்தில் இருந்து காசு வரல ஆனா நீங்க ஹாஸ்பிடலுக்கு போகணும் என்பதால் என் கூட வாங்க என்னுடைய அம்மா கிட்ட வாங்கி தரேன் என்று சொல்ல, அந்த பெண் வேண்டாம் நாங்க ஏதாவது நகையாக வைத்து பணத்தை வாங்கிக்கிறோம் என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனா சொன்ன வார்த்தை

அதற்கு மீனா நம்ம மாதிரி உள்ளவங்க ஒரு பொட்டு நகை வாங்குறதுக்கே அவ்வளவு கஷ்டப்படணும் அதில் வாங்கிய நகையை வைக்க வேண்டாம். வாங்க நான் உங்களுக்கு எப்படியாவது பணம் வாங்கி தரேன் என்று தன்னுடைய அம்மா வீட்டிற்கு கூட்டிட்டு போய் அங்கு சீதா மற்றும் அம்மாவிடம் பணத்தை வாங்கி மீனா கொடுத்து அவர்களை அனுப்புகிறார்.

பிறகு சீதா மீனாவின் அம்மா மண்டபத்துக்காரரிடம் எப்படி பணத்தை வாங்குவது என்று கேட்க, அதற்கு மீனா நான் ஒரு பிளான் வச்சிருக்கிறேன் அதுபடி செஞ்சா போதும் கண்டிப்பா அந்த மேனேஜர் சிக்குவார். இந்த சிந்தாமணி தான் நம்மை ஏமாற்ற சொன்னது என்ற உண்மையும் வெளியே வரும் என்று சொல்கிறார்.

மீனாவின் பிளான்

அதற்கு சீதா என்ன பிளான் அக்கா சொல்லு நாங்களும் உனக்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறார். உடனே மீனா ஒரு மண்டபத்துக்காரருக்கு போன் செய்து சிந்தாமணியின் நம்பரை வாங்கி சீதாவை வைத்து போன் செய்ய சொல்கிறார். சீதா தனக்கு தெரிந்த ஒரு ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் பங்க்ஷன் நடக்க போகுது பெரிய மண்டபத்தில் வைத்து கல்யாணம் நடக்கப்போகிறது.

ஏமாற்றிய சீதா

நான் உங்கள தான் சொல்லி இருக்கிறேன் என்று சொன்னதும் அதை சிந்தாமணி நம்பி விடுகிறார், ரெண்டு மூணு லட்சத்தில் ஆர்டரை முடிச்சிடலாம் உனக்கு கமிஷன் தரேன் என்று சீதாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சீதா நான் பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுறேன் என்று சொல்லி போனை கட் பண்ணுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபத்தில் ஸ்ருதி

அதை தொடர்ந்து மீனா நான் இன்னொரு பிளான் வச்சிருக்கிறேன் அதை வைத்து தான் அந்த மேனேஜரை சிக்க வைக்க முடியும் என்று சீதாவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு ஸ்ருதியை சந்தித்து நடந்த விஷயங்களை சொன்னதும் ஸ்ருதி கோபப்படுகிறார். உங்களை இப்படி ஒருத்தன் ஏமாற்றி இருக்கிறான் என்றால் நாம போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்ல, நான் எனக்கு தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டேன் அவர் இதை வச்சு ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு என்று நான் இதற்கு இன்னொரு பிளான் வைத்திருக்கிறேன் என சிந்தாமணியின் குரலில் மேனேஜரிடம் பேச சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

உண்மை உடைபட்டது

மீனா நான் சொன்னது போலவே மேனேஜரிடம் சிந்தாமணி பேசியது போலவே ஸ்ருதி பேச அதை உண்மை என நம்பும் மேனேஜர் எல்லா விஷயங்களையும் உளறி விடுகிறார். கடைசியாக மீனாவை ஏமாற்றிய பணம் என்னிடம் வந்துவிட்டது அதை உங்ககிட்ட எங்க வந்து தர என்று கேட்க, அதற்கு கோவிலுக்கு வாங்க என்று சொல்கிறார்.

சிக்கிய சிந்தாமணி

பிறகு சிந்தாமணிக்கு சீதா போன் போட்டு நான் பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட பேசிட்டேன். அவங்க உங்களுக்கு அட்வான்ஸ் தர சொல்லி இருக்காங்க நீங்க கோவிலுக்கு வாங்க என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் சிந்தாமணியும் கோவிலுக்கு வந்திருக்கிறார் மேனேஜரும் வந்து நிற்கிறார். அப்போது நடந்த விஷயம் தெரியாமல் இருவரும் மீனாவை ஏமாற்றியது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

மாட்டிவிட்ட மேனேஜர்

கடைசியாக நானே உனக்கு போன் பண்ணி வீட்டுக்கு வந்து பணத்தை கொடுத்துட்டு போனு சொல்லணும்னு இருந்தேன் என்று சிந்தாமணி சொல்ல, நீங்க தானே போன் பண்ணி என்னை கோவிலுக்கு வரச் சொன்னீங்க என்று மேனேஜர் சொல்கிறார். நான் போன் பண்ணவே இல்லையே அப்போ யாரு போன் பண்ணி இருப்பா என்று சிந்தாமணி கேக்க, நாங்க தான் போன் பண்ணுனோம் என்று சீதாவும் மீனாவும் மறைந்திருந்த இடத்திலிருந்து வருகிறார்கள்.

மண்டபத்து ஓனர் கேட்ட கேள்வி

அதேபோல மண்டபத்து ஓனரும் இவர்கள் பேசியதெல்லாம் மறைந்திருந்து கேட்டு விட்டு வெளியே வருகிறார். பிறகு மண்டபத்து ஓனர் மேனேஜரை அடித்து நீ இப்படித்தான் என்னை இவ்வளவு நாளா ஏமாற்றிக்கொண்டு இருந்தாயா? எதுக்காக இப்படி பண்ணுன என்று கேட்க, மேனேஜர் சிந்தாமணி சொல்லி தான் நான் இப்படி எல்லாம் செய்தேன் என்று உண்மைகளை சொல்லி விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அவமானப்பட்ட சிந்தாமணி

கடைசியாக மண்டபத்து ஓனர் சிந்தாமணியை திட்டுகிறார். நீயெல்லாம் பெரிய மனுசியா இப்படித்தான் வளர்ந்து வர்றவங்கள அழிச்சு நீ மேல வந்து இருக்கியா? இதுபோல இனி நடந்துக்கிட்டா அவ்வளவுதான் என்று வார்னிங் கொடுத்து விட்டு கிளம்புகிறார். சிந்தாமணி மொத்தமாக மாட்டி அவமானப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+