சிறகடிக்க ஆசை: முத்துவின் திமிரால் வந்த சிக்கல்.. சத்யா செய்த செயல்.. மீனாவுக்கு தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 16ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் குடித்துவிட்டு அருண் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார். அதை சத்யா பார்த்து விடுகிறார். பிறகு முத்துவால் மீனாவிற்கு அவமானம் வருகிறது, என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவின் நண்பர்கள் முத்துவை கூட்டிக்கொண்டு அருண் வீட்டிற்கு வந்து அலப்பறை செய்ய, அருண் அதை வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சத்யாவும் அவருடைய நண்பர்களும் அங்கு வருகின்றனர். சத்தியா என்ன ஆச்சு என்று கேட்க, கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி சிலர் அலப்பறை பண்ணிட்டு இருக்காங்க என்று சொன்னதும் சத்யா முத்து நிற்பதை பார்த்து மீனாவுக்கு போன் போட்டு சொல்கிறார்.

மீனாவுக்கு தெரிந்த உண்மை
அதோடு நான் மாமாவை கூட்டிட்டு வரேன்னு சொல்ல, மீனா வேண்டாம் விடு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார். பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது மீனா குடித்துவிட்டு வந்ததை பார்த்து திட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே லைசன்ஸ் போனதால எனக்கு கஷ்டமா இருக்கு என்று முத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு சார் ஏதோ போலீஸிடம் பேசி வாங்கி தரேன்னு சொன்னாரு அப்புறம் எதுக்கு நீங்க அருணோட வீட்டுக்கு போய் இப்படி ஒரு பிரச்சனை பண்ணி வச்சிருக்கீங்க, இதனால புதுசா என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு தெரியல.
மீனா கொடுத்த அட்வைஸ்
ஏற்கனவே அந்த அருண் உங்க மேல கோபமா இருந்தாரு, இப்போ கோபம் இன்னும் அதிகமாய் இருக்கும் என்று சொன்னதும், எனக்கு லைசன்ஸ் இல்ல அதனால வேலை வெட்டி இல்ல என்று முத்து குழம்பிக் கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் முத்து வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது விஜயா வந்து சிரிக்கிறார். அண்ணாமலை மற்றும் மீனா வந்து நிற்க மீனா என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார்.
அதிர்ச்சியில் விஜயா
அதற்கு முத்து நான் வீட்ல சும்மா தானே இருக்கேன், அதனால இதை செய்றேன் என்று சொன்னதும் அதுதான் வீடு பெருக்கிட்டானே இனி துணி துவைக்கட்டும் உன்னுடைய டிரஸ் இருந்தா எடுத்து வந்து கொடு என்று சொன்னதும் மீனா கோபப்பட்டு முத்து கையில் இருந்த துடைப்பத்தை வாங்கி விசிறி அடிக்க, விஜயா பயந்து விடுகிறார். பிறகு அண்ணாமலை விஜயாவை திட்டி அனுப்புகிறார். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் மனைவி போன் போட்டு வீட்டுக்கு வா மீனா என்று கூப்பிடுகிறார்.
ரோகிணிக்கு புது பிரச்சனை
மீனா அங்கிருந்து கிளம்பியதும் அண்ணாமலை முத்துவிற்கு அட்வைஸ் செய்கிறார். பிறகு சிட்டி ரோகிணிக்கு போன் போட்டு வர சொல்கிறார். அந்த நேரத்தில் சிட்டியும் ரோகிணியின் பிஏவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் பண விஷயமாக பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணி அங்கு வந்ததும் ஒளிந்து கொள்கிறார்.
ரோகிணிடம் சிட்டி திருடன் ஒருவன் கொடுத்த செயினை கொடுத்து இது ரொம்பவும் பழமை வாய்ந்தது, வெளியே கொடுத்தால் மூன்று லட்சம் போகும் நான் உங்களுக்கு ஒரு லட்சத்துக்கு தரேன் என்று சொல்வதும் ரோகிணி சந்தோஷப்படுகிறார். அதோடு என்கிட்ட இப்போ பணம் இல்லை என்று விஜயா சொல்கிறார். அதற்கு சிட்டி அவர்களுக்கு டைம் கொடுக்கிறேன் அதற்குள் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications