சிறகடிக்க ஆசை: சீதா செய்த செயலை பார்த்து கண்கலங்கிய மீனா.. திமிரு காட்டிய அருண்.. முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா மீண்டும் முத்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது முத்து சந்தோஷத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் சீதா வீட்டிற்கு போன மீனா அங்கு கண்கலங்கி அழுது இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து கவலையுடன் வீட்டிற்கு வந்து சாப்பிட எதுவும் இருக்கா என்று பார்க்க, அங்கு தோசை இருக்குறது. அதோடு அங்கிருந்த குழம்பை டேஸ்ட் செய்து பார்க்க மீனா வைத்தது என்று முத்துக்கு தெரிகிறது. இதனால் மீனா மீனா என்று முத்து கூப்பிட அதை பார்த்த மீனாவும் ஸ்ருதியும் ரூமுக்குள் சிரித்துக்கொண்டிருக்கின்றனர். பிறகு நீங்க சொன்ன மாதிரியே முத்து உங்களுடைய சமையலை கண்டுபிடிச்சிட்டாரு என்று ஸ்ருதி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

பிறகு முத்து கூப்பிட்டதும் மீனா வெளியே வர மீனாவை பார்த்ததும் நீ முன்னாடியே வர வேண்டியதுதானே என்றுமுத்து கேட்க, நீங்கதான போக சொன்னீங்க என்று மீனா சொல்கிறார். சீதாவுக்கு எனக்கு தெரியாம கல்யாணம் செஞ்சு வச்சிட்டியே என்று முத்து மீனாவை தலையில் கொட்டி விடுகிறார். நீங்க குடிச்சிட்டு வந்தீங்களா? என்று மீனா கொட்ட இருவரும் மாறி மாறி கொட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த சத்தம் கேட்டு எழுந்து வரும் ஸ்ருதி இதை பார்த்தது சிரித்துக் கொண்டே ரூமுக்குள் சென்று ரவியிடம் இவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு என்று சொல்லிவிட்டு அவருடைய தலையிலும் அதே போல கொட்டி விளையாடுகிறார். ஆனால் ரவி அதெல்லாம் சரி தான் எனக்கெல்லாம் இந்த கொட்டு செட்டாகாது கோபம் வரும் என்று சொல்லிவிட்டு ஸ்ருதியை அமைதியாக படுக்க சொல்கிறார்.
பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து இவ்வளவு நல்லவராக இருக்கிறார் ஆனால் ஆன்ட்டி எதுக்காக அவரை எப்பவும் திட்டிக்கிட்டே இருக்காங்க என்று கேட்க, சின்ன வயசுல இருந்து அம்மா அவன் மேல கோபத்தை தான் காட்டுவாங்க. ஆனா அவங்களுக்கும் சேர்த்து அப்பா அவன் மேல பாசம் காட்டுவாரு. முத்து ரொம்ப நல்லவன். டக்குனு கோபப்படுவான் ஆனா பிறகு சமாதானம் ஆகிடுவான் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் மீனா சமைத்துக் கொண்டிருக்கும் போது சீதா போன் செய்து தனக்கு விருந்து ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்கிறார். அதோடு மாமாவும் நீயும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் என்று சொல்ல, மீனா தயக்கத்துடன் அவரிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். பிறகு மீனா முத்துவிடம் உங்களையும் அருண் கூப்பிட்டாரு என்று சொல்ல உண்மையிலேயே அவனுக்கு அந்த எண்ணம் இருந்தால் என்க்கு போன் பண்ணி கூப்பிட்டு இருப்பான்.
நான் வரல நீ போயிட்டு வா. நான் வந்தால் அவன் ஏதாவது சொல்லுவான். மனுஷக்கு எப்பவும் ஒரே போல இருக்க முடியாது. திடீர்னு எனக்கு கோபம் வரும் நானும் ஏதாவது சொல்லிடுவேன். அதனால உங்க எல்லாருக்குமே தர்ம சங்கடமா ஆகிவிடும். அதனால நீ சந்தோஷமா போயிட்டு வா நான் எதையும் நினைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு தனக்கு சவாரி இருப்பதாக கிளம்பி விடுகிறார்.
பிறகு மீனா, அம்மா, சத்தியா மூன்று பேரும் சீதா வீட்டிற்கு விருந்திற்கு போகின்றனர். அங்கு சீதாவின் அம்மா எல்லாரையும் வரவேற்று முத்து வரலையா என்று கேட்க, மீனா அவர்களுக்கு சவாரி இருக்கிறது என்று சொல்கிறார். பிறகு எல்லாருக்கும் சீதாவின் மாமியார் சாப்பாடு பரிமாறுகிறார். மீனாவின் அம்மாவிடம் ஒவ்வொன்றாக அது வேண்டுமா? இது வேணுமா? என்று கவனிப்பதை மீனா பார்த்கொண்டேண்டே இருக்கிறார். அப்போது சீதாவும் அவருடைய மாமியாரும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றனர், அருணும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து மீனா கண் கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications