சிறகடிக்க ஆசை: மீனாவிடம் சிந்தாமணியின் கணவர் சொன்ன வார்த்தை.. விஜயாவை மாட்டி விட்ட முத்து.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 15ஆம் தேதிக்கான எபிசோடில் சிந்தாமணி பற்றிய மொத்த உண்மைகளையும் மீனா சிந்தாமணியின் கணவரிடம் சொல்கிறார். அதற்கு அவர் மீனாவுக்கு சப்போர்ட் செய்கிறார். அதுபோல முத்துவிடம் நடந்த விஷயங்களை சொன்னதும் முத்து எதிர்பார்க்காத செயலை செய்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோவிலில் வைத்து சிந்தாமணியிடம் மண்டபத்து ஓனர் இனி என் கண்ணு முன்னாடி வந்துராத என்று திட்டுகிறார். வளர்ந்து வரும் ஒரு பெண்ணையே இப்படி அழிக்க நினைக்கிறியே நீ எப்படி இந்த தொழிலில் இருக்கேன்னு நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டுவிட்டு மேனேஜரையும் இனி மண்டபம் பக்கம் வந்துராத என்று திட்டி விட்டுப் போகிறார்.

அவமானப்பட்ட சிந்தாமணி
மீனாவை பாராட்டி விட்டு அவர் போனதும் மீனா சிந்தாமணியிடம் நீயும் வாழு அடுத்தவங்கள வாழ விடு. நான் மட்டும்தான் இந்த தொழிலில் இருப்பேன் என்று இன்னமும் என்னை அழிக்க எதுவும் பிளான் போடாதீங்க என்று சொல்ல அதற்கு சீதா உங்களையும் அந்த ஓனர் ஒரு அடி விட்டிருக்கணும் அப்பதான் திருந்துவீங்க. எங்க அக்கா இடத்தில் நான் இருந்திருந்தால் நான் அடிச்சிருப்பேன் என்று கைய ஓங்க சிந்தாமணி கோபப்படுகிறார்.
அடிக்க போன சீதா
அதற்கு நீங்க எங்களை வளர விடாம அடிக்கும்போது உங்களை அடிக்கிறது தப்பு கிடையாது. ஆனா அவங்க அளவுக்கு நாங்க இறங்கி போக மாட்டோம் என்று சொல்லிவிட்டு சீதாவும் மீனாவும் அங்கிருந்து வருகிறார்கள். பிறகு பணம் கொடுத்து உதவிய பைனான்சியர் வீட்டிற்கு வந்து மீனா பேசப்போக அங்கிருந்த நபர் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார்.

பைனான்சியர் செய்த செயல்
அப்போது பைனான்சியர் மீனாவை உட்கார வைத்து நடந்த விஷயங்களை கேட்கிறார். மீனா சிந்தாமணி என்ற பெண் தான் எதிரியாக நினைத்துக் கொண்டு இப்படி எல்லாம் செஞ்சாங்க என்று எல்லா விஷயத்தையும் சொன்னதும் பைனான்சியர் உனக்கு இனி எவ்வளவு பணம் வேணும்னாலும் என்கிட்ட வந்து வாங்கிக்க. எவ்வளவு பெரிய ஆர்டர்னாலும் நீ வேண்டான்னு சொல்லாத எல்லாத்தையும் எடுத்து செய் என்று அனுப்பி வைத்துவிட்டு சிந்தாமணி தன்னுடைய மகளோடு இருக்கும் போட்டோவை பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருக்கிறார்.

முத்துவுக்கு தெரிந்த உண்மை
அதைத் தொடர்ந்து மீனா டீக்கடையில் சத்யாவோடு டீ குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நடந்த விஷயத்தை முத்துவிற்கு ஃபோன் போட்டு சொல்ல முத்து ஆச்சரியப்படுகிறார். இந்த நேரத்தில் நானும் உன் கூட இல்லாமல் போயிட்டேனே என்று சொல்கிறார். பிறகு நல்ல வேளை தான் நான் இல்ல நான் இருந்திருந்தால் இந்த விஷயம் வேற மாதிரி போயிருக்கும் ஆனா நீ இதை சாமர்த்தியமா கையாண்டு பணத்தையும் வாங்கி இருக்க என்று முத்து பாராட்டுகிறார்.
வீட்டுக்கு வந்த முத்து
பிறகு மீனா வீட்டில் இருக்கும் போது முத்து சந்தோஷமாக வீட்டிற்கு வருகிறார். கையில் மாலையும் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு வருகிறார். அண்ணாமலையிடம் எனக்கு நல்லபடியா சவாரி முடிஞ்சிடுச்சு நான் கேட்ட பணத்தை விட அவங்க கூடுதலாவே பணம் தந்திருக்காங்க என்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.
அண்ணாமலைக்கு தெரிந்த உண்மை
அதோடு மீனாவை சிலர் வளர விடாமல் தடுக்குறாங்க, வீட்டுக்குள் இருக்கிறவர்களும் தான் சேர்த்து தான் என்று சொல்ல விஜயா அப்படியே ஏமாற்றத்தில் இருக்கிறார். பிறகு மீனாவிற்கு நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லியுள்ளதும் அண்ணாமலை ஆச்சரியப்படுகிறார். அப்போது மீனாவிற்கு முத்து மாலை போட்டு சந்தோஷப்பட இந்த விஷயத்தை நீ ஏன்மா என்கிட்ட சொல்லல என்று அண்ணாமலை கேட்கிறார்.

மீனாவிற்கு பாராட்டு
அதற்கு ஸ்ருதி எனக்கு தெரியும் அங்கிள் நான்தான் அந்த அம்மா மாதிரி பேசி அந்த மேனேஜரை ஏமாற்றினேன் என்று சொல்ல ரவி இவ்வளவு விஷயம் நடந்திருக்கா வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு மீனா அண்ணி தான் முன்மாதிரி என்று சொல்ல அதற்கு மனோஜ் இதெல்லாம் பெரிய விஷயமா இதற்கு முதலில் பத்திரத்தை படித்து பார்த்துட்டு கையெழுத்து போட்டு இருந்தா இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காது என்று ஓவராக சீன் போடுகிறார்.
மனோஜ்க்கு நோஸ்கட்
அதற்கு முத்து நீ பெரிய அறிவாளி அதனால்தான் வீடு வாங்குறேனு 30 லட்சம் ஏமாந்து போன அதை இன்னும் உன்னால திருப்பி வாங்க முடியல. ஆனா மீனா 2 லட்சம் ஏமாந்துட்டான்னு அதை ரெண்டு நாளில் வாங்கிட்டா என்று சொல்கிறார். அதனால் மனோஜ் கோபப்பட ரவி உனக்கு இதெல்லாம் தேவையாடா என்று கேட்கிறார். பிறகு முத்து எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்க விஜயா எனக்கு வேண்டாம் என்று பிகு செய்கிறார். பிறகு எல்லோரும் போனதும் விஜயா கோபமாக யோசித்து கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications